கீழ்மையான மேல்மட்டம்!!!
வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே ஒரு படு சுட்டியான சிறுவன். அவன் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் விளையாட விடுவதே ஒரு கீழ்மையான செயல் என நினைப்பவர்கள் சமுதாயத்தின் மேல்மட்டங்களில் வாழ்ந்தனர். அப்படி ஒருவர்தான் துர்காதாஸ்.அவர் தன் வீட்டு பெண் குழந்தைகளை கோஷாவுக்குள் வளர்த்தார். தன் வீட்டு பெண்களை பிற ஆண்கள் பார்க்க முடியாது என்று ஜம்பம் அடிப்பார். அந்த சிறுவனுக்கு இது பிடிக்கவில்லை. துர்காதாஸின் பெண் குழந்தைகளுடன் விளையாட கிராம பெண் குழந்தைகள் மட்டும் அவர் வீட்டுக்கு செல்லலாம். ஒரு நாள் புதிதாக ஒரு பெண் குழந்தை வந்தாள். தான் நெசவாளர் பெண் என்றும் கிராமத்துக்கு புதிது என்றும் சொன்னாள். அந்த ஜமீன்தாரின் பெண் குழந்தைகளுடன் நன்றாக விளையாடினாள். வீட்டு பெண்களுடன் நன்றாக பேசினாள். நாள் முழுக்க ஆடலும் பாடலும் வித விதமான கிராமத்து விளையாடல்களுமாக கழிந்தன. அன்று மாலை துர்காதாஸின் கண் முன்னாலேயே அந்த புதிய பெண் குழந்தையை தன் அலங்காரங்களை கலைத்து கொண்டு தனது சகோதரன் அழைத்த போது ஓடி சென்ற போதுதான் துர்காதாஸுக்கு புரிந்தது. அது அவள் அல்ல அவன். அந்த சிறுவனேதான்