Posts

Showing posts from February, 2017

விரல்கள்

விரல்கள் விரல்கள் ஈர்ப்பவை! விரல்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. நான் சந்திக்கின்றன மனிதர்களின் கண்களுக்கு பிறகு விரல்களையே அதிகம் நோட்டமிடுகிறேன். எத்தனை வித விதமான விரல்கள்; சிசுவின் பஞ்சு விரல்கள், கன்னம் கிள்ளும் கள்ளியின் பன்னீர் பூ விரல்கள், விரலிடையில் நுழைந்துக்கொள்ளும் காதல் வழியும் விரல்கள், புணர்ச்சியின் உச்சத்தில் முதுகையழுத்தும் காமம் சொரிக்கும் விரல்கள், உதட்டு ரேகையை அளக்கும் அழகான விரல்கள், குட்டையான விரல்கள், உருளை வடிவ விர ல்கள், நீண்ட நெடும் முருங்கையை போன்ற விரல்கள், சுருக்கங்கள் நிறைந்து காணப்படும் விரல்கள், எசகு பிசகாய் கடித்து குதறி வைக்கப்பட்ட நகங்கள் கொண்ட விரல்கள், அழகாய் செப்பனிடப்பட்ட மெடிக்கயூர் விரல்கள், நகப்பூச்சு பூசப்பட்ட இடது கை பெருவிரல், ஒன்று விட்டு ஒன்றாக வெவ்வேறு வண்ண பூச்சுகள் பூசப்பட்ட விரல்கள், அருகில் அமர்ந்திருக்கும் தோழியின் என்டர் தட்டும் சுட்டுவிரல், ஸ்பேஸ் பார் தட்டும் பெருவிரல், கதவின் இடையில் சிக்குண்டு நீலமேறிய நகக்கண்ணுடைய விரல்கள், அழுக்கு நிறைந்த நக இடுக்கைக்கொண்ட விரல்கள், நகச்சுற்று வந்து ச

LipStick பெண்கள்

LipStick பெண்கள் ஒரு மாத கால அகமதாபாத் வாழ்க்கையைப் பற்றி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். "அங்கல்லாம் லிப்ஸ்டிக் போடாம ஒரு பொம்பளைகளும் வெளிய வரமாட்டாங்களே???" - இது அம்மா. ஆம், அங்கு மேக்கப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் அதிகம்தான். ஒரு கோட்டிங் மேக்கப், லிப்ஸடிக் இல்லாமல் யாரும் வெளியே வரமாட்டார்கள். வெகு சிலரை தவிர பெரும்பாலானோர்க்கு அது பொருந்தியும் போகும் என்பதுதான் ஹைலைட். நம்மூர் பெண்கள் மேக்கப் போட்டால் கல் தூணுக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி இருக்கும்; ஏன ெனில் பொதுவாகவே நமது ஸ்கின் டோன் அப்படி. அதற்கு தகுந்த மாதிரி போட்டால் தான் அழகாக இருக்கும். ஆனால் நம் பெண்கள் அப்படி செய்யாமல் சும்மா அள்ளி அப்பி விடுகிறார்கள். அது நாரகசமாகி விடுகிறது. மேலும் நமது பெண்களுக்கு மேக்கப் தேவையுமில்லை என்றே தோணுகிறது. பாண்ட்ஸ் பவுடரையோ, ஸ்பின்ஸ் பவுடரையோ லேசாக போட்டுக்கொண்டு; நெற்றியில் கோபி பொட்டையோ, நடுவில் கல் வைத்த நெளிவு பொட்டையோ வைத்து, ஸ்டெப் வைத்து புடவை கட்டாது சிங்கிள் ப்ளோட்டில் விட்டு, லூஸ் ஹேரில் வருவது நம் பெண்களுக்கு அத்தனை அம்சமாய் பொருந்தி போகும். அத

பரோட்டா

பரோட்டாவுக்கும் எனக்குமான பந்தம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. குறிப்பாக பள்ளி பருவத்தில் மாதமொருமுறை என்ற அளவில் இருந்தது, பின்னாளில் வாரமொருமுறை என்றாகி போனது. என்னதான் மைதா உடலுக்கு தீங்கானது என்றாலும், அது செய்யப்படும் முறையை பார்த்தால் தொண்டைக்குழிக்குள் இறங்காது என்று இருந்தாலும் அந்த பரோட்டாவின் மீது பெரும்பாலானோருக்கு ஒரு ஸாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யும். இப்போதெலாம் அதிகம் பரோட்டாக்கள் சாப்பிடுவதில்லை. உடல்நலனில் திடீரென்று அக்கறை பொத்துக்கொண்டு வந்துவிட்டதா என் றுக்கேட்டால் அப்படியெலாம் எதுவுமில்லை. தோணவில்லை அவ்வளவுதான். சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வேறெதுவும் கண்முன் வந்தாடாது, வண்டி நேரே சென்று நிற்குமிடம் 'நியூ சுவை' புரோட்டா ஸ்டால். சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று என் முன் பிச்சு போட்ட நான்கு பரோட்டாக்கள். "வேறெதுவும் தம்பி"?? "அண்ணே, இதுல சால்னா ஊத்திட்டு; வெங்காயம் அதிகமா ஒரு ஆம்லேட் கொண்டு வாங்கண்ணே"!! சால்னாவில் பரோட்டா உள்நீச்சல் அடித்துக்கொண்டிருந்தது. அதற்குள் வெங்காயம் தலைமையில் ஆம்லேட் வந்து சேர்ந்தது. &

அப்படி போடு போடு

அப்படி போடு போடு சன் டிவியில் 'கில்லி' படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சரியாக 11 ஆண்டுகளுக்கு முன் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் நடந்த சில விஷயங்கள் ஊதுப்பத்தியில் இருந்து கிளம்பும் வாசனையாய் மனதுக்குள் பரவுகிறது. அந்த பள்ளியில் எனக்கு அதுதான் இறுதியாண்டு, ஏனெனில் அங்கு ஐந்தாம் வகுப்பு வரைதான் உண்டு. ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு போய் ஆக வேண்டும். இந்த நிலையில்தான் பள்ளி ஆண்டுவிழா வருகிறது. ஆண்டுவிழாவை விமரிசையாக கொண்டாடி பல வருடங்கள் ஆனதால், இந்த வருடம் சற்றே சிறப்பாக கொண ்டாட திட்டம். பள்ளியில் பெரிய தலை நாம்தான் என்பதால், ஒரு கலக்கல் பெர்பாமன்ஸ் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. 'கில்லி' படம் வந்த சமயம் அது. நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல் "அப்படி போடு போடு". ஒரு மிகுந்த போட்டிக்கிடையே யார் யாருடன் ஆடுவதென்பது முடிவானது. 'சந்திரா' மிஸ் சொல்லிக்கொடுத்த அந்த ஸ்டெப்புகள் எல்லாம் இன்றும் நினைவில் நிற்கிறது . அந்த பாடலின் ஓப்பனிங்கில் ஒரு ஃபாஸ்ட் பீட் வரும், அதற்கென்று ஒரு மூவ்மெண்டை ரொம்ப நாட்கள் தேடி கண்டுபிடித்தோம். அந்த மூவ்மெண்ட்டில் இருந்து ப

'Stayfree' கணவர்

'Stayfree' கணவர் ரயில் பயணங்கள் எப்போதும் நம்மை வெறுங்கையோடு அனுப்பிவிடாது. எவ்வளவு வெறுமையோடு ஏறினாலும் இறங்கையில் நம்மை நிறைத்துதான் அனுப்பும். உடன் பயணிப்பவரிடம் அளவளாவுவது, அவர்களின் வாழ்க்கையை அவர்கூற கேட்டறிவது, தம்பதிகளின் அன்னியோன்யம் இப்படி ஏராளமான விஷயத்தோடுதான் ரயில் நம்மை இறக்கிவிடும். அந்த வகையில், ஒரு சம்பவம். ஒரு கணவன்-மனைவி அவர்களது ஒரு வயது கைக்குழந்தை. அந்த அக்காவிற்கு காலில் எலும்பு முறிவு; பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வைத்து கட்டியிருக்கிறார்கள். நடப்பதற்கு சிரம ம்தான். இந்நிலையில் அந்த அக்கா பாத்ரூம் போக உடன் அந்த கணவரும் துணைக்கு சென்றார். அந்த குழந்தையை என் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தனர். திடிரென்று அந்த கணவர் மட்டும் அவசரமாக வந்தார். வந்து பைக்குள் எதையோ தேடினார். கிட்டத்தட்ட ஒரு 5 நிமிடம் பையைப் போட்டு உருட்டினார். "என்னண்ணே"?-இது நான் "ஒண்ணுமில்லமா எதாவது பேப்பர் இருக்குமானு பார்த்தேன்"- இது அவர். என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது,  "இந்தாண்ணே" என்று காலையில் நான் படித்துவிட்டு வைத்திருந்த ஒரு செய்தித்தாளின் வெ

முதல் சிகரெட்

முதல் சிகரெட் எட்டாம் வகுப்பு படிக்கையிலையே சிகரெட் பிடிக்கும் நண்பர்களை பெற்றிருந்தாலும், அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. கோவில்பட்டியில் கல்லரியிலும் கூட அதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஆனால், மனதின் ஓரத்தில் ஒரு 'இது' இருந்துக்கொண்டேதான் இருந்தது. அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்ற ரீதியில் தான் அனைத்து பழக்கங்களும் ஆரம்பிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிதான் எனக்கும்; பௌர்ணமி இரவு, மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருக்க, குஜராத்தின் Rann of Kutch 'White Desert'ல்  கால்கள் உப்பின் உள்புதைய நடந்துக்கொண்டிருக்கிறோம். உடலை ஊடுருவும் குளிர்; கிட்டத்தட்ட 10 டிகிரி இருக்கும். மூச்சுவிட்டால் புகையாய் பறக்கும் நிலை. அந்த நொடியில் தோன்றியதுதான் "இப்ப ஏன் ஒரு தம்மடிக்க கூடாது??" (ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்!!) உடனே அதற்கு ஒரு ஆசானைப் பிடித்து, எனக்கு தம்மடிக்க சொல்லித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முதலில் மறுத்தவன், பின்னர் இதை பழக்கமாக்கி கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் கற்றுத்தந்தான். 1.எச்சில் ப

'அது'

இன்றுதான் 'அதை' இத்தனை அருகில் காண்கிறேன்.. பத்தாம் நாள் பிறைப் போல் வளைந்திருக்கிறது... 'அதை' விரல்களால் இப்படி தீண்டுவேன்  என்று ஒருபோதும் எண்ணியதில்லை.. 'அது' எனக்குள் ஒரு பதட்டத்தை உருவாக்குகிறது.. ஒரு அதிர்வை கடத்திச் செல்கிறது.. ஒரு பயத்தை உண்டு செய்கிறது.. இதழ் பதிக்க முன்னேறுகிறேன், பின் நகர்ந்து விடுகிறேன் இப்படி முன்னும் பின்னுமாய்  அங்கே ஒரு விளையாட்டு அரங்கேறுகிறது.. இறுதியில், உதட்டோடு உதடு பதித்து  விளையாட்டை நானே முடித்து வைக்கிறேன், . . . . . . . . பீங்கான் கோப்பையில் இஞ்சி டீ குடித்த தருணம்!!! -தமிழ்மறவோன்