Posts

Showing posts from April, 2017

அழகப்பன் என்னும் நான்

அழகப்பன் என்னும் நான் ௥ அகமதாபாத் டிரெயினிங் முடியும் தருவாயில் ஒரு மலையாளத்து ஓமணா தோழியாக  அறிமுகமானாள். டிரெயினிங் முடிந்து பணியிடம் போடும்போது அவளுடன் சேர்த்து (எனக்கும்) ஒரு நான்கு பேருக்கு சென்னை கிடைத்தது. சேரநாட்டு நண்பனொருவன் அவளை எனக்கு அறிமுகப்படுத்தி கீழ்கண்டவாறு பறைந்தான் "இவளுக்கும் சென்னைதான் போட்ருக்காங்க, பாத்துக்கடா. அவளுக்கு அங்க யாரையும் தெரியாது".  எதற்கும் தேவைப்படுமே என்று பரஸ்பரம் கைப்பேசி  📱 எண்களை பரிமாறிக்கொண்டோம்.  அந்த பெண் என்னிடம் விதித்த முதல் ந ிபந்தனையே, அவளுக்கு நான் தமிழ் கற்றுத்தர வேண்டும் என்பதுதான்.  சென்னை வந்தாயிற்று.  * ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில், உன் பேர நான் என்னனு சேவ் செய்து வச்சுருக்கு தெரியுமா?? என்னனு? அழகப்பன்! அழகப்பனோ?? ஆமா, அழகப்பன்தான். ஏன் இந்த பேரு? தமிழ்ல எனக்கு இந்த பேரு மேல சால சால இஷ்டம், அதான். சரி, இந்த பேருக்கு மீனிங் தெரியுமா?? ஓ.. அறியும்!! எந்தா அறியும்?? அழகப்பன் என்றால் "Beautiful boy" என்ற அர்த்தமாக்கும். அப்பறம் ஏன் அந்தா பேர எனக்கு வச்சிருக்க??

சென்னை புத்தகச் சங்கமம் 2017

Image
சென்னை புத்தகச் சங்கமம் (ஏப்ரல் 21-25) 0 ஏனோ தெரியவில்லை தீபாவளி, பொங்கல் அளவுக்கு இந்த புத்தக தினமும் என்னுள் மகிழ்ச்சி அலைகளை உண்டாக்கியிருந்தது. பேஸ்புக்கில் நிறைய நண்பர்களின் புத்தக வாசிப்பு தொடர்பான பதிவுகள் வாசித்தது மனநிறைவாக இருந்தது. மேலும், சென்னை புத்தக சங்கமம் என்ற பெயரில் எழும்பூர் பெரியார் திடலில் நடைப்பெற்ற புத்தக காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல முன்னணி பதிப்பகங்கள் 50% கழிவில் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தன. ”முத்தின கத்திரிக்காய் கடைவீதி க்கு வந்துதானே ஆகணும்” என்ற ரீதியில் சில புத்தகங்கள் இருந்தாலும், முத்தினதில் முத்துக்களாய் சிலவும் இருக்கத்தான் செய்தது. அதிலும், ஆங்கில புத்தகம் வாசிப்பவர்கள் தவறவிடக்கூடாத நிகழ்வு இது. 100 ரூபாய்க்கு 3 ஆங்கில புத்தகம் என்ற அறிவிப்பு அட்டையை அநேக இடங்களில் காணமுடிந்தது. நான் வாசகன் என்ற சொல்வதில் எப்போதும் எனக்கு ஒரு கர்வம் இருந்துக்கொண்டே இருக்கிறது. ”அப்படி என்ன பெருசா வாசிச்சு கிழிச்சுட்டேரு”? என்றுக்கேட்டால், ஆம் அப்படியொன்றும் கிழிக்கவில்லை தான். விரல் பிடித்து நடக்கும் குழந்தை, தாயின் வயிற்றின

வாத்தியார்

நண்பர் ஒருவர் தி.ஜா-வின் ’மோகமுள்’ நாவலை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். என் பங்குக்கு நானும் யமுனா துதி பாடிக்கொண்டிருந்தேன். இடையிலையே எப்படி இந்த புத்தகம் அறிமுகம் ஆனது என்ற பேச்சு வந்த போது, எனது பேராசிரிய நண்பர் தான் இதை எனக்கு அறிமுகப்படுத்தினார் என்றேன். அந்த நண்பருக்கு தெரியும், நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன் என்று. இருந்தும் கேட்டார், பிகு, நீங்க பி.இ தான? ஆமாம் தோழர். ஏன்? அப்பறம் எப்படி இந்த புத்தகமெல்லாம் உங்க டீச்சர்ஸ் அறிமுகப்படுத்துறாங்க? அது அப்படித்தான்! இலக்கியம் என்று வாசிக்கத் தொடங்கிய உடன் நான் போய் நின்றது அவரிடம் தான். முதன்முதலில் எனக்கு எஸ்.ரா-வை அவர்தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது அறையில் இருக்கும் புத்தக அலமாரியை சூறையாட என்னை அனுமதித்தார். அதிலிருந்து எடுத்து வாசித்ததுதான் ’கோணல் பக்கங்கள்’. பாடங்கள் பேசியதைவிட எழுத்தையும் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அதிகம் பேசி இருக்கிறோம். ‘கோணங்கி’ குறித்து பேசியதுண்டு, லீனா மணிமேகலையும் வாசித்திருக்கிறோம். ஆ.வி கதைகள் பேசுவோம், கல்குதிரையிலும் பயணிப்போம். ’மோகமுள்’ மீது மோகம் கொண்டது அவரா

அண்ணா நூற்றாண்டு நூலகம்!

அண்ணா நூற்றாண்டு நூலகம்! 0 மெரினா, மால்கள், மகாபலிபுரம். சென்னை வரும் ஒரு குடும்பம் அல்லது கல்வி சுற்றுலா என்ற பெயரில் வரும் மாணவர்கள் பார்க்க விரும்பும் இடங்களாக மேற்கண்டவையே இருக்கின்றன. இவை தவிர்த்து பொழுதுபோக்கிற்காக மேலும் பல இடங்களும் சென்னையில் இருக்கின்றன. ஆனால் என்னுடைய தாழ்மையான கோரிக்கை என்னவென்றால் சென்னை வரும் ஒவ்வொருவரும் சென்னையில் இருக்கும் ஒவ்வொருவரும் தவறாது செல்ல வேண்டிய இடம் ”அண்ணா நூற்றாண்டு நூலகம்”. திமுக ஆட்சியின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், கல்வி சூழலில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த வகையில் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக சென்னை மக்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம். சுமார் 8 தளங்கள், கோடிக்கணக்கான புத்தகங்கள், குளிர்சாதன வசதி, குடிநீர் வசதி, லிப்ட் வசதி என்று அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு ஒரு பொக்கிஷமாக ஓங்கியுர்ந்து நிற்கிறது. அரசு மருத்துவமனையில் கூட இத்தனை பணியாளர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அத்தனை பணியாளர்கள் இருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது பல

காமத்தின்பால் சில கவிதைகள்

காமத்தின்பால் சில கவிதைகள் * - உடன் படுத்தலும் உடன்படுதலும் உடல் படுதலும் காமத்தின் பால் சேரா.. உச்சி முகர்தலும் உள்ள களித்தலும் உடல் பிரிகையில் உயிர் கலத்தலுமே காமமென்பர் அதைக் கண்டுணர்ந்தோர்! * முலைதனில் தொடங்கி யோனியில் முடித்தலது காமமன்று காமமது யாதெனின் , முடிந்தபோது முடியாதென்றிருக்கையில் முகமேந்தி முத்தமிடும் ’ அது ’ தான் காமம்! * களை யிழந்து நிற்கும் என்னறை களைந்து கிடக்கும் என் மெத்தை விரிப்பு சுழன்றடிக்கும் விந்தின் மணம் இவையாவும் , என்னகத்தே நிறுத்தி வைத்திருக்கிறது , நாம் கலந்துக்கிடந்ததை * உடை அவிழ்த்தலும் உடல் அணைத்தலும் உள் நுழைத்தலுமே காமம் என்பர் , மென்பாதம் அதனில் இதழ் பதிக்காதவர். * பெருங்காட்டை விழுங்க நிற்கும் பருந்தொன்று   மயிர் சிரைத்த உன் யோனியின் முன் , அதிகாலை பனியாய் உருகிப் போகிறது! * உச்சத்தின் உச்சந்தனை   தொட்டு திரும்புகையில் இட்டு செல்கிறாய் ஒரு நெற்றி முத்தத்தை , உச்சமைடதலும் துச்சம்தான்! * காதலா , காமமா என்ற தர்க்கத்தில் , காதலின் ஊடாய் காமம் வேண்டும் காமத்தின்பால் காதலும் வேண்டும்! என்று கூறி ம

எஸ்.ராமகிருஷ்ணன்

எல்லோரையும் போல எனது வாசிப்பும் , எட்டாம் வகுப்பு படிக்கையில் ராஜேஷ்குமார் ரமணிசந்திரனில் இருந்தே தொடங்கியது . ஊர்ப்புற நூலகத்தில் இருக்கும் 50,60 ராஜேஷ்குமார் புத்தகங்களும் படித்தாகிவிட்டது . அடுத்ததாக என்னவென்று தேடுகையில் வந்தவர் ’ சுஜாதா ’. அவரை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் சமகால தமிழிலக்கியம் புலப்படத் தொடங்கியது . சரியான வழிகாட்டுதலின்றி கண்டதையும் வாசித்துக்கொண்டிருந்தேன் . 2014- ம் ஆண்டு என்று நினைவு ; நெல்லை புத்தக கண்காட்சி நடந்துக்கொண்டிருந்தது . இலக்கியத்தில் ஆர்வமும் அறிமுகமும் கொண்ட எனது கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் சென்று வாசிப்பதற்கு நூல்களை பரிந்துரைக்குமாறுக் கேட்டேன் . அவர்தான் எனக்கு எஸ் . ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார் . இதனிடையில் ஊர்ப்புற நூலகத்திலே அவரது புத்தகங்களை கண்டுக்கொண்டேன் . அதுவரை வேறொரு வாசிப்பு தளத்தில் இருந்த எனக்கு , இவரது எழுத்துக்கள் முற்றிலும் புதுமையாக இருந்தது . போகிறப்போக்கில் ஒரு பெரிய மாற்றத்தை நம்மில் நிகழ்த்திவிடும்படியான எழுத்து . அடடே .. ஆமால்ல என்று யோச

#வாசகசாலை 5

#வாசகசாலை-யின் எத்தனையாவது நிகழ்வுன்னு-லாம் கணக்கே கிடையாது, ஒரு மாசத்துக்கு பதினொரு இலக்கிய நிகழ்வு நடத்துறாங்க(!!!!). கடந்த இரண்டேகால் வருஷமா நடத்திகிட்டு இருக்காங்க. நீங்களே கணக்கு பண்ணிக்கோங்க மக்கழே இது எத்தனையாவது நிகழ்வு-னு! சரி மேட்டருக்கு வர்றேன், நேத்து அண்ணா நூலகத்துல நடந்த சிறுகதை கலந்துரையாடல் நிகழ்வுல பேசுன மூணு பேருமே ரொம்ப நல்லா பேசுனாங்க. மூணு பேருமே அவங்கவங்க ஸ்டைல்ல அடிச்சு பேசுனாங்க. ஹரிக்கு கொடுத்த கதை புதுமைபித்தனோட கிளாஸிக் “ஒரு நாள் கழிந்தது”. ஹரிக்கு இது முதல் ’இலக்கிய’ மேடைங்கறது பேசுனதுலயே தெரிந்தது, செம்மயா தமிழ் பேசுறாரு, இன்னும் தொடர்ந்து வாசிச்சாருனா இலக்கியமும் அடிச்சு நொறுக்குவாரு. சேகருக்கு கோபிகிருஷ்ணனோட ”ஒரு ரூபாய்க்கு ஒரு கதை”. மூணு கதைல கொஞ்சம் சின்ன கதை, இதுல என்ன பேசிற முடியும்னு நெனச்சன், ஆனா அத உடைச்சு சரியா பேசுனாரு. இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனமா பேசுனா பெர்ஃபெக்ட்-டா இருக்கும். பாதசாரியின் ”காசி”, யார்யா இந்த பாதசாரி எனக்கே தெரிஞ்சுக்கணும் போல இருக்கே-ங்கற மாதிரியான கதை. நல்ல நீள..மான கதை. இந்த கதைப்பத்தி என்ன பே

தண்ணீர் – அசோகமித்திரன்

Image
தண்ணீர் – அசோகமித்திரன் இந்திய இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் எழுத்தாளர் அசோகமித்திரன் . சிறுகதை , நாவல் , கட்டுரை என்று சகலத் துறைகளிலும் தன்னை செலுத்தி வருபவர் . சுதந்திர இந்தியாவிற்கு முன் , 1931 ம் ஆண்டு ஆந்திரபிரதேச மாநிலத்தின் செகந்திரபாத்தில் பிறந்தவர் . கணையாழி இதழில் பணியாற்றிய இவர் பல்வேறு சிறுகதைகளையும் , நாவல்களையும் எழுதியுள்ளார் . கரைந்த நிழல்கள் , 18 வது அட்சக்கோடு , மானசரோவர் , தண்ணீர் என இவர் எழுதிய நாவல்கள் பிரசித்திப்பெற்றவை . ” அப்பாவின் சிநேகிதர் ” என்ற சிறுகதை தொகுதிக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் . ஜெமினி ஸ்டூடியோஸில் பணிபுரிந்த காலத்தில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு எழுதிய , ” கரைந்த நிழல்கள் ” நாவலில் சினிமா உலகின் சாயம் பூசாத வேறொரு முகத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் . ”18 வது அட்சக்கோடு ” நாவலில் அவரது இளமை பருவம் கழிந்த சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திரபாத் நகரை நம் கண்முன் நிறுத்தியிருப்பார் . இந்த நாவலை வாசிப்பதன் மூலம் அந்த காலத்து ஆந்திர மாநிலத்தை தெரிந்துக்கொள்ளலாம் . இவரது இன்னொரு ஆகச்சிறந