Posts

Showing posts from December, 2016

புதுவருடம்

புதுவருடம் ~ புதுவருட பிறப்பிற்கெல்லாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. புதுவருட கொண்டாட்டத்திலும் சிறுவயதிலிருந்தே அவ்வளவாக ஈடுபாடு காட்டமாட்டேன். சரியாக பார்த்தால் இது 5வது வருடம், புதுவருட பிறப்பன்று நான் வீட்டில் இல்லாமலிருப்பது!!  கடைசியாக 12ம் வகுப்பு படிக்கையில் வருடப்பிறப்பிற்கு முதல்நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அம்மாவிடமிருந்து காவி, சுண்ணாம்பு வாங்கி ரோட்டில்  "Happy Newyear" எழுதியதாக நினைவு. கல்லூரி சேர்ந்த பின்னர் விடுதியில் தங்கி படித்ததால் மூன்ற ாண்டுகள் புதுவருடம் பிறந்தது NEC விடுதியில்தான்.. கடந்த வருடம் நானே எதிர்பார்க்காத வகையில் புதுவருடப்பிறப்பன்று 'அலகாபாத்' ரயில் பயணத்தில் இருந்தேன்.  எனக்கான இந்த 2017ன் பிரசவம் நிகழ்வது.. "அகமதாபாத் ரயில் நிலையத்தில்"!! ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து, "புத்தாண்டு வாழ்த்துகளுடன்"!! பிகு_/\_

நானும் அரவிந்த்சாமியும்!!

நானும் அரவிந்த்சாமியும்!! ~ நேற்று எங்கள் வீட்டின் முன் சில சிறுவர்கள் ரோட்டில் செங்கல் வைத்து மூன்று குச்சிகளை நிறுத்தி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவரிலமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, எனது கொசுவர்த்தி சுருள் ஒரு ஏழெட்டு வருடங்கள் பின்னோக்கி சுழன்றது. 8,9,10ம் வகுப்பு படிக்கையில்தான் கிரிக்கெட் பித்து தலைக்கேறியிருந்த சமயம்; வாரயிறுதியில் கிரிக்கெட் மட்டையை நீளவாக்கில் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு கிரவுண்ட் கிரவுண்டாக சுற்றுவோம். அதுவ ும் ஏப்ரல்-மே கோடை விடுமுறையில் அடித்த பூரா வெயிலும் எங்கள் மீதுதான் விழுந்திருக்கும் என்ற வண்ணம் வெயில், வியர்வை, பசி, தாகம் பாராமல் ஆடுவோம். "எட்டாங்கிளாஸ் படிக்கும்போது அரவிந்த்சாமி கலருல இருந்தியேல இப்டி கறுத்துப்போயிட்டியே" என்று எந்தாய் ஆதங்கபடாத நாட்கள் குறைவு. தெருக்களில் செங்கற்கள் வைத்து, ஒன்பிட்ச் கேட்ச் வைத்து, வீட்டிற்குள் த்ரூவாக அடித்தால் அவுட் போன்ற விதிமுறைகளை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே, (அதை ஓனருக்கு தெரியாமல், காலடி ஓசை கேளாமல் சுவரேறி குதித்து எடுப்பது த

பஜன் பஜன் காலை!

பஜன் பஜன் காலை! (18+ இல்ல) இதோ தொடங்கிவிட்டது மார்கழி மாதம்.  மார்கழி மாதம் குளிருக்கானது என்ற பேச்செல்லாம் பழையதாகிவிட்டது. பருவநிலை மாற்றம் என்ற பெயரில் மழை பெய்யும் காலம் குளிர்கிறது, குளிர் காலம் மழை பொழிகிறது. கண்ட கண்ட இடமெல்லாம் பனி உட்புகுந்து, காதுக்குள் ஊசி குத்துவதைப் போல் இறங்கவில்லையென்றால் மார்கழி மாதத்திற்கான மரியாதையே போய்விடும். அத்தகைய மார்கழி மாதத்து மற்றொரு முக்கிய விஷயம், ’பஜனை’. நன்றாக நினைவில் நிற்கிறது, 5 வகுப்பு படிக்கையில் பனி அதிகமாக இருக்கிறது என்ற ு மார்கழி பஜனைக்கு செல்ல வீட்டில் அனுமதிக்கவில்லை. அழுது புரண்டு ’இரண்டு மணிநேரம்’ உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் அனுமதி வாங்கினேன். அன்றுத் தொடங்கி 10 வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்திற்காக ஏங்கி கிடந்தேன். தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 130 நபர்கள் செல்வோம். 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது சீனியர் சிட்டிசன் வரை. தினமும் இரண்டு வீதிகள் வீதம் தியாகராஜநகர், டிவிஎஸ் நகர், திருமால் நகர், மல்லிகா காலனி இன்னும் அதை சுற்றியுள்ள பகுதிகளையெல்லாம் பஜனை பாடல்களை பாடிக்கொண்டே சுற

இயற்கை பேரழிவு

இதுதான் உண்மையான  "இயற்கை பேரழிவு"!!! ----------------------------- கடந்த 2004 சுனாமி ஆகட்டும், தானேவாகட்டும், சென்ற ஆண்டு வந்த சென்னை மழை ஆகட்டும்; இவையனைத்தும் ஒரு வகை என்றால், இன்று வந்த இந்த 'வர்தா' வேறொரு வகை. அவை இயற்கையால் வந்த பேரழிவு, இது இயற்கைக்கே வந்த பேரழிவு!!! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும், அந்த இயற்கை சீற்றத்திலெல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டது மனிதனும், அவனது உடைமைகளும் தான். அதற்காக இயற்கைக்கு அழிவில்லை என்று சொல்லவில்லை. 'தானே' புயலால் இயற்கை பாதிக்கப்பட் டது உண்மைதான்,ஆனால் இந்த அளவு இல்லை என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டின் டிசம்பர் மழையும் அப்படித்தான். ஆனால், இந்த புயல் மொத்தமாய் வாரி சுருட்டி சென்றிருப்பது இயற்கையை. 75% இயற்கைதான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சென்னையின் எந்த ரோட்டிற்கு சென்றாலும் அங்கு குறைந்தது நான்கு மரங்கள் விழுந்துக்கிடக்கும். சேலையை இடுப்பில் தூக்கி செருகிக்கொண்டு மரத்தை இழுத்துக்கொண்டிருக்கும் பெண்களை ஒவ்வொரு தெருவிலும் பார்க்க முடியும். தள்ளாத வயதிலும் அரிவாளால் மரக்கொப்புகளை வெட்டிக்கொண்டிருக்கிறார்

என்று தணியும் காஷ்மீர்?

என்று தணியும் காஷ்மீர்? கடந்த 100 நாட்களாக நாம் ” பாகிஸ்தான் , தீவிரவாதம் , போர் ” போன்ற வார்த்தைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகிறோம் அல்லது கேட்க வைக்கப்படுகிறோம் . இந்த நிலைக்கான மூலப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் , கடந்த ஜுலை மாதம் 8 ம் தேதி புர்ஹான் வானி என்றவரை இந்திய பாதுகாப்பு படை கொன்றது . இவர் யாரென்றால் , இந்தியாவிற்கு எதிராக ஆசாத் காஷ்மீரில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய இந்தியத் தலைவர்களில் ஒருவர் ஆவார் . இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில் , புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் காஷ்மீரி மக்களைக் கவரும் வகையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்தவர் . 9 ஜுலை 2016 அன்று புர்கான் வானியின் சவ ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர் . புர்கான் வானியின் பிணத்தை புதைப்பதற்கு முன்பு , அவரது உடலை பாகிஸ்தான் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது . புர்கான் வானியின் இறப்பின் காரணமாக காஷ்மீரில் கலவரம் பரவியது . காஷ்மீர் சமவெளியில் தொடர் வன்முறை வெட

எனக்கு பிடித்த பச்சை சட்டை

எனக்கு பிடித்த பச்சை சட்டை ~ என்கிட்ட ஒரு பச்சை சட்டை உண்டு. பச்சையென்றால் எந்த மாதிரி பச்சைன்னா, மாடு சாணி போட்டுட்டு அது மேலயே ஒண்ணுக்கு அடிச்சா ஒரு பச்சை வருமே.. அந்த பச்சை. அந்த சட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவா காலேஜுக்கு கிறுக்கன் மாதிரிதான் போவேன், ஆனா அன்னைக்கு இந்த சட்டை போட்டதால கொஞ்சம் டீசண்ட்டா, டக்-இன் பண்ணி, ஷூ போட்டு போயிருந்தேன். போற வழியிலேயே பூரா பயலும் "மச்சான் செமல; பட்டைய கெளப்புதுனு" ஆரம்பிச்சிட்டானுங்க. என்னைய யாராது இப்படி சொன்னாலோ, பாராட்டினாலோ கொ ஞ்சம் பயம் வந்துடும். ஆஹா, இன்னிக்கு என்ன நடக்கப்போவுதோ?? நீதான்ப்பா காப்பாத்தணும்னு முனி மேல பாரத்த போட்டு கிளாஸுக்கு போனேன். அங்க போனா நமக்கு முன்னாடியே சனியன் ஸைடு ஸ்டாண்ட் போட்டு நின்னுட்டிருக்கு. மேட்டர் என்னனா, எங்கிளாஸ்ல படிக்கிற ஒரு பொண்ணும்(!!!) அதே கலர்ல சுடிதார் போட்டு, கிளாஸுக்குள்ள போறதுக்காக பெர்மிஷன் கேட்டு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கு. நானும் போயி வெயிட்டிங்ல ஜாயின் பண்ணிகிட்டேன். உள்ள நுழையவும் பின்னாடி பெஞ்ச்லயிருந்து "ஷ்ஷ்ஷ்" னு எவனோ ஆரம்பிச்சான், நம்மாட்களுக்கு அப்ப

அலட்டல்

நாம் காதலிப்பது அவர்களுக்கு தெரியாதவரைக்கும்  இயல்பாக தான் இருக்கிறார்கள், தெரிந்த உடன் தான் அலட்டல்  அதிகமாகிவிடுகிறது!! # Verified

பிடல் காஸ்ட்ரோ

நான் மரணமடையும் அந்த நாள் தொடங்கி எனது எதிரிகள் வெறுமையை உணர்வார்கள், ஏனெனில் அவர்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது!! -பிடல் காஸ்ட்ரோ

இதுவா அதுவா?

இவைகளிலெது??  என்றுக் கேட்டால், இதுவல்லதது என்று சொல்லிவிடுகிறோம். இதுவா அதுவா?  என்று கேட்கும்பொழுது சற்று திணறித்தான் போகிறோம்!!! -பஞ்சகல்யாணி