Posts

Showing posts from January, 2017

தங்கல்

ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் நமக்கு அத்தனை பரிச்சயமான களம் அல்ல. மசாலா படங்களையும், ஆக்ஷன் படங்களையும் பார்த்து உய்ந்துக்கொண்டிருந்த நமக்கு, கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணோ ஆணோ காலை 5 மணிக்கு எழுந்து ஓடி, பிடித்த சாப்பாட்டை சாப்பிடாமல் தியாகம் செய்து, கடுமையாக பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கிலோ, நேஷனல் கேம்மிலோ தங்கம் வென்று பின்னால் ”ஜனகனமன” ஒலித்தால் போதும் கண்ணில் ஜலம் வச்சுண்டு, நரம்புகள் முறுக்கேற தியேட்டரை விட்டு வெளியே வருவோம். என்னை பொறுத்தவரை தங்கல் ஒரு ச ாதாரண ஸ்போர்ட்ஸ் ஜானர் படம். நம்மூரில் காய்ந்து கிடந்துவிட்டு, வெளிநாட்டினர் லிப் லாக் செய்வதை ஆஆ..வென்று வேடிக்கை பார்ப்பதை போலத்தான் இதுவும். நாம் அதிகம் பார்க்காத ஒன்றை காட்டி உள்ளதால், அது நமக்கு புதியதாய் தோன்றுகிறது. நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு, நம்மால் முடியாததை நம் குழந்தைகளின் மீது திணிப்பது. இதுகுறித்து ஆ..ஊ..வென்று பேசினாலும், இதைத்தான் நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆமிர்கான் அந்த குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். அவர்களை அவர்களாக இருக்கவிடாமல் அவருடைய எண்ணத்தை அவர்கள் மீது திணிக்கிறா

அறம் (உண்மை மனிதர்களின் கதை) - ஜெயமோகன்

அறம் (உண்மை மனிதர்களின் கதை) ஜெயமோகன் ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. ஜெமோவின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எழுத்து என்று எழுதப்படும் அனைத்துமே எழுதுபவரின் கதையோ அவர் பார்த்து, கேட்டு அனுபவித்த கதைகளோ தான். புனைவுகளில் கூட அவர்களது வாழ்வின் அனுபவங்களும், உணர்வுகளும் வெளிப்பட்டுவிடும். தனது சொந்த வாழ்வினூடே தான் அந்த புனைவுலகம் கட்டமைக்கப்படும். மிகுந்த யோசனையோடு தான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். 400 பக்கம் என்பது சற்று மலைப்பாகத்தான் இருந்தது, ’அறம்’ என்ற முதல் கதையின் இரண்டாம் பக்கத்தை தாண்டும்வரை. அதன்பின்னர், அந்த தொகுப்பை வாசிப்பது சுவாசத்தை போல இயல்பாய் நடந்துக்கொண்டேயிருந்தது. இதிலுள்ள ஒவ்வொரு கதை குறித்தும் ஒரு திறனாய்வு கட்டுரை வடிக்கலாம். ஒரு கதை என்பது அது நடந்த காலத்தை பிரதிபலிக்க வேண்டும

உன் பெயரைச் சொல்லவா??

உன் பெயரைச் சொல்லவா?? (குறுங்கதை) ~ எங்களிடம் வார்த்தைகள் இருந்து கொண்டே யிருந்தன; நேரங்காலம் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம். மெரினா, ஸ்பென்சர், பனகல் பார்க் என்று எங்களது சொற்கள் விழாத இடமில்லை. நாகேஸ்வரா பார்க்கின் மரமில்லா ஒரு மூலையில் அமர்ந்து மீந்த சொற்கள் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். "ஆதிரா.." ம் "நான் ஒண்ணு சொல்லுவா"? சொல்லேன் "உன் பேர மாத்த போறேன்" என் பேரயா?? "ம்ம் ஆமா".. ஐயயோ அப்ப Birth affidavitலாம் வாங்கணுமே!!! "ஏய் லுசு; இது நான் உனக்கு வைக்கப்போற பேரு. எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்" ஓஓஓ..சூப்பர் சூப்பர். என்ன பேரு செல்லம்?? "கெஸ் பண்ணு பார்க்கலாம்".. ம்ம்ம், எனி க்ளு?? "ஓகே..உன் உடம்புல இருக்குற ஒரு உறுப்பு வச்சு உருவாக்குன பேரு. அந்த உறுப்பு ஜோடியாதான் இருக்கும்". கை, கால்?? "இல்ல, உன் இடுப்புக்கு மேல"; இடுப்புக்கு மேலயா?? "ஆமா".. ஏய்ய்ய்ய், நீ என்ன சொல்லுவனு எனக்குத் தெரியும். நீ எதும் பேரு வைக்க வேண்டாம்; போடா!! (அந்த வேண்டாம் என்பதிலே வேண்டும் என்பது அப்ப

"பைரவா"

பைரவா (ஒரு அவசர அலசல்) - இப்போதெல்லாம் விஜயை திரையில் பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது. நாளுக்கு நாள் எல்லாருக்கும் நடிப்பு மெருகேறும்; இவருக்கு தாழ்ந்துகிட்டே போகுது. பரதனுக்கு இவர்கிட்ட நடிப்ப வாங்கத்தெரியலையானு தெரியல. தமிழில் வரக்கூடிய நல்லப்படங்களையெல்லாம் பார்த்தும் தைரியமாக இப்படியொரு படம் எடுக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்குத்தான் ஒரு ரசிகனின் ரசனையின் அளவுக்கோளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இது புரியாமல், நம்மளும்... தேவையில்லாத வேலை: 1. ஹேர் ஸ்டைல் 2. டயலாக் மாடுலேஷன் சரியில்லாதது: 1. வில்லன் 2. பின்னணி இசை 3. கலை(ஆர்ட்) வீணடிக்கப்பட்டவர்கள்: 1. டேனியல் பாலாஜி 2. ஆடுகளம் நரேன் 3. சந்தோஷ் நாராயணன் 4. மொட்டை ராஜேந்திரன் 5. தம்பி ராமையா ஓ.கே: 1. சதீஷ் டைமிங் 2. ஸ்ரீமன் 3. கதை சூப்பர்: 1. ஒளிப்பதிவு திரு.விஜய் அவர்கள் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டிய நேரம்!! கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரம் கீர்த்தி சுரேஷ லோ-ஹிப் சாரில காட்டுவாங்க.. பாத்துட்டு, போலாம் போலாம் னு வந்துட்டே இருக்கலாம்!! பை பை ரவா.. நெக்ஸ்ட்.. கோடிட

Pant - Shirt பெண்கள்

Pant - Shirt பெண்கள் = சில விஷயங்கள் எவ்வளவு எழுதினாலும் தீராது. அப்படியான ஒரு விஷயம்தான் ’உடை’. அதிலும் குறிப்பாக பெண்களின் உடை. அழகை அழகாக பார்க்கும் வரை அது ஆபாசமாகாது என்பதென் கருத்து. அதனால்தான் இந்த பதிவு. கடந்த சில நாட்களாக பேண்ட் - ஷ்ர்ட் அணிந்த பெண்கள் அதிகமாக கண்ணில் தென்படுகிறார்கள். பொதுவாக நம்மூரில் இத்தகைய உடையணிந்த பெண்களை காண்பதரிது. கார் ஷோரூம்களிலோ, யூனிசெக்ஸ் சலூன்களிலோ தான் பரவலாக பார்க்க முடியும். ஆனால் இங்கு, இந்த கார்ப்பரேட் உலகில் அது மிக சாதாரணம். ஆனா ல் இங்கும் நமது பெண்கள் காட்டன் சுடிதாரிலிருந்து அத்தனை எளிதாக மாறிவிடுவதில்லை. பொதுவாக எனக்கு பெண்கள் பேண்ட் ஷ்ர்ட் அணிந்தால் பிடிக்கும். அது ஒரு ஆளுமையின் வெளிப்பாடாகவே தெரியும். ஒரு ஆணைப் பார்த்து உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று சொல்வதுபோல் இருக்கும். அதை அணிந்த பெண்களிடம் ஒரு மிடுக்கு தெரியும். ’யாரடி நீ மோகினியில்’ தாவணி நயன்தாராவை விட பேண்ட்-ஷ்ர்ட் நயனே எனக்கு சால சால இஷ்டம். உடை என்பது வெறும் உடலை மறைக்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அதற்கு பின் ஏகப்பட்ட உளவியல் இருக்கிறது. அதை அவரவர் கண்டிப்பாக உணர வே