Posts

Showing posts from January, 2018

பான் கி மூனின் றுவாண்டா – மகுடி வாசிக்கும் சொற்சித்திரம் !

    பான் கி மூனின் றுவாண்டா – மகுடி வாசிக்கும் சொற்சித்திரம் ! ~ தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் வெகுஜன கதைகள் எழுதுவது , இலக்கிய தரம் வாய்ந்த கதைகள் எழுதுவது போன்ற பல விதமான போக்குகள் இருக்கிறது . புதிய வகையான எழுத்துகளும் , கதைகளும் களங்களும் வந்த வண்ணம் இருக்கிறது . எத்தனை விதமான படைப்புகள் வந்தாலும் ஈழ இலக்கியம் என்பது எப்போதுமே தனித்துவமானது . ஒரு விதமான சார்பு நிலையோடு எழுதப்பட்டாலும் உண்மைக்கு வெகு நெருக்கமாக நின்று உரையாட கூடியது இந்த ஈழ இலக்கியம் . இங்கு , நாம் சந்தித்த மனிதர்களின் கதைகள் , வாழ்ந்த வாழ்கின்ற மண் சார்ந்த கதைகளே அதிகம் எழுதப்படுகிறது . வெகு அரிதாக நம்முடைய கதைகள் புனைவுகளின் ஊடாக தொக்கி நிற்குமாறு எழுதப்படும் . இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் களம் , ஈழ இலக்கியம் . அது எழுதுபவரின் வாழ்க்கையை , அவர் அடைந்த இன்னல்களை , அவரது வலிகளை , அவரை சார்ந்தவர்களின் வலிகளை , அவர்களது உரிமையை , எவ்வித சமரசமுமின்றி , தண்ணீர் கலக்காத மதுபானத்தைப் போல் அப்பட்டமாக எடுத்துரைக்