Posts

Showing posts from June, 2017

டிரைவர் மொழிகள்

Image
எப்படி பேருந்து இருக்கையின் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணிப்பது பேரின்பமோ அதற்கு சற்றும் குறைவில்லா அனுபவத்தை அளிக்க கூடியது, டிரைவருக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமர்ந்து பயணிப்பது. சில டிரைவர்கள் வண்டி ஓட்டுவதை பார்க்கையில் சூப்பர் ஸ்டாரெல்லாம் க்யூவில் நிற்க வேண்டும். அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். எங்கள் ஏரியாவில் 3-டி என்றொரு வண்டி உண்டு. திலி.சந்திப்பு டூ தாமிரபதி காலனி என்ற ரூட்டில் ஓடும். அந்த வண்டியில் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே அவர் தான் டிரைவராக இருக்கிறார். அந்த வண்டியில் ஏறுவதற்கென்றே ஒரு கூட்டமிருக்கும். பேருந்தில் அவர் ஓடவிடும் பாடல்கள் அப்படி. செம்ம ரசனையான மனிதர். இப்போது வரும் பேருந்துகளில் தான் பவர் ஸ்டியரிங், பவர் கியர் எல்லாம். அது ஆதிக்காலத்து பேருந்து வகையைச் சார்ந்தது.  நல்ல வசமாக டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருக்கும் தனி சீட்டில் அமர்ந்துக்கொள்வேன். அவர் அருகில் இருக்கும் அந்த கியர் ஒரு சிறுவனை அருகில் நிற்கவைத்தது போல் உயரமாக இருக்கும். கியர் போடுகையில் எல்லாம் அதன் தலையை ஒரு உலுக்கு உலுக்கி வலமும் இடமும் முன்னும் பின்னும் ஆட்டுவார். அதை பார்க்கு

விளிம்புக்கு அப்பால் சிறுகதை தொகுப்பை முன்வைத்து

நண்பர் சேகர் கேட்டிருந்தார் ஒரு சமூகத்தின், ஒரு பேரியக்கத்தின் ஒரே  ஒரு கதையை மட்டும் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு 'கிளாரிட்டி' இல்லை என்று சொல்வது என்ன நியாயம் என்று??  நல்ல கேள்வி.  என்னை பொறுத்தவரையில் ஒரு சிறுகதையை ஒரு வாசகன் வாசிக்கிறான் என்றால் அது அவனுள் ஒரு திறப்பை ஏற்படுத்த வேண்டும் , வேறொரு மோனநிலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதெல்லாம் இரண்டாவது,  ஒரு புறம் இருக்கட்டும். முதலில் அந்த கதை அவனுக்கு புரியவேண்டும். அதன் மையத்தை அவன் உணர வேண்டும். அதை உணர்வதற்கும்  கதையின் ஊடாக பயணிப்பதற்கும்  எந்த ஒரு தடையும் (மொழி, கதை அமைப்பு )  இருத்தல் கூடாது. உதாரணமாக, பயணத்தில் இருக்கும் ஒருவன் பேருந்து நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் ஆ.வி வாங்குகிறான். அதில் ஒரு கதை வந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை என்று வைத்துக்கொள்வோம், அவன் அகரமுதல்வனை அழைத்து "என்னய்யா இது, ஒண்ணுமே வெளங்கள" என்று கேட்பான். அவனிடம் போய் நீ, காசி ஆனந்தனையும், ஜெயபாலனையும் முத்துலிங்கத்தையும் போய் படித்த்துவிட்டு வா, அப்போதுதான் உனக்கு என் கதை புரியும் என்று சொன்னால் "போடா..நீயு

ஜோ டி குரூஸ்-க்கு இந்த சுள்ளானின் சில கேள்விகள்!

ஜோ டி குரூஸ்-க்கு இந்த சுள்ளானின் சில கேள்விகள்! (அது வேற வாய்; இது வேற வாய்) 0 கடந்த மார்ச் மாத இறுதியில் அண்ணன் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் சார்பாக ”சாதாரண மனுசன்” ஜோ டி குரூஸ் உடனான கலை, இலக்கிய, சமகால அரசியல் குறித்த உரையாடல் ஒன்று டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடாகி இருந்தது. நான், சேகர், மனோ மற்றும் சிலர் கலந்து கொண்டோம். ”அவரோட எழுத்துக்களை நான் இன்னும் படிக்கலை. அவர் ஒரு அரசியல் முகமாகத்தான் என் மனசுல பதிஞ்சு இருக்காரு, அது குறித்துதான் கேட்பேன் பரவாயில்லையா”னு கேட்டுட்டுத்தான் கூட்டத்திற்கே சென்றிருந்தேன். இதற்கிடையில் ஜோ டி குரூஸ் எனக்கு எப்படி அறிமுகம் என்றால், அவர் சாகித்ய அகாதெமி விருது வாங்கிய போது ஒரு வினாடி வினா போட்டியில் அது குறித்த கேள்வி ஒன்று கேட்கபட்டது. நெய்தல் நிலம் குறித்து எழுதி வருகிறார் என்றும், கப்பல் துறையில் பணிபுரிகிறார் என்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்துகொண்டேன். அப்போதுதான் அந்த பெயரை கேள்விப்படுகிறேன். அதற்கு பின்னர், 2014-ல் மோடியுடன் ஒரே மேடையில் ஒய்யாரமாக நிற்கிறார்; அப்போது மீண்டும் பார்க்கிறேன். இந்த நிகழ்வுக்கு செல்வது என்று

அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

அம்மா வந்தாள் – தி . ஜானகிராமன் நான் படிக்கும் தி . ஜா . வின் நான்காவது புத்தகம் இது . முதலில் ’ மோகமுள் ’ அடுத்து ’ செம்பருத்தி ’, மூன்றாவதாக ’ கொட்டுமேளம் ’ சிறுகதைத் தொகுப்பு . தி . ஜா . வை வாசிப்பது என்பது எனக்கு பிடித்தமான ஒன்று . அது பாலா படம் போன்று மூர்க்கமானது கிடையாது . மிகவும் சாந்தமானது ; ஆனால் , தட்டையானது இல்லை . சுவாரஸ்யம் மிகுந்தது . ஒரு சிறிய விஷயத்தையும் அழகாக விவரித்திருப்பார் . வர்ணிப்பதில் வல்லவர் கல்கி , கலைஞர் கருணாநிதி என்பர் , ஆம் உண்மைதான் . கலைஞரின் வர்ணிப்பு பிரமாண்டமானது , ஓங்கியுயர்ந்து நிற்பது . ஆனால் , தி . ஜா . வின் வர்ணிப்பு நம் கண்முன் நடப்பதை நாம் காணா வேறொரு கோணத்தில் விவரிப்பது . படிக்கும்போதே வேறொரு மனநிலைக்கு அழைத்துச் செல்லும் ; மோனநிலைக்கு கரம்பிடித்து கூட்டிப் போகும் . உதாரணமாக , 0)    கோவில் மணி டைங் , டைங் என்று சளி பிடித்தாற்போன்று மூக்கடைப்பு குரலில் அடித்தது . 1)    தார்க்குச்சியை தோலில் செருகித் திருகி இழுத்த மாடு போல அப்பு உள்ளே துள்ளினான் . தி . ஜாவின்