Posts

Showing posts from June, 2016

போற்றுதலும் தூற்றுதலும்

நேற்று போற்றியோர் இன்று தூற்றுவர்.. இன்று தூற்றுவோர் நாளைப் போற்றுவர்.. போற்றுதலும் தூற்றுதலும் இங்கு,  "உண்டல்,உறங்கல்,உரம்போடுதலைப்"  போன்று சர்வ சாதாரணம். -தமிழ்மறவோன். 02-06-2016

"தயிர்சாதமும் புளிக்கொழம்பும்"

Image
"தயிர்சாதமும் புளிக்கொழம்பும்" ------------------------------ எனக்கு மிகவும் பிடித்த கொழம்பு வகைகளில் இந்த புளிக்கொழம்பிற்கு முக்கிய இடமுண்டு. அதும் அம்மா வைக்கும் புளிக்கொழம்பென்றால் அதினினும் பிடிக்கும்.அந்த புளிக்கொழம்பு எப்படி இருக்கணும் தெரியுமா? நிறைய சின்ன வெங்காயம் போட்டு, பல்லு பல்லா பூண்டுப் போட்டு நடிகை சிநேகா கலர் வர்ற வரைக்கும் வதக்கி கொழம்பு நல்ல சுரு சுருனு கொதிக்கும் போது பிஞ்சாவும் இல்லாம முரட்டுக் காயாவும் இல்லாம் நல்ல நீளமான முருங்கைகாயப் போட்டு இறக்கி, அந் த கொழம்போட மேல் லேயர்ல அப்படி நல்லெண்ணய்ய ஊத்தி நல்லெண்ணய்ல கொழம்ப மிதக்கவிட்டு இறக்கி வைக்கோணும்!!! அதுக்கப்புறம் சாதத்துல தயிர நிறய ஊத்தி கொஞ்சமா தண்ணி சேர்த்து நல்ல பிசைஞ்சு சோத்த விட கொழம்ப அதிகமா ஊத்தி முருங்க காயோட சதைப்பத்த சோத்துக்குள்ள புதைச்சு பெரிய உருண்டையா உள்ள தள்ளுனோம்ணு வைங்க "தேனுல ஊறுன பேரிச்சையும் தோத்துப் போகும்". முக்கியமான இடத்துக்கு இப்பதான் வாரோம். சாப்பிட்டு முடிச்சுட்டு தயிர் சோத்துல உள்ள தயிரும் கொழம்பும் மிக்ஸிங்கா தட்டுல திட்டு திட்டா ஒட்டிட்டு இருக்கும

பழக்கமில்லை

Image
தயவுசெய்து அவள் பெயரை எழுதச் சொல்லாதீர்கள், எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை. ‪#‎ பிதற்றல்கள்‬ -தமிழ்மறவோன். 30-05-2016

கழுதை

Image
போடா கழுதை என்று திட்டினாள்; கழுதையாவதில் எனக்கெந்த தயக்கமுமில்லை, சுமப்பது உன்னையென்றால்!!! ‪#‎ பிதற்றல்கள்‬ -தமிழ்மறவோன். 29-05-2016

(உங்கள் கேள்விக்கென் பதிலிதுவே!!) .

Image
(உங்கள் கேள்விக்கென் பதிலிதுவே!!) . பெரும்பாலும் கவிதை எழுதும் அனைவரும் இக்கேள்வியை கடந்தே வந்திருப்பீர்கள். "நீங்க கவிதைலாம் எழுதுறீங்களே, யாரையாது காதலிக்கிறீங்களா"?? இதை இரண்டு விதமாக அணுகலாம். "காதலித்தால் கவிதை எழுத வேண்டுமா? அல்லது கவிதை எழுதுபவர்களெல்லாம் கண்டிப்பாக காதலித்தாக வேண்டுமா?" நம் மனதில் அப்படித்தான் விதைக்கப்பட்டிருக்கிறது போலும்.சிறுவயது முதலே காதலிப்பவர்கள் தான் கவிதை எழுதுவார்கள் என்றும்; கவிதை எழுதுறான்னா அவன் கண்டிப்பா யாரையோ உருண்டு புரண்டு காதலிக்கிற ான் என்றும் உட்செலுத்தி வைத்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை, "கவிஞனுக்கு காதலி(கள்) அவசியமில்லை.. ஆனால்,காதல் அவசியம்!!!". ஏதோ ஒரு காதலின் அதீத வெளிப்பாடுதான் கவிதை. அந்த "காதல்" எதன் மீதும்,யார் மீதிலும் வரலாம்.காலையில் பருகும் சாயாவிலிருந்து, மலரும் கொன்றை மீது,கடக்கும் காக்கையின் மீது என்று வரலாம்.சில நேரங்களில் பிடித்த பெண்ணின்(காதலி) மீதும் வரக்கூடும்.ஒன்று உறுதியாய் சொல்லலாம், "ஒவ்வொரு கவிஞனுக்கும் காதலி இருப்பாள் என்று சொல்ல முடியாது, ஆனா

தியாகி

Image
தன் 8 வயது மகனுக்காக,  மூக்கை பொத்திக் கொண்டு  புரோட்டா வாங்க  கடையில் நிற்கும்  ஒவ்வொரு தாயும்  தியாகியே!!! -தமிழ்மறவோன் 27-5-2016

தேவதைகளுக்கு சமர்ப்பணம்

*தேவதைகளுக்கு சமர்ப்பணம்* பெண்களுக்கு ஆண்களிடம் சொல்வதற்கு விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறுவயதில் ஆடிய கண்ணாமூச்சியாட்டம், செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி, அது இறந்தப்போது அழுது புரண்டது; அதற்கு இணையாய் கிளி வாங்கிக் கேட்டது. அதனுடன் தோட்டத்தில் அமர்ந்து பேசுவது. தனக்கு பிடித்த வான் நீலம்; அதன்பால் கொண்ட காரணமில்லா ஏக்கம்,மயக்கம்!!! முதன்முதலில் அம்மா வாங்கிக் கொடுத்த புடவை; அப்போது தைத்து, இப்போது இறுகிப் போயிருக்கும் சட்டை.நீள் கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாவைப் பற்றிய கதை. மு தல்நாள் கட்டிய காட்டன் சேலையை பற்றிப் பேச ஆயிரம் விஷயமுண்டு அவர்களிடம். ஆண்களிடமும் இத்தகைய விஷயங்கள், அனுபவங்கள் இருக்கலாம்; ஆனால் அடுத்தவர் ரசிக்கும்படி சொல்வதென்பது சற்றே சிரமம்தான்.பெண்கள் அனைவருக்கும் இக்கலை வாய்ப்பது இயல்பு.மேலும், பெண் சொல்லும் இவ்விஷயங்களுக்கு "ம்ம்ம்" கொட்டுவதைக் காட்டிலும் வேறென்ன இன்ப அனுபவம் இருந்துவிட முடியும் ஆணுக்கு??? பெண்களின் உலகு அழகு!!!! பெண்களால் ஆன உலகு பேரழகு!!!!! -தமிழ்மறவோன்.

தட்டையான முடிவு

Image
சுவாரஸ்யமான நாவலின் தட்டையான முடிவுப் போல் முடிந்துவிட்டது கல்லூரி வாழ்க்கை!!! -தமிழ்மறவோன். 22-05-2016

"VOTE FROM YOUR CURRENT LOCATION"

"VOTE FROM YOUR CURRENT LOCATION" ------------------------------ அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒன்று, பகிரப்பட வேண்டிய ஒன்று: நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கு இருந்தபடியே ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியுமா?? இதுவரை முடியாது. இனிமேல் முடியும்!!! ஆம்,அதற்கான ஒரு தொழில்நுட்ப முறையைதான் "நேஷனல் பொறியியல் கல்லூரி,கோவில்பட்டி Electronics and Instrumentation பிரிவு" 2015 ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாம் படித்த தொழில்நுட்ப கல்வியை இதுபோன்ற சமூக மாற்றத்திற்கான நோக்கோடு கண்டுபிடித்துள்ளது வரவேற்கதக்கது. இதை நடைமுறைக்கு கொண்டுவருவதன் மூலம் தேர்தல் நேரங்களில் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏற்படும் உடல் அலைச்சலையும், பண விரியமும் ஏற்படுவதை தடுக்க முடியும். அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல கைகோர்ப்போம். *மின்னணு ஓட்டு இயந்திரம் கண்டுபிடிக்கும்போது "சுஜாதா" ஒரு கல்லூரி மாணவர்தான் எனபதை நினைவில் கொள்க.* பிகு: அதன் Working and Operation விரைவில் Update செய்யப்படும். நன்றி. -Praveenkumar P 16-

‪#‎TNElection2016‬

நேத்து நைட்டு கரண்ட் கட் ஆனப்ப ஒரு கரை வேட்டி வந்து கவரை நீட்டி கண்டிப்பா "***க்கு" ஓட்டு போட்ருங்கனு சொன்னாரு. "சரிண்ணே"னு கவரை பிரிச்சு பேப்பர சரிப் பார்த்துட்டே "அண்ணே, உங்கட்ட கவரை வாங்கிட்டு வேற யாருக்காது ஓட்டுப் போட்டா எப்டிண்ணே கண்டுபிடிப்பிங்க???"னு எதார்த்தமா கேட்டேன். படக்குனு கவரை பிடுங்கிட்டு பக்கத்து வீட்டுக்கு போயிட்டாப்ல!!!! பின்னாடியே கேமராவ தூக்கிட்டு ஓடுனேன், அங்கயும் குடுக்காம ஓடிட்டாப்ல...  "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"!! ‪#‎ TNElection2016‬ -பஞ்சகல்யாணி.

உன் வாசம்

Image
என்றோ நீ தந்த மிட்டாயை தின்றுவிட்டு, அந்த தாளை மட்டும் புத்தகத்தினூடே வைத்திருந்தேன். இன்று அதை மீண்டும் எடுத்து நுகர்கையில் தாளில் அப்படியே எஞ்சி நிற்கிறது உன் வாசம். -தமிழ்மறவோன். 15-05-2016

ஜூனியர் பொண்ணு-சத்திய சோதனை"

இப்பலாம் பசங்க போடுற பேண்ட்ட (Pant) பார்த்தாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எப்ப அவுந்து கீழ விழுமோங்கற நிலைமைல,கொஞ்சமா இடுப்ப பிடிச்சுட்டு நிக்குது. இதுல சில பசங்க போடுறது ரொம்ப டைட்டா வேற இருக்கு. ******************************** என்னைக்குத்தான் நம்ம ஊரு பஸ்ல படிய கீழ இறக்கி வைக்கப் போறாய்ங்களோ தெரியல. பஸ் படில ஏறுறதுக்கே ஒரு ஏணி படி வேணும்போல,அப்படியிருக்கு. ******************************** என்ன சம்பந்தம் இல்லாம பேசுறனா?? இருக்குங்க... இன்னைக்கு ஒரு காலேஜ் (முடிச்ச) பையன் ரெண்டு கையிலயும் லக்கேஜ்,முதுகுல ஒரு டிராவல் பேக்கோட டைட்டா ஒரு பேண்ட்டையும் மாட்டிக்கிட்டு பைபாஸ்ல "பாபநாசம்"(நோட் திஸ்) போற உயரமான படியுள்ள பஸ்ஸ கைகாட்டி நிறுத்தி ஏறும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த பையனோட பேண்ட்டு கிழியக்கூடாத இடத்துல கிழிஞ்சுபோச்சு.பேண்ட்டு கிழியுறதுல ஒரு கான்செப்ட் இருக்கு. என்னனா,அது ஒரு சில இடங்கள்ல கிழிஞ்சா நமக்கும் பிரச்சனையில்லாம பார்க்குறவங்களுக்கும் பிரச்சனையில்லாம முடிஞ்சுரும்; நல்ல காத்தோட்டமாவும் இருக்கும். ஆனா சில இடங்கள்ல கிழிஞ்சா உடனடியா மராமத்