Posts

Showing posts from May, 2017

கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா - 2

நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் , ” கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா ” என்று . ஆமாம் அது நடக்க கூடியதுதான் . நானும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கிறிஸ்துராஜா பள்ளியில் தான் படித்தேன் . அங்கும் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறும் . ஆனால் , யாரும் எவரையும் கட்டாயப்படுத்தமாட்டார்கள் . அதிலும் குறிப்பாக மார்ச் மாதம் சூசையப்பருக்கு உகந்த்து என்று அந்த மாதத்தின் ஒவ்வொரு புதன் அன்றும் ’ லாரன்ஸ் ஹால் ’ பின்புறம் இருக்கும் சின்ன கிரவுண்டில் வழிபாடு நடக்கும் . யாராவது ஒரு பாதிரியார் வந்து ஜெபம் செய்வார் . ஏதேதோ பெரிய வாக்கியங்களாக சொல்லி இறுதியில் ” புனித சூசையப்பரே எங்களது மன்றாட்டை கேட்டருளும் ” என்று சொல்ல சொல்வார்கள் . அது ஏன் எதற்கென்றெல்லாம் தெரியாது ; ஆனால் , அது சொல்வதற்கு நன்றாக இருக்கும் . ( சொல்லிப்பாருங்கள் – புனித சூசையப்பரே எங்களது மன்றாட்டை கேட்டருளும் – நல்லா இருக்குல்ல ??) அதுமட்டுமல்லாது , பூசை முடிவில் அப்பமும் பழரசமும் தருவார்கள் ; அதை ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டும்தான் வாங்கவேண்

குச்சி மிட்டாயில் ஒரு வரலாற்று பிழை!

” அரண்மனை -2” படத்தில் வந்த ” குச்சி மிட்டாய் குருவி ரொட்டி ” பாடல் கேட்டிருப்பீர்கள் தானே ?? கேட்டிருப்போமா என்று தெரியாது , கண்டிப்பாக ஓங்கியுயர் கால்களுக்கு கவசமாக வெள்ளை லெக்கிங்ஸும் , சைட் ஓப்பன் டாப்ஸும் அணிந்த ’ நாயகி ’ திரிஷாவையும் வெண்ணெய்யை உருக்கி வழியவிட்டாற் போலிருக்கும் இடையுடைய பூனம் பஜ்வாவையும் ஆ .. வென்று வாய்பிளந்து பார்த்திருப்போம் . இதில் பிஸியாக இருந்துவிட்டு , அதில் வரும் ஒரு வரலாற்று பிழையை கவனிக்க தவறிவிட்டோம் . பாடலின் 1.14 நிமிடத்தில் சூரி அவர்கள் இப்படி பாடுகிறார் , “ அண்ணாமலை ரஜினிய போல காச வா ரி நான் இரைக்கிறேன் டி ..” இதில் தான் அந்த பிழை இருப்பதாய் எனக்கு தோன்றியது . அண்ணாமலை படத்திலா ரஜினி காசை வாரி இரைப்பார் ?? அது அருணாச்சலம் தானே ?? இந்த ரம்பா , சௌந்தர்யாவெல்லாம் நடித்திருப்பார்களே அந்த படத்தில்தானே இந்த மொக்க கான்செப்ட் வரும் ?? பூனம் பஜ்வாவை பார்த்துக்கொண்டே அடுத்த வரியை கவனிக்காமல் விட்டுவிட்டேன் ; மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டேன் . அடுத்த வரி இப்படி வருகிறது , ” மொட்டை தலை கஜினிய ப

ப.பாண்டி

ப.பாண்டி . சமீபத்தில் வந்த படங்களில் நான் வெகுவாக ரசித்த படம் ப.பாண்டி. கடைசியாக தனுஷ் ’நடித்து’ வெற்றிப்பெற்ற படம் எதுவென்று நினைவில்லை ஆனால் இயக்குனராக இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குமுன் இதே ராஜ்கிரண் நடித்த ’மஞ்சப்பை’ படமும் கிட்டத்தட்ட இதே கதைக்களம் தான். ஆனால், இதில் அந்த இளமை+முதுமை காதலை உட்புகுத்தி வேறொரு இடத்திற்கு கதையை நக்ர்த்தி சென்றிருப்பார் தனுஷ். நமக்கு இந்த ஜோனர் கொஞ்சம் புதிதும்கூட. அதாவது குறிப்பிட்ட வயதுக்கு மேல் வரும் காதலை நாம் நம் சினிமாக்களில் அதிகம் பார்த்ததில்லை. யாரும் காட்டியதுமில்லை. அவ்வாறு வந்தாலே அது கள்ளக்காதல் என்று நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கதையை எடுத்து கையாண்ட இயக்குனர் தனுஷுக்கு வாழ்த்துகள். நடிகர்கள் தேர்வும் அட்டகாசம். குறிப்பாக பிரசன்னா, ராஜ்கிரண். ஒரு சராசரி ஐ.டி இளைஞனாக நம்முன் நிற்கிறார் பிரசன்னா. இந்த கதை ராஜ்கிரணுக்காகவே எழுதப்பட்டிருக்கலாம் என்பது என் யூகம். ஏனென்றால், அந்த ஸ்டண்ட் மாஸ்டர் கேரக்டருக்கு தேவையான ஒரு சிறுப்பிள்ளைத்தனம், ஒரு முரட்டுத்தனம் போன்

நேட்டிவிட்டி

”எந்த ஊர் நீங்க?” ”திருநெவேலி-ங்க” ”திருநெவேலி-யா? ஆனா உங்க பேச்சுல திருநெவேலி பாஷையே வரலையே!!” என்னிடம் அறிமுகமாகும் நண்பர்கள் பெரும்பாலும் இதையே தான் கூறுகின்றனர். உண்மைதான், நான் பேசுகையில் திருநெவேலி வாடை ரொம்ப குறைவாகவே அடிக்கும். தி.வேலியின் மையமான பாளையங்கோட்டையில் இருந்து வந்தாலும் ஏனோ அந்த ஸ்லாங் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் படித்த பள்ளியும் கல்லூரியும் கூட காரணமாக இருக்கலாம். மேலும் சிறுவயதில் இருந்தே மேடைப் பேச்சுக்களில் பேசியதன் விளைவாக, அந்த பேச்சே என் நாவில் வேதாளமாய் ஒட்டிக்கொண்டிருக்குமோ என்றும் தோன்றுகிறது. முடிந்த அளவு எங்கள் ஸ்லாங்கை விட்டுவிடாமல், நண்பர்களிடம் பேசும் சமயங்களில் எல்லாம் கெட்டியாக பிடித்தே வருகிறேன். தோழிகளிடம் அதிகம் பேசுவதால் என்னமோ பேச்சுக்களில் ’டா’ அதிகமாக விழுகிறது. இப்போதெல்லாம் தோழர்களிடம் பேசும்போது மிக கவனமாக வலிந்துபோய் ’ல’ போட்டு பேசுகிறேன். இன்னொரு விஷயம், திருநெவேலி ஸ்லாங் என்பது படங்களில் ’நெல்லை’ சிவா பேசுவதும், பாபநாசத்தில் உ.நாயகன் பேசியது மட்டும் அல்ல. ஏகப்பட்ட ஸ்லாங் இருக்கிறது.

சென்னை டூ திருநெல்வேலி

சென்னை வந்தேறிகளான நாம் அனைவருமே நம் ஊருக்கு ரயிலில் சென்றிருப்போம். தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து பார்க்குறீர்கள் வயற்காட்டின் நடுவே ரயில் சென்றுக்கொண்டிருக்கிறது. அது எந்த ஊர் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?? நான் ஒரு வழி சொல்லவா? வயலின் நடுவில் மோட்டார் ரூமில் இருக்கும் விளம்பரங்களின் மூலம் கண்டுபிடிக்கலாம், S.M Silks – காஞ்சிபுரம் கன்னிகா பரமேஸ்வரி – விழுப்புரம் சாரதாஸ் – திருச்சி ராஜ் மஹால் – மதுரை கூடலிங்கம், ஜோதிலிங்கம் – கோவில்பட்டி அதை தாண்டிவிட்டால் இரு பக்கங்களிலும் ஆர்.எம்.கே.வி, போத்தீஸ் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பிக்கும். நெல்லை எல்லைக்குள் வந்துவிட்டீர்கள் என்றர்த்தம்! வாங்கலே.. -பிகு 20-5-2017

ஆட்டோ அலப்பறைகள்

இந்த ஊர், அந்த ஊர் என்றில்லாமல் எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் இந்த ஆட்டோகாரர்களின் அலப்பறை சொல்லி மாளாது. சென்னையை எடுத்துக்கொண்டால் ஷேர் ஆட்டோக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருப்போம், அந்த சமயத்தில் இவர்கள் மெதுவாக அந்த நிறுத்ததிற்கு முன் ஊர்ந்துக்கொண்டிருப்பார்கள். ஆட்டோ ஓட்ட சொன்னால் தேரோட்டிக்கொண்டிருப்பார்கள். நம்ம நேரம், சரியாக அந்த சமயத்தில் தான் நாம் காத்திருந்த பேருந்தும் வந்து சேரும். பஸ்  டிரைவர் பெரிய அறிவாளிப்போல் பஸ்ஸின் பின்வாசல் சரியாக ஆட்டோவிற்கு பக்கத்தில் வருமாறு நிறுத்திவிட்டு ஒரு பெருமித பார்வை பார்ப்பார். அடேய்.. எப்படிடா பஸ்ஸுக்குள்ளாற ஏறுவேன்?? நேரா போனா தோள் இடிக்கும்னு, திரும்பி போனா தொப்பை தட்டும்!! சரின்னு முன்னாடி போய் ஏறு போனா, ஏதோ கட்டுன பொண்டாட்டி மாதிரி கூடவே வருவான் ஆட்டோகாரன். டேய்.. நான் பஸ்ல ஏறப்போறன்டா-னு சொல்லி ஏறுறதுக்குள்ள கண்டக்டர் சொய்ங்ங்..னு விசில போட்டு வண்டிய கிளிப்பிருவாரு. சரி, இத விடுங்க. ரயில்நிலையங்களில் இவர்களின் அக்கபோர் படுபயங்கரமாக இருக்கும். ஒருமுறை ஊருக்கு செல்வதற

கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா

Image
”கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை..” ’றெக்க’ படத்தின் இந்த பாடல் வந்த புதிதில் பெரும் வரவேற்பை பெற்றது. எங்கெங்கு காணினும் நல்லோர் அனைவரும் மாலாக்கா துதி பாடிக்கொண்டிருந்தனர். எனக்கும் மாலாக்காவை பிடித்திருந்தது. ”பாரதி உன் சாயலை பாட்டாக பாடுவான்” என்ற வரிகளை காப்பியடித்து எழுதி என்னவளிடம் கன்னத்து முத்தமும் வாங்கியாகிவிட்டது. இப்போது நான் சொல்ல வந்தது வேறு. அந்த பாடலில் இரண்டு காட்சிகள் வரும். முதலில் மாலாக்கா தேவாலயத்தில் ஜெபம் செய்வது போன்றும் (ரொம்ப உருகி கண்ணீர் மல்க ஜெபித்துக்கொண்டிருப்பார்), பின்னர் ஒரு கோவில் நடையில் அமர்ந்து அந்த தம்பிக்கு கையில் கயிறு கட்டிவிடுவது போன்றும் வரும். இங்குதான் மாலாக்கா இந்துவா, கிறிஸ்டினா என்று சந்தேகம் வந்தது (நான் படம் பார்க்கவில்லை. படத்தில் இதுகுறித்த காட்சிகள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை) இதுபற்றி நண்பர் ஒருவரிடம் பேசுகையில், ”ஆமா, பிகு அந்த பாட்டுல அப்படி வரும் சரிதான். அதபத்தி எனக்கும் தெரியல. ஆனா எனக்கு இன்னொரு விஷயம் தோணுது. கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா தெரியும், தங்களோட வாழ்க்கையின் ஒரு கட்டத்துல அது பள்ளிப்பருவமோ, கல்லூரி பருவமோ ஏதோ

அந்த ’அக்கா’

Image
எனக்கு இவர்கள் குறித்து ஒன்று எழுத வேண்டியிருக்கிறது. அலி, ஒம்போது, உஸ் என்று அழைப்பதை விவரம் தெரிந்ததில் இருந்து தவிர்த்தே வருகிறேன். ஆனாலும், சில நேரங்களில் அவர்கள் செய்யும் செய்கைகள் ஏற்கதக்கதாக இருப்பதில்லை. உதாரணமாக, ரயிலில் துட்டு வசூலிப்பதை சொல்லலாம். அதை கூட சகித்துக்கொள்ளலாம் என்றாலும் சில விஷயங்களை கண்டிக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது. சோழிங்கநல்லூர் டூ மேடவாக்கம் ஏறி அமர்ந்து டிக்கெட் வாங்கி கொண்டிருக்கும்போதே ஒரு திருநங்கை வந்து அருகில் அமர்ந்தார். நாம் டிக்கெட் எடுத்து பயணிக்கிறோம் அதேப்போல் அவரும் பயணிக்கிறார் என்ற ரீதியில் தான் நகர்ந்தமர்ந்து இடமளித்தேன். “மேடவாக்கம் ஜங்ஷன் ஒண்ணு” – நான் கண்டக்டரிடம் ”மேடவாக்கத்துல டேஷன் இருக்காப்பா?” – அந்த ’திருநங்கை’   ”இல்ல ’அக்கா’ பஸ்-ஸ்டாண்ட் தான்”, என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னை நெருங்(க்)கி அமர்ந்தார். நான் சற்று நெளிந்தவனாக இன்னும் ஓரத்தில் ஒதுங்கினேன். அவரது மாராப்பை சற்று இறக்கிவிட்டு, புடவை இல்லாத அவரது இடுப்பு எனது முழங்கையில் உரசுமாறு அமர்ந்திருந்தார். அவரது கைகள் ஏறத்தாழ எனது தொடை மீதிருந்தத