Posts

Showing posts from 2015

முழுக்க முழுக்க மலரின் வாசனை

Image
"பிரேமம்" *முழுக்க முழுக்க மலரின் வாசனை* நீண்ட நாட்களாக பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்டில் இருந்த படம் "பிரேமம்" நேற்றுதான் நல்ல பிரிண்ட் கிடைத்தது பார்த்து முடித்தேன்.ஆம், அனைவரும் கூறியது போல் நல்லதொரு காதல் படம் தான்.அதற்காக ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளும் அளவுக்கெல்லாம் இல்லை.அதிலும் முதல் 40 நிமிடம் சகித்துக்கொள்ளவே முடியாது.மேரி மட்டும் தான் ஆறுதல்.மலருக்காக காத்திருந்து மேரியை ரசிக்கலாம்.கல்லூரி வாழ்க்கையிலிருந்துதான் படம் களைக்கட்டுகிறது.நிவின்பாலி உண்மையிலையே அற்புதமான நடிகர்.படம் முழுக்க மலையாள வாடை அடித்தாலும் மலரின் வாடைதான் அதிகமிருந்தது.ஜார்ஜ்-மலர் காதல் காட்சிகளில் அழுத்தம் குறைவுதான்.ஆனால்,கொள்ளை அழகு.அதுவும்,அந்த டான்ஸ் சொல்லிதரும் காட்சி அழகோ அழகு;லவ் யூ மலர் மிஸ். ஆனால், விபத்தில் நினைவு தப்புவது எதிர்பாரா திருப்பம்.தாடி எடுத்தாலும் நிவின் அழகாவே தெரிகிறார்.மேரியின் தங்கையை உள்ளே கொண்டு வந்தது நல்ல யோசனை. செலினின் அறிமுக காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால்,அவளின் திருமணம் நின்றதற்கு வேறு ஏதேனும் பலமான காரணம் வைத்திருக்கலாம்.இறுதியில் மலரின்

சூழலியல்

                                                                                                                                சூழலியல் கழகம்  1.இங்கு புத்தர்கள் நிரம்பித்தான் கிடக்கிறர்கள் போதி மரங்களை தான் காணவில்லை ..!!!! 2.பூமி மரமண்டையாகவே இருந்துவிட்டு போகட்டும் மொட்டை அடிக்காதிர்கள் ..!!!! 

ஓர் மழை ஞாயிறு

*"ஓர் மழை ஞாயிறு"*                                                         -தமிழ்மறவோன்  ஓர் ஞாயிறு மதியத்தின் மத்தியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்த பாகற்காய் வறுவலையும் கொள்ளு ரசத்தையும் பிரண்டை துவலையும் சாப்பிட்டு முடித்தோம்.ஆம் நாங்கள் சைவம் (உணவில்).  இன்று வானம் ஏனோ இருட்டிக் கிடந்தது.வார நாட்களில் ஏற்படும் வேலைப் பளுவினால் ஞாயிறுகளில் கடோத்கஜனாய் உண்டு கும்ப கர்ணனாய் உறங்க விருப்பமில்லை.பெரும்பாலும் ஞாயிறுகள் தான் எங்களை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.நாங்கள் எங்களை உணர்ந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது.சாப்பிட்ட பின், வாசலில் நாற்காலியிட்டு அமர்ந்தேன். மழை வருவது போலிருந்தது, இன்பமாயிருந்தது.அவளும் சேர்ந்துக் கொண்டாள்.இன்பம் இருமடங்கு!!! கைகளில் நீர்மோர்;"மழை வரும்போல் இருக்கிறதே,இந்நேரத்தில் மோரா?"இது நான்."நான் விரும்பி செய்தது வேண்டுமானால் குடி", இது அவள்.மறுபேச்சின்றி ஒரே மடக்கில் முடித்தேன்.  "ஷேல் வி ப்ளே கார்ட்ஸ்" என்ற அவளது அழைபபுக்கு மறுக்காது மறுநொடியே "யா ஷ்யூர் டியர்" என்று ஆரம்பித்தோம் .மிக

நாய் காதல்

****நாய் காதல்*****  (கதையல்ல நிஜம்)   நேற்று கோவில்பட்டியில் இருந்து நெல்லை செல்வதற்காக பேருந்தில் ஏறினேன்.பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் பெரும்பாலும் ஜோடி ஜோடியாக கல்லூரி இளசுகள் அமர்ந்திருந்தனர்.நல்லவேளையாக கணடக்டர் ஸீட் ப்ரீயாக இருந்ததால் அதில் அமர்ந்துக்கொண்டேன்  (தனியாக தான்).காதில் செவிட்டு மெஷினை (ஹியர்போன்) மாட்டிக்கொண்டு இளையராஜாவை ஓடவிட்டேன்.சற்றே கண் அயர்ந்தேன்.திடிரென்று விழித்துப் பார்த்தபோது எனக்கு முன் இருக்கையில் ஒரு புது ஜோடி முளைத்திருந்தது.இரண்டுமே கல்லூரி சிட்டுகள்.கொஞ்ச நேரம் நல்லாதான் போயிட்டு இருந்தது.திடிர்னு அந்த பய பைய கைய நீட்டுனான்.அந்த பிள்ளையும் யாரும் பார்க்காங்களானு பார்ததுட்டு கைய கோர்த்துக்கிச்சு.அப்ப நான் பார்க்காத மாதிரி இருந்துகிட்டேன்(காறித் துப்புபவர்கள் எச்சில் தெறிக்காமல் துப்பிக்கொள்ளவும்)கைய பிடிக்கிறதும், தோள்ல சாயுறதும், அடிச்சுக்கறதும்-னு ஒரே ஜாலி தான்(யாருக்கோ).இதாவது பரவாயில்ல தமிழ்படம்,எனக்கே ஒருமாதிரி இருந்துச்சு சரி போதும்னு வேறப் பக்கம் திரும்புனா அங்க இங்கிலிஷ் படம் ஓடுது!!! இதையெல்லாம் பார்க்கும்போதே எனக்கு திடிர்னு

முன்னொரு நாள்

*"முன்னொரு நாள்"*                                                                                                 -தமிழ்மறவோன்  "எதிரெதிர் திசையில்  சீறும் வாகனங்களை எதேச்சையாக கடப்பதுப் போல் அவளைக் கடக்க முடியவில்லை,  அவளுக்கும் தான்.தள்ளியிருந்த மரத்தடியில் சற்று தள்ளி தள்ளியே  நின்றுகொண்டோம்.  மின்னலாய் வந்து தெறித்தன அவளுடனான என் நினைவுகள். அவற்றை மறைக்க முயன்று தோற்றவனாய் அவளைப் ஏறிட்டுப் பார்த்தேன்;  அவளும் பார்த்துக்கொண்டுதானிருந்தாள்!!!  அவள் கண்கள் பேசத் துடிப்பதைப் போல் எனக்கு தோன்றியது.  ஒருவேளை பிரம்மையாய் இருக்குமோ???  இருக்கக்கூடும்...  என் சொல் வெட்டுண்ட மின்சாரமாய் ஆனது.  ஆம்,போனது ஏனோ வழக்கம்போல் திரும்பி வரவேயில்லை!!!  அவளுக்கு எப்படியோ தெரியவில்லை??  "சரி போதும்"கிளம்பலாம் என்பது போல் கரம் நீட்டினாள், பிரிய விருப்பமில்லை என்றாலும் சம்பிரதாயமாக  நானும் கரம் குலுக்கி இதழ் விரித்து வராத புன்னகையை வரவழைத்து விடைப்பெற்றேன்.  வீடு திரும்பி என்னறை நுழைந்து, அக்கரம் நுகர்ந்தேன்;  அதில் அவளது மணம் மாறாமல் அப்படியே இருந்தது.  அவ

அந்த பத்து நிமிடம்

*"அந்த பத்து நிமிடம்"*                                                      -தமிழ்மறவோன்   பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் வழக்கம்போல தனியாக அமர்ந்திருந்தேன்.  ஓட்டுநரின் எதிரில் ஐவர் அமரும் இருக்கையில் ஒரு தாயும் மகளும் மட்டும் அமர்ந்திருந்தனர்.எங்கோ பார்த்துக் கொண்டிருந்த நான் தற்செயலாக அப்பக்கம் திரும்பினேன். அந்த மகள் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகியாக இருந்தாள். அவள் அணிந்திருந்த டாப்ஸும் ஜீன்ஸும் ஆபாசமாக இல்லை. பார்க்க பார்க்க ஆசுவாசமாக தான் இருந்தது. நான் பார்த்தபோது ஜன்னலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஜன்னல் கம்பி இவள் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியில் துள்ளியது போலிருந்தது. திடிரென்று, அவ்விருவரும் என்னை நோக்க, நான் என்ன எதிர்வினை செய்வதென்று தெரியாமல் தலை தாழ்த்தி தரை நோக்கினேன்.சிறிது நேர நிதானத்திற்கு பின்னர், மெதுவாக அவளைப் பார்த்தேன். இம்முறை அந்த அம்மா என்னை பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அப்பெண்ணை ரசிக்க துணிந்தேன். நான் பார்ப்பதை பார்த்த அப்பெண்ணும் என்னை நோக்கினாள். "அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினான்". அவள் உதடுகளில

முத்தம்

முத்தம்  " இமை மூடி   இதழ் பதித்து          இப்படியே இ(ற)ருந்துவிடலாம் வா!!!! "                                                                                                               - தமிழ்மறவோன் 

விழிமொழியாள்

Image
விழிமொழியாள்                                                                                     **கொலைக்காரி**                                                               " இமை விரித்து  விழித் திறந்து  உடல்  நுழைந்து  உயிர் துளைக்கும்  கொலைக்காரி  நீ"  *************************************** "வில்லாய் ஏறி இறங்கும்  அப்புருவமது எனை  இரக்கமின்றி இழுத்துச்  சென்று யாருமற்ற   இன்பவெளியில்  இட்டுசெல்கிறது ..  இன்பத்தில் தனியாய்   உழல்கிறேன் நான் !!!" ************************************** **சாக விரும்புகிறேன் ** "சாக விரும்புகிறேன் நான்  ஆம்,கத்தியாய் சீறும்   அவ்விரு கண்களால்  கொன்றுவிடு.. அந்த  மரணமும் துச்சம் தான்"  -தமிழ்மறவோன் 

நரைத்த மீசை

நரைத்த மீசை"(குறுங்கதை) 28 February 2015 at 10:46 Public Friends Only Me Custom Close Friends Palayamkottai Area See all lists... "Last bench student" Family Go Back *****"நரைத்த மீசை"***** ------------------------- அவளுக்கு எப்படியேனும் அதை செய்து விட வேண்டுமென்று ஆசை. தனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அதை செய்வதற்கு தான் முயன்றுக் கொண்டிருக்கிறாள்.அவளது நேரம் வீட்டில் அவளது அம்மாவோ குட்டி தங்கையோ இருந்துக்கொண்டே யிருந்தனர்.அவளால் அதை செய்ய முடியவில்லை.வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை செய்ய முடியாது.ஒருவேளை செய்து மாட்டிக்கொண்டால் அசிங்கம் என்றெண்ணி செய்யாமலிருந்தாள்.இன்று அவளது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் திருமணத்திற்கு அனைவரும் சென்றுவிட்டனர்.அனைவரும் சென்றபின் வாசற்கதவை தாழிட்டு உள்ளே வந்தாள்.அறையின் அனைத்து சன்னல்களையும் அடைத்து திரைச்சீலையை இழுத்துவிட்டாள்.இதயம் ஏனோ அவளையறியாமலே வேகமாய் அடித்தது.அறைக்குள் வந்து அதை செய்ய முனைந்தாள்.அப்போது வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே,பதற்றத்துடன் அடித்து பிடித்து இயல்பாய் இருப்பதாய் நடித்து கதவை திறந்

காத்திருத்தல்

Image
காத்திருத்தல்   அவள் மட்டும் தனியாக இருந்தாள்  திருட்டுப் பூனையாய் வீட்டினுள் நுழைந்தேன்  எட்டாக்  கொடிக் கம்பியில் எட்டி எட்டி  துணிக் காயப் போட்டுகொண்டிருந்தாள்  பின்னால் சென்று , அடிவயிற்றுக்கு மேல் விரல் பதித்து, தோள் இடுக்கில் முகம் புதைத்தேன்.  கண்டு கொண்டாள் , நானென்று  விருட்டென்று திரும்பினாள் !!!!! கரங்கள் அவளிடையில் நின்றுகொண்டது  பத்திரமாக ... மூச்சும் மூச்சும் கலந்துகொண்டன  அடுத்தென்ன??? -என்பதுபோல் பார்த்தாள்  சுவற்றில் சாத்தினேன்  கால்களால் அண்டைகொடுத்து கொண்டாள்  கண்கள் ஏனோ மூடியே கிடந்தன , வேகமாய் வெளியேறினேன் நான்  காத்திருக்கட்டும் !!! பெற்றுகொள்வதை விட , காத்திருத்தல் சுகமானதே !!!                                                     _  தமிழ்மறவோன் .    

தனுமை

Image
                                                                            தனுமை                                                -  வண்ணதாசன்                   இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே வீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள். ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது. இந