Posts

Showing posts from September, 2017

உடை(யும்) உளவியல்!

உடை ( யும் ) உளவியல் ! 0 எழுதித் தீரா விஷயங்களில் இந்த உடை விஷயமும் ஒன்று . ’ ஆள் பாதி ஆடை பாதி ’ என்பது பழமொழியாக இருந்தாலும் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது . கல்லூரி காலங்களில் இதுகுறித்து அவ்வளவாக புரிதல் இருந்திருக்காது . மேம்போக்காக கடந்திருப்போம் . வேலைக்கு சென்ற பின் மெதுவாக இதற்கு பின் இருக்கும் உளவியலும் இதன் முக்கியத்துவமும் புரியத்தொடங்கும் . சம்பவம் 1 இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வைத்திருந்த ஷூ முன்பகுதியில் சிறிது கிழிந்துவிட்டது . பொதுவாகவே இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் கடந்துவிடுவேன் . அப்படித்தான் ஒரு மாதம் ஓடியது . கொஞ்ச நாள் கழித்து அதை காலில் அணிந்து நடக்கும்போதெல்லாம் அனைவரும் என் காலை பார்ப்பதுபோலவே தோன்றும் . அதற்காகவே அலுவலகத்தில் அதிகம் வெளியே அலையாமல் இருந்தேன் . ஒரு கட்டத்தில் என்னால் வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை . நானும் பெவி - பாண்ட் போட்டு எல்லாம் ஒட்டி பார்த்தாலும் எதுவும் சரிவரவில்லை . இதற்கு மேலும் தாங்காது என்ற ரீதியில் ஒரு