Posts

Showing posts from July, 2018

கேசம் - நரன்

Image
” கேசம் ” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து … சமகால தமிழ் இலக்கியச் சூழல் பெரும்பாலும் சிறுகதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது . என்னதான் எண்ணிக்கை அளவில் கவிதைகள் அதிகமாக எழுதப்பட்டாலும் , பிரதான இடம் சிறுகதைகளுக்குதான் . பொதுஜன வாசிப்பை ஒப்பிடுகையில் , இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஓரளவு அதிகமாக வாசிக்கப்பட்டும் , விவாதிக்கப்பட்டும் வரும் வடிவமும் சிறுகதை தான் . பழைய பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் தேடிய வரை , பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுத வந்தவர்களை காட்டிலும் சமீப காலமாக அதாவது 2010- க்கு பின்னர் எழுத வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிகிறது . புதிய அலை எழுத்தாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய இவர்களில் பெரும்பாலானோர் நன்றாக எழுதி வருகின்றனர் . சிலர் , எழுத பழகி வருகின்றனர் . இந்த நிலையில் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவரும் புத்தகங்கள் குறித்த விரிவான உரையாடலோ , காட்டமான எதிர்வினைகளோ வருகிறதா என்றால் , இல்லை என்பதுதான் பதில் . அதுமட்டுமல்லாது , இப்போதெல்லாம் இரண்டு வரி விமர்சனங்கள் வெகு பிரபலமாகி வர