Posts

Showing posts from July, 2017

வண்ணதாசன் 👌💖

Image
வண்ணதாசன்  👌 💖 ~ பாராட்டு மிக முக்கியமான வஸ்து. நம்மை மேலும் மேலும் இடைவிடாமல் இயங்க வைக்ககூடிய வல்லமை அந்த பாராட்டிற்கு உண்டு. இந்த மாதம் தடம் இதழில் வந்திருக்கும் நரனின் ’மூன்று சீலைகள்’ கதை சமீபத்தில் நான் வாசித்த கதைகளில் சிறந்த கதையாக தெரிந்தது. எப்போதுமே ஒரு கவிஞர் எழுதும் சிறுகதை எனக்கு பிடித்ததாகவே அமைந்துவிடுகிறது. அப்படித்தான் எனக்கு, கல்யாண்ஜியை விட வண்ணதாசனையே பிடிக்கும். அந்த வகையில் நரனின் லாகிரியை விட ’காது’ம், ’மூன்று சீலைகளும்’ அதிகம் பிடித்து இருக்கிறது. இதுகுறித்து யாரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. உப்பு சப்பில்லாத விசயத்தை ஏத்திவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பாக்கியம் சங்கர் ஒரு விழாவில் பேசியிருந்தார், எழுத்தாளனை அவன் எழுதும் காலத்தே அவன் படைப்பு வெளிவரும் காலத்திலையே பாராட்டிவிடுங்கள். அவன் சென்ற பின்பு ஆஹா..ஓஹோ என்று எவ்வளவு வானளாவ புகழ்ந்தாலும் அதை கேட்கவேண்டிய இரண்டு செவிகளை அந்த பாராட்டு சென்றடையாது. அதுதான் உண்மையும்கூட. வண்ணதாசன் இதை சரியாக செய்திருந்தார். ’தடம்’ வெளிவந்த மறுநாளே வரவனை செந்திலின் ’காலிகிராபி’ கதையையும் ’முன்று சீலைகள்’ கதைய

போதை

Image
நண்பர் மனோ( Mano Red ) போதை பழக்கத்தை முன்வைத்து தினமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதுபற்றி எனக்கும் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. சிறு வயதில் நம்மைவிட வயது மூத்தவர்கள் உடனான பழக்கம் அனைவருக்கும் இருந்தே இருக்கும்.வீட்டு அருகில், விளையாட செல்லுமிடத்தில், பள்ளியில், அண்ணனின் நண்பர்கள் இப்படி பல இடங்களில் உண்டு. அவர்களது பேச்சு, ஸ்டைல், சொல்லாடல்கள் என்று அனைத்தும் நாம் அறியாமல் நம்மை தொற்றிக்கொள்ளும். அப்படித்தான் என்னுடன் படித்த ஒருவன் அவர்களது ஏரியாவில் இருக்கும் பெரிய பசங் களிடம் நட்பானான். விளையாட்டு, பேச்சு என்ற அளவில் இருந்த நட்பு கொஞ்ச காலத்தில் வாடா, போடா, மச்சி, மாப்ள என்ற அளவில் முன்னேற்றம் அடைந்து இருந்தது. மெதுவாக அவர்களது வட்டத்துக்குள் சிக்க தொடங்கினான். தமிழ் வாத்தியார் ”மயிரு..” என்று திட்டினாலே, ”என்னல இவரு இப்படியெல்லாம் கெட்ட வார்த்த போடுதாரு” என்று மலைத்து நிற்கும் எங்களிடம் புதிய புதிய கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொண்டு வந்து சொல்லி எங்களுக்குள் ஒரு திறப்பை நிகழ்த்துவான். விடுமுறை நாட்களில் பள்ளிக்கு எதிரில் கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு பின்புறம் இருக்கும் செய

முத்த_தினம்

அலுவலக லிப்ட் இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு வரும் இடைவேளையில் பரிமாறப்படும் திக்..திக் முத்ததிற்கு தித்திப்பு அதிகம் என்றுணர்ந்த தினமின்று.. -பிகு "இன்று சர்வதேச முத்த தினமாமே??" என்றாள்,  தேகம் சர்வத்திலும் நித்தம் முத்த யுத்தம் புரியும் நமக்கெதற்கடி தனி தினம்??? # பிதற்றல்கள்

அவர்களிருவரும்

அதிகாலை ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தின் கிரில் கேட்டருகே ஒரு நாய் இன்னொரு நாயை புணர்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த கணவன் முட்டியால் மனைவியை இடிக்கிறான் அவள் வெட்கத்தை மறைக்க முயன்றவளாய் தோற்கிறாள், அவர்கள் புதிதாய் திருமணமானவர்களாக இருக்கவேண்டும்.  ஒரு யுவதிகள் கூட்டம் அந்நாய்களை கடக்கிறது, கொல்லென்று ஒரு சிரிப்பு சத்தம்!! காபி போன்றிருக்கும் ஒரு பானத்தை குடித்துக்கொண்டே யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த பின் ஓரக்கண்ணால் அதைப் பார்த்து உள்ளூர ரசிக்கிறான் ஒரு டீ-சர்ட் இளைஞன்; "ஏ செவத்த மூதிகளா, இதுகளும் மனுசன மாதிரியே ஆரம்பிச்சுட்டுக" என்று காறித்துப்புகிறார் கிழவர் ஒருவர் எச்சிலும் சளியும் கலந்து விழுந்து, மண்ணில் வடிவமில்லா ஒரு வடிவத்தை உண்டாக்குகிறது. "இந்த நாய் முகத்த பாரேன் எந்த உணர்ச்சியுமில்லாம, எந்த சந்தோஷமும் இல்லாம தேமேனு கால விரிச்சு நின்னுட்டு இருக்கு, நம்மள மாதிரியே; அடுத்த ஜென்மத்துல பொம்பள நாயா கூட பொறந்துற கூடாதுடி" என்று கஸ்டமரை தேடிச்சென்றனர் அவர்களிருவரும்!!! -பிகு

பளிச்சென் றுந்தன் ஞாபகங்கள்

உன் தோப்பனார் ஆடிய ஊஞ்சலின் கிறீச் ஒலி.. உன் அண்ணா கசியவிட்ட இளையராஜாவின் சோக கீதங்கள், உன் ஜமுனா அக்கா நடையிலமர்ந்து கட்டிய காட்டு மல்லி.. உன் அம்மா சுற்றி வந்த துளசி மாடம்.. உச்சிக்குடுமியிட்டு பாவாடை நுனிப்பிடித்து மழலை மொழிப் பேசி விச்சு மாமா என்று ஓடிவந்து ஒரண்டை இழுப்பாயே??? இவையாவுமின்றி இருள் கவிழ்ந்து கிடக்கும் அவ்வீட்டினை கடக்கையிலெல்லாம், பளிச்சென் றுந்தன் ஞாபகங்கள் மஞ்சரி!!! -பிகு

ஏன் இந்தி கற்க வேண்டும்?

ஏன் இந்தி கற்க வேண்டும்? 0 இந்தி கற்காததனால் நாம் 50 வருடங்கள் பின்னோக்கி இருக்கிறோம் என்று தோழர். சாரு நிவேதிதா கூறியிருப்பதையும், அது தொடர்பான சில பதிவுகளையும் காணமுடிகிறது. இந்த நேரத்தில் இந்தி கற்பது தொடர்பான எனது கருத்தையும் சொல்லிவிட்டால் கடமை முடிந்துவிடும். கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை வடமாநிலங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அலகாபாத், தில்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு வெவ்வேறு நண்பர்களுடன் வெவ்வேறு காலக்கட்டத்தில் சென்று வந்தேன். அந்த குழுவில் எனக்கு மட்டும் ”தோடா தோடா இந்தி மாலும்”. மற்றவர்கள் எல்லாம் ”ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா” ரகம் தான். நானும் இந்தி பண்டிட்லாம் இல்லை. ஒரு இடத்திற்கு செல்ல வழி கேட்கவும், பொருட்கள் வாங்கும் இடத்தில், ”ரேட் பகுத் ஜாஸ்தி ஹை”, ”ஏக் சௌ ருபே” என்ற அளவில் பேரம் பேச மட்டுமே தெரியும். மேலும் சில இடங்களில், தெரிந்த ஒன்றிரண்டு வார்த்தைகளை கோர்வையாக பேச தெரியாமல் தனித்தனி வார்த்தைகளாக பேசி சமாளித்துவிடுவோம். ஒருவாரக்கால பயணமாக சென்ற அலகாபாத்திலும், தில்லியிலும் பெரிதாக ஒன்றும் பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், வேலை நிமித்தம் டிரெ

இக்கவிதை அவளுக்கானது

தியாகராஜநகர் ரயில்வே கேட்டை கடக்க காத்து நிற்கலாம்.. அன்பு நகர் பூங்காவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கலாம்.. புனித பேதுரு ஆலயத்தில் முட்டிக்கால் போட்டு முக்காடிட்டு அமர்ந்திருக்கலாம்.. சித்தி விநாயகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ஸ்கூட்டியில் பறக்கலாம்.. வடை கடையில் சட்னி யில்லாமல் உளுந்த வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம்.. இரட்டைப் பனை அருகே கனரா பேங்க் ஏடிஎம்மில் பணமெடுத்துக் கொண்டிருக்கலாம்.. வண்டியில் அவள் கணவனுடன் செல்லுகையில் என்னை திரும்பிப் பார்த்து பழைய நினைவுகளை கிளறிவிடலாம்... அவளுக்கு பெயர் ஏதோ ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்.. அவள் என் "முன்னாள் காதலியாக" இருப்பதால் இக்கவிதை அவளுக்கானது!!!! -பிகு

சுஜாதா

சுஜாதா இலக்கியவியாதியா இல்லையா என்ற வாதமெல்லாம் ஒருபுறம் நடந்துக்கொண்டே இருக்கட்டும். ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் வாசிப்புலகுக்குள் ஒருவரை கொண்டுவர சுஜாதா நிச்சயமாக தேவைப்படுகிறார் என்றுதான் சொல்லவேண்டும். சுஜாதாவின் எழுத்தை உலகத்தரம் வாய்ந்த எழுத்தென்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் சுஜாதா அளவிற்கு தமிழ் படைப்புலகில் யாரும் எழுதி இருக்கிறார்களா என்று கிளறிப்பார்த்தால், யாருமேயில்லை இதுவரையிலும்; இனிமேலும் வருவார்களா என்று சொல்ல முடியாது. வாசிப்புக்குள் வரும் ஒருவனை தமிழ ் இலக்கியத்தை நோக்கி மடைமாற்ற சுஜாதா பெரிதும் உதவுகிறார். இந்த தலைமுறையின் பெரும்பாலான வாசகர்களுக்கு தாங்கள் வாசிக்க தொடங்கிய பின்னான முதல் அறிமுகம் சுஜாதாவாகத்தான் இருக்கும்; சிலருக்கு ராஜேஷ்குமார், பி.கே.பி வகையறாக்கள் முதல் வாசிப்பாக இருந்தாலும் சுஜாதாவை தாண்டித்தான் அனைவரும் வந்தாக வேண்டும். அப்படி வருகையில், ஒரு பெரும் சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறார் சுஜாதா. அடடே.., இந்த கதைகளெல்லாம், நாவலெல்லாம் செம்ம இண்ட்ரெஸ்டிங்கா இருக்கே என்று, தொடர்ந்து வாசிக்க தொடங்குவான். ஒரு கட்டத்தில் ம

தேங்க்ஸ்க்கா

"தேங்க்ஸ்க்கா" ------------------------------ "ஏய், காசுக் கொடு, அக்காவுக்கு தீவாளி காசு கொடும்மா" என்று செந்தூர் எக்ஸ்பிரஸின் S6 பெட்டியில் என்னிடம் கேட்கிறாள் நங்கையொருவள், திரு.நங்கையொருவ(ள்);  "காசிலக்கா" என்று மறுதலிக்கிறேன், பொய் சொல்லுகிறேன். பொய் இயல்புதானே; அதைத்தானே இத்தனை நாள் பழகியிருக்கிறோம்!! "நல்ல அழகா ராஜா மாதிரி தான இருக்க, அக்காவுக்கு கொடுத்தா என்னவாம்??" என்று கன்னம் கிள்ளினாள். சட்டென்று பூரித்துவிட்டேன், கன்னம் கிள்ளி என்னை ராஜாவென்று யாரும் இதுவரை கூறியதில்லை. சென்றுவிட்டாள்; 'அவர்களை' எப்போதும் அக்காவென்றே நான் அழைக்கிறேன். அக்கணம் அவர்கள் கண்களில் ஒரு ஒளி தோன்றுவதைப் போலிருக்கும் அல்லது அவ்வாறு தோன்றுவதாக நான் நினைத்துக்கொள்வேன். மீண்டும் ஒருமுறை என்னைக் கடந்துச் சென்றாள், மீண்டும் கன்னம் கிள்ளி "ராஜா மாதிரி இருக்க" என்றாள், அவள் கொஞ்சம் தள்ளிச் சென்ற பிறகு கத்திச் சொன்னேன், "தேங்க்ஸ்க்கா". என்னையுமறியாமல் அந்த "அக்கா"வில் அழுத்தம் கூடியிருந்தது; அந்த கண்களின் ஒளி, பின் மண்டையில் தெரி

நியாயம்

எதுவாக இருந்தாலும் நமக்கு ஏதுவாக இருந்தால் அதுவே நியாயம் எனப்படும்!!! -பஞ்சகல்யாணி

பரீட்சை_ஹாலில்!

விடை தெரியாமல் தவிப்பவனை விட, 'இடை' தெரிவதால் தவிப்பவனே அதிகம்!!! # பரீட்சை_ஹாலில் -பஞ்சகல்யாணி தெரியா விடையை விட, தெரியும் 'இடை'யே நம்மை பாடாய்ப்படுத்தும்.. # பரீட்சை_ஹாலில் !! -பஞ்சகல்யாணி

வேர் பிடித்த விளை நிலங்கள்!

வேர் பிடித்த விளை நிலங்கள்! 0 நேற்றைய தினம் ஜீவா படைப்பகம் வெளியீடாக எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் ”வேர் பிடித்த விளைநிலங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தி.நகர் தக்கர் பாபா பள்ளி, வினோபா அரங்கில் நடைபெற்றது. இதுகுறித்து, ஒரு வாசகனாக, எழுத்தாளனாக, பதிப்பாளனாக கார்த்திக் புகழேந்தி அதிகம் எழுதியிருக்கிறார். நான் எழுத இருப்பது என்னவென்றால், ஒரு புத்தக வெளியீடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேற்றைய நிகழ்வு ஒரு உதாரணம். ஒரு துண்டு அல்வாவுக்காகவும், ஒரு கோப்பை கருப்பட்டி காப்பிக்காகவும் இதை சொல்லவில்லை. இதுவரை நான் சென்ற இலக்கிய நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் பெரும்பாலும் தனிநபர் துதி பாடுவதாகவும், அடிவருடுவதாகவுமே இருக்கும். ஆனால், நேற்றைய நிகழ்வு அதற்கு நேர்மாறாக இருந்தது. ”அக்ச்சுவலா இந்த புக் இன்னிக்கு மார்னிங் தான் என் கையிலயே கிடைச்சது பாத்துக்கோங்க, சோ நான் இத முழுசா படிக்கல” என்று சொல்வது இப்போது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது. ஒருவேளை புக்கை முன்னதாகவே கொடுத்து படித்துவிட்டால் பேச வரமாட்டார்களோ என்று பதிப்பாளர் செய்யும் உத்தியா இதுவென்றும் தெரியவில்

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!

நமக்கும் நம் உடன் பிறந்தவர்களுக்கும் வெகு அரிதாக சில விஷயங்களில் ஒத்துப்போகும். அப்படி ஒரு விஷயம் தான் இந்த ”விஜய் ரசிகத்தனம்”. நானும் எங்கக்காவும் ஒருகாலத்துல விஜய் வெறியர்களாக இருந்திருக்கிறோம். எப்போ இருந்து விஜய் பிடிக்கும்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியாது, ஏன்னா எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே ஹீரோனா அது விஜய் மட்டுந்தான். எங்கள் வீட்டுக்கு வரும் பெரும்பாலான கிரீட்டிங் கார்டுகளில் பத்ரி விஜய்யோ, திருமலையில் காலரை கடித்தவாறு நிற்கும் விஜய்யோ தான் இருப்பார்கள். ஒரு கட்டத்தி ல் எல்லாம் விஜய் பைத்தியம் தலைக்கேறிவிட்டது. உதாரணமாக, திலி.ஜங்ஷன் ராம் (Ram-Muthuram Cinemas) தியேட்டரில் ஷாஜஹான் படம் பார்த்துவிட்டு, விஜய் போட்டிருக்கும் அந்த ”நெக் செயின்” மேல் அப்படி ஒரு கிரேஸ். அழுது அடம்பிடித்து அதேமாதிரி கழுத்துக்குள் நிற்பதுபோல் பட்டையான செயினை வாங்கியும்விட்டேன். அப்பறம் யூத் படத்தில் வரும் அந்த ”சர்க்கரை நிலவே” பாடல். அணில் ஸ்டோர்ஸில் அதேப்போல் அதே செங்காமட்டி கலரில் அரைக்கை சட்டையும் ஊதா ஜீன்ஸும் வாங்கியது இன்னும் நினைவிருக்கிறது. திடீரென்று விஜய்யின் மீதான கிரேஸ் கொஞ்சம் கொஞ்சமாக கு

சௌந்தர்யா

பொழுது போகவில்லை; போரடிக்கிறது; என்ன பண்ணலாம் என்று யோசிக்கும்போது நமக்கு பிடித்த வீடியோ சாங் ஒன்றை பார்ப்போம் இல்லையா?? எனக்கு அப்படி தோணும்போதெல்லாம் நான் பார்க்கும் பாடல் இதுதான். சூப்பர் ஸ்டாரை விட்டுவிடுங்கள்; ஏ.ஆர்.ரகுமானையும் விடுங்கள்; வைரமுத்துவையும் பிறகு பார்க்கலாம். நான் சொல்ல வருவது சௌந்தர்யாவை பற்றி. எனக்கு எதும் ஃபோபியாவா என்று தெரியவில்லை. 80,90-களில் திரையில் தோன்றிய நடிகைகளை அதிகம் பிடித்து தொலைக்கிறது. அதில் முக்கியமானவர் ”சௌந்தர்யா”. ”கோணவாய்” என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இவருக்கு அப்படித்தான். (இது உருவத்தை கேலி செய்வதற்காக சொல்லவில்லை) நமக்கு பரிச்சயமானவர்களில் நடிகர் அர்ஜூன், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் இப்படித்தான் இருக்கும். கூர்ந்து கவனித்தால் தெரியும் இவர்கள் சிரிக்கும்போது கூடுதல் அழகாக இருக்கும். கவனித்து பாருங்கள். பாடலின் தொடக்கத்தில் ”ஹோ..” என்றொரு குரல் வரும். அதற்கு இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷனில் இருந்தே நம்மை கவர ஆரம்பித்து விடுகிறார். ஒரு ரோஜாப்பூ மேலிருந்து கீழிறங்கி இடை தழுவி வந்து நிற்கும் பாருங்கள், நாம

கிரீடம்

நம் தலையில் கிரீடம் என்றெண்ணி சுற்றிக் கொண்டிருக்கிறோம், அவர்களுக்கு அது ரெண்டு கொம்பாக தெரிகிறது. நிதர்சனம் என்னவென்றால்,  மெய்யாலுமே அது கொம்புதான்!

விளிம்புக்கு அப்பால் சிறுகதை தொகுப்பை முன்வைத்து

விளிம்புக்கு அப்பால் சிறுகதை தொகுப்பை முன்வைத்து 0 சமீபத்தில் வெகு ஆர்வமாக வாசித்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று . அதற்கு முக்கிய காரணம் , இதில் எழுதி இருப்பவர்களில் பெரும்பாலானோர் என் வயதை ஒத்தவர்கள் . ( கி . ரா . எழுத வரும்போது அவருக்கு வயது 35- க்கு மேலாம் . இதில் ஒரு கதை எழுதியிருக்கும் நாக பிரகாஷின் வயது 19!) இதில் வெளியாகியிருப்பது சிலரின் முதல் சிறுகதை , மேலும் இதிலிருக்கும் சிலருடன் பேஸ்புக் பழக்கமும் உண்டென்பதால் இந்த தொகுப்பை வாசிக்க அதிக ஆர்வம் காட்டினேன் . மொத்தம் 14 கதைகள் . ஒவ்வொன்றாக எழுதுகிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் . 1.       நின்று கொல்லும் – அரசன் ஒரு அசலான கிராமத்து கதை . நமக்கு அதிகம் பழக்கமில்லாத கிராமத்தில் புழங்கும் வார்த்தைகளை அங்கங்கு பயன்படுத்தியிருக்கிறார் . மேலும் , கிராமங்களுக்கே உண்டான சில விஷயங்களை உட்புகுத்தி நம்மை அந்த சூழலுக்குள் அழகாக அழைத்து செல்கிறார் . ஒரு சிறுகதைக்கு உண்டான வரைமுறை என்று நாம் சிலதை வகுத்து வைத்திருக்கிறோம் இல்லையா ? ( தொடக்கம் - உச்சம் -