Posts

Showing posts from October, 2016

கிழிந்த ரவிக்கை

கிழிந்த ரவிக்கையினூடே  பிதுங்கும் முலையை வெறிக்கிறது ஒரு தொந்தி!!

ஞாபகங்கள்

இருள் கவிந்த அந்த வீட்டினை  கடக்கையி லெல்லாம் பளிச்சென் றுந்தன் ஞாபகங்கள்!!!

"தியாகிகள்"

"தியாகிகள்" --------------------- பஸ்ல ஒரு கூட்டத்துக்காக திருவான்மியூர் போயிட்டிருக்கும்போது, சென்னை வந்து இத்தன நாள் ஆச்சு எங்கயுமே போகலையேனு திடிர்னு தோண, சட்டுனு ஜன்னல பார்த்தேன் "தியாகிகள் மண்டபம்" உடனே இறங்கி, உள்ள போயாச்சு. நம்ம தியாகிகள் அப்படி என்னதான் பண்ணிருக்காங்கனு பார்த்துட்டு வெளிய வந்தேன். நல்ல அருமையான சூழல்; புல்வெளி என்று பார்க்கவே ரம்மியமாய் இருந்தது அந்த இடம். இதுமட்டுமில்லாம, உயிரோட இருக்குற நிறைய தியாகிகள் த ங்களோட வீடு, படிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு வந்து நாட்டோட வளர்ச்சிக்காக(!!!) படு பயங்கரமா "போராடிகிட்டு" இருந்தாங்க; (என்ன வளர்ச்சினு கேக்கக்கூடாது) அதுவும் தனியா இல்லைங்க ஜோடி ஜோடியா!!! "நீ திரும்ப ரூம்முக்கே போயிடு சிவாஜினு" உள்ளயிருந்து காந்தி சொன்ன மாதிரியே கேட்டது. நமக்கெதுக்கு வம்புன்னு ரூமுக்கு வந்து பேசாம இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டேன். (அநேகமா காந்தி மண்டபத்துக்கு தனியா போன முட்டாள் நானா தான் இருப்பேன்னு நெனைக்கேன்) -பஞ்சகல்யாணி

"பாராட்டுங்கள்"

"பாராட்டுங்கள்" ------------------------------ யாருக்கேனும் ஏதேனும் நல்லது செய்ய  நினைத்தால் அவர்கள் செய்த நற்செயல்களை கண்டறிந்து பாராட்டுங்கள். பாராட்டினால் கிடைக்கும் போதை அளப்பரியது. மது மாதுவினால் கூட பாராட்டு தரும் போதையை தந்துவிட முடியாது. அது ஒரு Virtual போதை. பாராட்டு என்பது ஒரு Temporary Orgasm போன்றது. யாரேனும் நம்மை பாராட்டினால் அதனுடைய Impact அந்த நாள் முழுதும் நம்மை உற்சாகமான மனநிலையில் வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு பேஸ்புக்கையே எடுத்துக்கொள்வோம், இதில் Like என ்பது இப்போது Give & take policy ஆகி விட்டது. அதை விட்டுவிடுங்கள். கமெண்டில் யாராவது பாராட்டினால் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதேயிது இன்பாக்ஸில் வந்து நம்மை பாராட்டும் போது நான் சொன்ன அந்த போதை கிடைக்கத் தொடங்கும். அது நம்மை மேலும் கவனமாக சிரத்தையெடுத்து எழுதச் சொல்லும். இது இயல்பாகவே நமது Efficiencyயை கூடச் செய்யும் which inturn increases our productivity too. "பாராட்டுகளை தலை வணங்கி ஏற்றுக் கொள்ளுங்கள்; தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்" பிகு:- நான் இப்போது அனைவரையு

அனந்தபுரி எக்ஸ்பிரஸும் -அவளும்!!

அனந்தபுரி எக்ஸ்பிரஸும் -அவளும்!! ------------------------------------------------------------- அவள் என்னைப் பார்த்திருப்பாளா என்று தெரியவில்லை. எக்மோர் ஸ்டேஷனின் எட்டாவது பிளாட்பாரத்தில் லோக்கல் டிரெயினுக்காக காத்திருந்தேன். என் எதிரில் ஏழாவது பிளாட்பாரத்தில் அவள் தந்தையுடன் அமர்ந்திருக்கிறாள். எங்களிருவருக்கும் இடையில் ஜோடி சேரா இரு தண்டவாளங்கள். என் யூகத்தின் படி அவள் அனந்தபுரிக்காக தான் காத்திருக்க வேண்டும். சிவப்பும் ஊதாவுமான அந்த ஆர்.எம்.கே.வி டிராவல் பேக்கை மடியில் அமர் த்தி அதன் மீது கவிழ்ந்திருந்தாள். முகம் தெரியவில்லை. ஆனால், அந்த குழல்?? ஆம், அவள் ஒரு கார்மேககுழலி!!! பின்னிய ஜடையை அவிழ்த்துவிட்டால் கருநிற அருவி விழும். உச்சி தொட்டு உள்ளங்காலுக்கு ஒன்றரை அடி மேல் வரை நீண்டிருக்கும் கூந்தலது. இந்த குழல் தானே ஒரு சமயத்தில் என் பாடுப்பொருளாய் இருந்தது? இந்த கருநிற அருவியில்தானே நான் நனைந்து ஆனந்தப்பட எண்ணியது? என்னென்வோ எண்ணங்கள் எனைச் சூழ, திரும்பி அவளைப் பார்த்தேன், "சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு வண்டி ஏழாம் நடைமேடையில் இருந

எத்திராஜ் மாணவி- சமூக ஆர்வலர் (அதிகப்ரசங்கி)

எத்திராஜ் மாணவி- சமூக ஆர்வலர் (அதிகப்ரசங்கி) ------------------------------------------------------------------------------------- நேத்து பஸ்ல வரும்போது, எனக்கு பின்னாடி உட்கார்ந்து யிருந்த ஒரு அதிக ப்ரசங்கி, கண்டக்டர் செய்ய வேண்டிய வேலைய அவரே பார்த்துட்டு இருந்தாரு. "படில நிக்காதப்பா உள்ளப்போ உள்ளப்போ உட்காரு"னு சொல்லிட்டே வர்றாரு. எத்திராஜ் ஸ்டாப்புல ஒரு காலேஜ் பிள்ள ஏறி, உட்கார இடம் இல்லாம நின்னுட்டே வந்துச்சு. என் பக்கத்துல ஒரு தாத்தா உட்கார்ந்தது இருந்தாப்ல. என் மானங்கெட்ட மனசு இப்படி கணக்கு போடு து, "இந்த தாத்தா இறங்கிட்டாருனா, அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து உட்காரும்னு" ஒரு நப்பாசையில அந்த தாத்தாகிட்ட ஒவ்வொரு ஸ்டாப்பிங் வரும்போதும் "இறங்கப்போறீங்களா, இறங்கப்போறீங்களா"னு கேட்டுட்டே வந்தேன். ஒரு கட்டத்துல அவரே டென்சனாகி இறங்கிப் போயிட்டாரு. இப்ப அந்த சமூக ஆர்வலர் தான் (முன்னாடி அதிக ப்ரசங்கினு சொன்னோமே அவரேதான்) "ஏம்மா இந்தா இடம் இருக்குல்ல உட்காரேன்"னு சொல்ல, அந்த பிள்ளையும் சமர்த்தா எம்பக்கத்துல வந்து உட்காந்துகிட்டு, இரண்ட

உச்சம்

எத்தனை முறை உச்சம் அடைந்தாலும்   வறண்டே காணப்படுகிறது  விபச்சாரியின் வாழ்க்கை!!! -தமிழ்மறவோன் 01-10-2016

டாஸ்மாக் கடை எண்: 496

டாஸ்மாக் கடை எண்: 496 ------------------------------------------ இன்னைக்கு எக்மோர் டூ கோடம்பாக்கம் வர்ற வழியில ஒரு கடைப் பார்த்தேன்.  டாஸ்மாக் கடை எண்: 496 நுங்கம்பாக்கம் மெயின் இடத்துல இருக்கு இந்த கடை. இந்த கடையோட ஸ்பெஷல் என்னனா???  பார், அவுட்டோர் தான். பிளாட்பார்ம்ல தான் இருக்கும், ஓப்பன் ஸ்பேஸ்ல, நல்ல காத்தோட்டமா; இந்த கடைக்கு பக்கத்துல ஒரு முக்கியமான சிக்னல் இருக்கு, ஒரு ரவுண்டானா இருக்கு. கடைக்கு போயிட்டு வர்றவனோட உயிர மதிக்காம இப்படி இந்த இடத்துல மெயின் ரோட்டையும், சிக்னலையும் வைக்கலாமா??? குடிமகனோட உயிர் முக்கியம் இல்லையா?? அதெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்க பாஸ்!! # என்  டவுட் என்னனா.. மழைப் பெய்ஞ்சா அந்த பார்ல எப்படி குடிமகன்லாம் தண்ணி அடிப்பாங்க??? -பஞ்சகல்யாணி 01-10-2016

குரல்

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னை விடுவதுமில்லை; {ஒரு பேனின் குரல்} -தமிழ்மறவோன் 02-10-2016

அவள் - அவன் - மற்றும் நான்

அவள் - அவன் - மற்றும் நான் ------------------------------------------------ 26ம் நம்பர் பஸ், ஆனந்த் தியேட்டர் டூ கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வர்றதுகுள்ளான இடைப்பட்ட நேரத்தில் நடந்த சம்பவம். சுமாரான கூட்டமுள்ள பஸ். மேலிருந்து இரண்டாவது படியில் நின்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு மேல் படியில் என்னைப் போன்ற ஒரு பையனும் நின்றுக்கொண்டு வருகிறார். கண்டக்டர் தனது சிம்மாசனத்தில் அமர்ந்து டிக்கெட் வழங்கிக்கொண்டும் வழக்கம்போல் படியில் நிற்பவரை புகழ்ந்துக்கொண்டும் வந்தார். அந்த சிம்மாசனத்தை ஒட ்டி, கதவுக்கு அருகில் கம்பியை பிடித்துக்கொண்டு நிற்கிறாள் ஒரு மாணவி(வயது 20 இருக்கும்). அப்போதுதான் பார்க்கிறேன், அந்த மாணவியின் பக்கவாட்டில் இருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டுதான் நான் நின்றுக்கொண்டிருக்கிறேன். அவள் சற்று திரும்பினாலோ அல்லது ஒதுங்கி மற்றவர்க்கு வழிவிட்டாலோ கண்டிப்பாக அவளது தொடையோ அல்லது இடுப்போ எனது கைகளில் அழுந்தக்கூடும். மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு, ஏதேனும் திருப்பம் வராதா, யாரேனும் இறங்க மாட்டார்களா என்று. இப்போது எதேச்சையாக எனக்கு மேல் நின்றுக்கொண்டிருந்த அந்த பையனைப் பார்க்கிறேன

முலாம்

இங்கு பழைய பொருட்கள்  சிறந்த முறையில் முலாம் பூசப்படும்!!! "ஒரு பியூட்டி பார்லர் வாசகம்"

எனக்கு பொண்ணு கிடைக்காதா???

எனக்கு பொண்ணு கிடைக்காதா??? -------------------------------------------------------- "அவன்-அவள் மற்றும் நானும்" அப்படின்னு நேத்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதுக்கு இன்னிக்கு வாட்ஸப்புல ஒரு நண்பர் வந்து இப்படி சொல்றாப்ல,  "Dai, ethku da fbla ipdilam post podra? Elarum ipdithan. Aana veliya solita irkom? Ths wil create bad impression on you da. Athu matm ila,naliku kalyanathku ponnu pakumbothu periya isue agum da. Dont repeat ths. Nan solratha soliten aparm un ishtam"னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கே ஒரு நிமிஷம் பயம் கொடுத்துட்டு. ஒரு வேளை நிஜமாவே நமக்கு கல்யாணம் ஆகாதோனு?? அப்பறம் தான் யோசிச்சேன், அவனே சொல்லிட்டான் "எல்லாரும் அப்படிதான் ஆனா யாரும் சொல்றதில்லனு" அப்ப நான் சொல்றேன்னா நான் நடிக்கலனு தான அர்த்தம். நடிச்சாலும் நடிக்குறேன்னு சொல்லிட்டு தான நடிக்குறன். எனக்கு பாக்குற பொண்ணும் எங்கயோ பஸ்ல போகும்போது இத அனுபவிச்சுருப்பா தான? கஷ்டப்பட்டிருப்பா தான?? அப்ப அடுத்தவங்களோட கஷ்டத்த புரிஞ்சுக்குறவனா தான இங்க நான் நிக்குறேன். ஒரு இடத்த

ராஜபாட்டை

எவ்வளவு கூட்டமாய் இருந்தாலும்  ஒதுங்கி வழி விடுகிறார்கள், தனக்கான ராஜபாட்டையில்  நடக்கிறான் பிச்சைக்காரன்!!! -தமிழ்மறவோன்

இவர்கள்

இவர்கள் ------------------------------ சமஞ்ச புள்ள மாதிரி வாசற் கதவு பக்கத்துலயே நிப்பாங்க.. யாராது வழிக்கேட்டா திருதிருனு முழிப்பாங்க.. கண்டக்டர் வாயவே பாத்துட்டு இருப்பாங்க..  "ஸ்டாப்பிங் சொல்வாரா மாட்டாரானு" பக்கத்துல உட்காந்து இருக்கிறவன டார்ச்சர் பண்ணுவாங்க, "அடுத்த ஸ்டாப் என்ன பாஸ்"??? டிக்கெட் இருக்கானு நிமிஷத்துக்கு ஒரு முறை செக் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணும் பையனும் ஒரே சீட்ல உக்காந்துட்டு வந்தா 'ஆஆஆஆஆ' னு பாப்பாங்க.. செக்கிங்க பாத்தா டிக்கெட் எடுத்திருந்தாலும் ஏனோ பீதியாவாங்க.. தப்பித்தவறி யாராது, தெரியாத ஸ்டாப் பேரச் சொல்லி டிக்கெட் எடுத்துத் தரச்சொன்னா அவ்ளோதான் பதறிருவாய்ங்க.. ------------------------------ இந்த புது சென்னைவாசிகள்!!!

யாரோ யாரிடமோ

யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் "இங்கு யாருமே ஒழுங்கில்லை"என்று; -தமிழ்மறவோன்

அஃறிணை

அஃறிணை   ------------------ அஸ்திவாரத்தையும்  அசைத்துவிடும் அஃறிணை   உன் கால் கொலுசு.. -தமிழ்மறவோன் 08-10-2016