Posts

Showing posts from January, 2016

ஸ்ட்ராபெரி பெண்ணே

Image
"ஸ்ட்ராபெரி பெண்ணே" (Not a பா.விஜய்'s flavour)                                                                                                      - தமிழ்மறவோன்  ----------------------------------------------------------------------------------------------------------------------------- அன்று அவளுக்கு நான் அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான், "லவ் யூ ஆதி". அதன் பின்னர் அவளது பதிலை எதிர்நோக்க தைரியம் இல்லாமல் மொபைல் டேட்டாவை ஆப் செய்துவிட்டேன். இரவு எவ்வளவு நீளம் என்று அன்றுதான் தெரிந்தது. மறுநாள் காலை அவளிடமிருந்து "6.00 p.m. ibaco" என்றொரு வாட்ஸப் மெசேஜ் மட்டும் வந்திருந்தது. எப்போதும் போல் 5 மணிக்கே சென்று ஒரே ஒரு காபி மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அந்த வெயிட்டர ் ஒரு மாதிரியாக பார்த்தான். நான் கண்டுகொள்ளவில்லை. சரியாக 6 மணிக்கு வந்து சேர்ந்தாள். "வந்து ரொம்ப நேரமாச்சா? ஆமா, 5 மணிக்கே வந்துட்டேன்.. நான் 6 மணிக்கு தான வரச்சொன்னேன் எதுக்கு 5 மணிக்கே வந்த? நீ என்ன லுசா"என்று முதல் பந்துலயே சிக்ஸர் அடித்தாள். சரி , இன்னை

தேவதை தரிசனம்

Image
"தேவதை தரிசனம்"  #தேவதை  என் டைரிக் குறிப்புகள்:- ------------------------------------------------------------------------------------------- நீண்ட இடைவெளிக்கு பின் இன்று காலை அவளைப் பார்த்தேன்.  ஆம், அவளைத்தான்!!!  நான் வண்டியில் சென்ற போது எதிரில் அவள் தந்தையுடன் வண்டியில் சென்றாள்.(படிக்க:என் குறுங்கதை 3) விவரம் தெரிந்த வயதின்,வளர்ந்த பருவத்தின் பள்ளித்தோழி அவள். வெகு அரிதாக, அவளைப் பற்றிய எண்ணங்கள் என்னுள் எழும்போதெல்லாம் அவளுடனான அந்த நாட்களை அசைப் போடுவது உண்டு. உறங்கா இரவுகளும், முடியா உரையாடல்களும், உலரா முத்தங்களும், அளவில்லா அன்பும் அழகும் எனக்குள் முட்டிமோதும். மிகுந்த பிரயத்தனப்பட்டு என் சிறு இதயத்தினுள் அவை அனைத்தையும் அடக்கி,அடுக்கி வைத்திருந்தேன். இன்று காலை, தீத்தெறிக்கும் அந்த ஒற்றைப் பார்வையில் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்து மனதின் உச்சாணிக் கொம்பில் ஏறி சட்டமாய் அமர்ந்துக்கொண்டு இறங்க மறுக்கிறாள். அவள் பார்வையை இப்பதிவு சென்றடையுமா என்று தெரியவில்லை. ஆனால்,என்னுடைய இந்த நாள் முழுவதையும் இறகினை தூக்கிச் செல்லும் காற்றைப் போல தூக்கிச் சென்

பொங்கல் வாழ்த்து

Image
"விஜய் வெறியனுக்கு பொங்கல் வாழ்த்து !!!" சுமார் ஆறேழு வருடங்கள் முன் இருக்கலாம்,சரியாக நினைவில்லை.நான் விஜய் வெறியனாக இருந்த பொழுது (கவனிக்க:கடந்த காலம்) வருடந்தவறாமல் என் அண்ணன் எனக்கனுப்பிய பொங்கல் வாழ்த்தட்டைகள் இவை.நேற்று அலமாரியை அலசிய போது கண்களில் சிக்கியது.அலமாரியின் அடியிலிருந்து எடுத்த இந்த அட்டைகள் என் நினைவடுக்கின் அடியிலிருந்த நினைவுகளையும் கிளறிவிட்டன.இப்போது வாழ்த்தட்டைகளும் வருவதில்லை; நான் விஜய் வெறியனும் இல்லை!!!