Posts

Showing posts from 2017

#அகமதாபாத்_அப்டேட்ஸ்

Image
# அகமதாபாத் _ அப்டேட்ஸ் AHMEDABAD_AWARD_FUNCTION_INAE ~ " அகமதாபாத் எதுக்குல போறீங்க ?" " என்ன மச்சான் டிரான்ஸ்பரா ??" போன்ற விசாரிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன . டிரான்ஸ்பர்லாம் வேலைக்கு போறவங்களுக்குதான் ஜி கொடுப்பாங்க ; சும்மாயிருந்தா கொடுப்பாங்களா பாஸ் ?? அகமதாபாத் வந்த விஷயம் இதுதான் :- B.E Final year படிக்கும்போது நாங்கள் செய்த ப்ரொஜக்ட்டுக்கு ஒரு விருது கிடைத்துள்ளது .   INAE - Indian National Academy of Engineering, மத்திய அரசுடன் இணைந்த ஒரு கூட்டமைப்பு வழங்கும் விருதிது . முதலில் கல்லூரி அளவில் இரண்டு ப்ரொஜக்ட்கள் தேர்வு செய்தார்கள் . கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து விண்ணப்பம் செய்தவர்களில் கிட்டத்தட்ட 30 குழுக்களை தேர்வு செய்து டில்லியில் வந்து Present செய்ய துறைவாரியாக பிரித்து அழைத்திருந்தார்கள் .   (B.E-30, M.E-30, Ph.D-30) நாங்கள் இருந்த பிரிவில் ECE,EEE,EIE போன்ற துறை சார்ந்த சுமார் 15 குழுக்கள் இருந்தோம் . ( Mech,Civil-15) IIT,NIT,IISC போன்ற கல்லூரிகளிலிருந்தே வ...