#அகமதாபாத்_அப்டேட்ஸ்
AHMEDABAD_AWARD_FUNCTION_INAE
~
"அகமதாபாத் எதுக்குல போறீங்க?"
"என்ன மச்சான் டிரான்ஸ்பரா??"
போன்ற விசாரிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. டிரான்ஸ்பர்லாம் வேலைக்கு போறவங்களுக்குதான் ஜி கொடுப்பாங்க; சும்மாயிருந்தா கொடுப்பாங்களா பாஸ்??
அகமதாபாத் வந்த விஷயம் இதுதான்:-
B.E Final year படிக்கும்போது நாங்கள் செய்த ப்ரொஜக்ட்டுக்கு ஒரு விருது கிடைத்துள்ளது.
INAE - Indian National Academy of Engineering, மத்திய அரசுடன் இணைந்த ஒரு கூட்டமைப்பு வழங்கும் விருதிது. முதலில் கல்லூரி அளவில் இரண்டு ப்ரொஜக்ட்கள் தேர்வு செய்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து விண்ணப்பம் செய்தவர்களில் கிட்டத்தட்ட 30 குழுக்களை தேர்வு செய்து டில்லியில் வந்து Present செய்ய துறைவாரியாக பிரித்து அழைத்திருந்தார்கள்.
(B.E-30, M.E-30, Ph.D-30) நாங்கள் இருந்த பிரிவில் ECE,EEE,EIE போன்ற துறை சார்ந்த சுமார் 15 குழுக்கள் இருந்தோம். (Mech,Civil-15)
IIT,NIT,IISC போன்ற கல்லூரிகளிலிருந்தே வந்திருந்த பெரும்பாலானோர் மத்தியில், NATIONAL ENGINEERING COLLEGE, KOVILPATTIல் இருந்து நாங்களும்!!!
சில நாட்களுக்கு முன், இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் அந்த B.E-30 குழுக்களிலிருந்து 5 குழுக்களை தேர்வு செய்திருந்தார்கள். எங்கள் பிரிவிலிருந்த 15 குழுக்களிலிருந்து 2 குழுக்கள் விருதுக்கு தேர்வாகியிருந்தது. Indian Institute of Space and Science Technologyல் இருந்து ஒன்று,
இன்னொன்று???
ஆம்...
நேஷனல் பொறியியல் கல்லூரி கோவில்பட்டி-ல் இருந்து,
1. S.Siva
2. S.AnandRaj
3. B.Thangamariappan
4. P.Praveenkumar
முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்றில்லாமல் சான்றிதழ் மற்றும் தலா ரூ.10,000 உள்ளடக்கியது இந்த விருது!!

முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே குண்டலினி இல்லாமல் காற்றில் மிதந்துக்கொண்டுதான் இருந்தோம். கடந்த ஒரு வாரமாகவே உற்சாகமான மனநிலை தான். முதல்வரின் மரணம் கொஞ்சம் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் உண்டாக்கியது, ஆனாலும் இந்த உற்சாகத்தையும் ஒரு ஓரமாக அப்படியே வைத்துக்கொண்டோம். வடபழனி டூ ஏர்போர்ட் மெட்ரோவில் செல்வதென்று முடிவு. அதிலிருந்தே அலப்பறைகள் ஆரம்பமாயின. அநேகமாக சென்னை மெட்ரோ நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஏறியபோது மொத்தம் ஒரு பத்து பேர் இருந்தார்கள்; பின்னர் ஒரு பத்து பேர் ஏறினார்கள் அவ்வளவுதான். கடந்த ஆகஸ்டில் டில்லி சென்றிருந்தபோது, மெட்ரோ அறிமுகமுண்டு. டில்லி மெட்ரோவில் பீக் ஹவரில் போய்விட்டு, போட்டுப்போன சட்டைப் பேண்ட்டோடு திரும்பிவந்தால் தெய்வசெயல். நாங்கள் சென்றபோது பிதுக்கி தள்ளி துப்பி எறிந்துவிட்டார்கள்; அவ்வளவுக் கூட்டம். அங்கு பிரதான போக்குவரத்து மெட்ரோதான். பயன்பாடு அதிகமாக இருப்பதால் என்னவோ கட்டணம் குறைவு (நம்மூர் மின்சார ரயில்களைப்போல்).
ஆனால், நம் சென்னை மெட்ரோவில் புதிதாய் திருமணமானவர்கள் ஒரு சிறந்த போட்டோ ஷூட் நடத்தலாம்; அந்தளவிற்கு இருந்தது. இதற்கு நாங்கள் சென்ற நாள்( முதல்வரின் நல்லடக்கம் அன்று) காரணமாக இருக்கலாம், மற்றொரு காரணம் கட்டணம். வடபழனியிலிருந்து ஏர்போர்ட்டுக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.40 வசூலிக்கிறார்கள். இதே, மின்சார ரயிலில் சென்றால் கோடம்பாக்கம் டூ திரிசூலம் ஒரு ஆளுக்கு 5 ரூபாய்தான். அங்கிருந்து ஏர்ப்போர்ட்டுக்கு ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்.
பார்ககலாம் மெட்ரோ பணிகள் முழுதும் முடிந்த பின்னர், ஏதும் மாற்றமிருக்கிறதா என்று.
ஒருவழியாக அகமதாபாத் போய் இறங்கிவிட்டோம். 22 வயதான, இன்னும் வேலைக்கு கூட செல்லாத, திருநெல்வேலி கிராமங்களை சேர்ந்த மூன்று இளைஞர்களை அகமதாபாத் ஏர்போர்ட்டில் ஒரு இஸ்ரோ விஞ்ஞானி 'Name Plate' வைத்து வரவேற்பதென்பதை என்னவென்று சொல்வது??
ஆம், ஏர்ப்போர்ட் வாசலில் இப்படி எழுதிவைத்துக்கொண்டு காத்து நின்றார்கள்:
"INAE Awardees"
உடல் சிலிர்த்துவிட்டது. அங்கிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்களுக்கு கொடுக்கப்பட்ட கெஸ்ட்ஹவுஸ். அகமதாபாத்தின் குளிரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த வருட தொடக்கத்தில் அலகாபாத் சென்றிருந்தேன், அங்கு குளிர் 7 டிகிரி அளவில் இருந்தது. அதற்கு சற்றும் குறைவில்லாதது இந்த அகமதாபாத் குளிர். நீங்கள் என்னதான் உள் பனியன் போட்டு, டி-ஷர்ட் போட்டு அதற்கு மேலே வின்டர் கோட் போட்டிருந்தாலும், அடிக்கும் குளிருக்கு நீங்கள் அறியாமல் உங்களது மார்பு காம்புகள் விடைத்துக்கொள்ளும். 45 நிமிட டாடா சுமோ பயணத்திற்கு பின் கெஸ்ட்ஹவுஸை அடைந்தோம். வாசலில் இரண்டு CISF வீரர்கள் சோதனை செய்துதான் உள்ளே அனுமதித்தார்கள். நாங்கள் தமிழ்நாடு என்று சொன்னவுடன் அதில் ஒருவர் இப்படி கேட்கிறார், "அம்மா ஹோ கயா; சின்னம்மா ஹா கயா?". அகமதாபாத்தில் சின்ன அம்மா பேரவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது!!
ஒரு அறைக்கு இரண்டு பேர் என்ற ரீதியில் ஒதுக்கியிருந்தார்கள். அறை என்றால் சாதாரண அறையெல்லாம் இல்லை. 5 ஸ்டார் ஹோட்டல் தரத்தில் இருந்தது. நான் 5 ஸ்டார் ஹோட்டல் போனதில்லை, இப்போதைக்கு எங்களுக்கு இதுதான் 5 ஸ்டார் ஹோட்டல். இரண்டு சிங்கிள் காட், கம்பளி,
டி.வி, ஒரு கவுச், 2 சேர், டேபிள், கிச்சன், பிரிட்ஜ், கப்போர்ட், டிரெஸ்லிங் டேபிள், ஹீட்டர் வசதியும் இருந்தது. வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு;
அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் இதற்கெல்லாம் நாம் தகுதியானவர்கள் தானா என்றொரு உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது.

ஒரு வழியாக அகமதாபாத் பயணம் இனிதே நிறைவுற்றது. வாழ்த்திய அனைத்து நண்பர்களையும் அணைத்து நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தற்சமயம் அந்த நடவடிக்கையை ஒத்தி வைக்கிறேன். சரி இந்த பதிவின் விஷயம் இதுதான்.
எங்க ப்ரொஜக்ட் டைட்டில் “Automatic Lifting System for
Physically Challenged people to board the Indian Trains”. மேலே இருக்கும் தலைப்பு படித்தாலே புரிந்திருக்கும். உடல் ஊனமுற்றோருக்கு ரயிலில் தனி பெட்டி இருந்தாலும் அதில் அவர்கள் ஏறி இறங்குவது என்பது குதிரைக் கொம்புதான். போர்ட்டர்கள் உதவின்றி அவர்களால் ஏறி இறங்க முடியாது. தனியாக வரும் நபர்களின் பாடோ பெரும் திண்டாட்டம். அவர்களுக்கானது தான் இந்த சிஸ்டம். இதன்மூலம் ரயில் பெட்டிகளில் மற்றவரது உதவியின்றி, சக்கர நாற்காலியுடன் ஏறி இறங்க முடியும். இது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் சிஸ்டம். நிறை குறைகள் கூறுங்கள்..
குறைகளை களைய முயற்சிப்போம்
வீடியோ இணைப்பில்!
ஆக்கப்பூர்வமான கேள்விகளும் கமெண்ட்டுகளும் வரவேற்கபடுகின்றன!

https://www.facebook.com/search/str/%23%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/keywords_blended_posts?filters_rp_author=%7B%22name%22%3A%22author_me%22%2C%22args%22%3A%22%22%7D
-08-12-2016(One year of INAE Award)
Comments
Post a Comment