பொறுப்பு
J. H. வில்லியம்ஸின் "யானைக்கூட்டம்" என்ற புத்தகத்தை சண்முகசுந்தரத்தின் மொழிப்பெயர்ப்பில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பர்மாவில் யானைகளை பராமரிப்பதற்காக தான் சென்றபோது யானைகளுடனான தனது அனுபவங்களை தொகுத்து எழுதியுள்ளார் வில்லியம்ஸ். பர்மாவின் முக்கிய தொழில், மர வியாபாரம். அந்த தொழிற்சாலைகளுக்கு யானைகளின் பங்கு அளப்பரியது. அப்படி ஒரு தேக்கு மர தொழிற்சாலையில், சரியாக 1 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக சங்கு ஊதுவார்கள். அதைக்கேட்ட மறு நொடியில் எவ்வளவு பெரிய மரத்துண்டை தனது தும்பிக்கையில் ஏந்தி இருந்தாலும், யார் சொல்லையும் கேளாது அப்படியே போட்டுவிட்டு மதிய உணவுக்காக அந்த யானைகள் சென்றுவிடுமாம். 0 சிறுவயதில் இருந்தே சரியாக மதியம் ஒரு மணி ஆனால் போதும், பாழாப்போன வயிறு கொண்டா கொண்டா என்று கூப்பாடுப் போட தொடங்கிவிடும். பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் அதைத்தான் நாம் பழகி இருக்கிறோம். திடீரென்று மாற்றுவதென்பது குதிரைக்கொம்பு. வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒரு டீமில் இருந்தேன். ஐ. டி துறை என்றாலும் கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலைதான். அலுவலகம் முழுதும் அலைந்து திரிய வேண்டும். தாவு தீர்ந்துவிடும்....