மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள்
மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள் (ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலை முன்வைத்து) சில சமயங்களில் சிலருடைய எழுத்துக்களைவிட அந்த எழுத்தாளர்களே நமக்கு முதலில் அறிமுகமாவார்கள் . அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அனுபவங்களும் நம்மை இரும்பு கண்ட காந்தமாய் அவர்களை நோக்கி இழுத்துச் செல்லும் . அப்படி எனக்கு அறிமுகமான இரண்டு பேர் , தஞ்சை ப்ரகாஷ் மற்றும் ஜி . நாகராஜன் . இதில் தஞ்சை ப்ரகாஷினுடைய எழுத்து கொஞ்சம் முன்னதாகவே அறிமுகம் ஆனது ; அவருடைய மீனின் சிறகுகளும் மிஷன் தெருவும் சில சிறுகதைகளும் வாசித்திருக்கிறேன் . ஆனால் ஜி . நாகராஜனுடைய எழுத்துக்களை சமீபமாகத்தான் வாசிக்கிறேன் . இரண்டு மாதங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் தான் அந்த புத்தகம் என் கண்களில் தென்பட்டது . காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ’ ஜி . நாகராஜன் ஆக்கங்கள் ’ என்ற புத்தகம் அது . அந்த கட்டி அட்டைப் புத்தகத்தை கையில் எடுத்து சிறிது நேரம் அதிலிருந்த ஜி . நாகராஜனின் புகைப்படத்தை பார்த்தவாறு நின்றிருந்தேன் . ஏனோ , அவரது தோற்றமே ...