ஸ்ட்ராபெரி பெண்ணே
"ஸ்ட்ராபெரி பெண்ணே" (Not a பா.விஜய்'s flavour) - தமிழ்மறவோன் ----------------------------------------------------------------------------------------------------------------------------- அன்று அவளுக்கு நான் அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான், "லவ் யூ ஆதி". அதன் பின்னர் அவளது பதிலை எதிர்நோக்க தைரியம் இல்லாமல் மொபைல் டேட்டாவை ஆப் செய்துவிட்டேன். இரவு எவ்வளவு நீளம் என்று அன்றுதான் தெரிந்தது. மறுநாள் காலை அவளிடமிருந்து "6.00 p.m. ibaco" என்றொரு வாட்ஸப் மெசேஜ் மட்டும் வந்திருந்தது. எப்போதும் போல் 5 மணிக்கே சென்று ஒரே ஒரு காபி மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அந்த வெயிட்டர ் ஒரு மாதிரியாக பார்த்தான். நான் கண்டுகொள்ளவ...