ஸ்ட்ராபெரி பெண்ணே


"ஸ்ட்ராபெரி பெண்ணே"

(Not a பா.விஜய்'s flavour)
                                               
                                                     - தமிழ்மறவோன் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அன்று அவளுக்கு நான் அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான், "லவ் யூ ஆதி". அதன் பின்னர் அவளது பதிலை எதிர்நோக்க தைரியம் இல்லாமல் மொபைல் டேட்டாவை ஆப் செய்துவிட்டேன். இரவு எவ்வளவு நீளம் என்று அன்றுதான் தெரிந்தது. மறுநாள் காலை அவளிடமிருந்து "6.00 p.m. ibaco" என்றொரு வாட்ஸப் மெசேஜ் மட்டும் வந்திருந்தது. எப்போதும் போல் 5 மணிக்கே சென்று ஒரே ஒரு காபி மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அந்த வெயிட்டர் ஒரு மாதிரியாக பார்த்தான். நான் கண்டுகொள்ளவில்லை. சரியாக 6 மணிக்கு வந்து சேர்ந்தாள். "வந்து ரொம்ப நேரமாச்சா?
ஆமா, 5 மணிக்கே வந்துட்டேன்..
நான் 6 மணிக்கு தான வரச்சொன்னேன் எதுக்கு 5 மணிக்கே வந்த? நீ என்ன லுசா"என்று முதல் பந்துலயே சிக்ஸர் அடித்தாள். சரி , இன்னைக்கு கச்சேரி தான்னு நினைச்சேன். மறுபடியும் ஒருமாதிரி பார்த்துக்கொண்டே வெயிட்டர் வந்தான். இரண்டு ஸ்ட்ராபரி என்று நானே ஆர்டர் செய்தேன். ஆம்,எனக்கு தெரியும் அவளுக்கு என்ன பிடிக்குமென்று. ஏனெனில், ஐந்து வருடங்களாக நாங்கள் நண்பர்கள். எனக்கு ஆர்டர் செய்வதற்கு நீ யார் என்றுக் கேட்டால், இத்தனை நாள் நான்தானே ஆர்டர் செஞ்சேன் இப்ப மட்டும் என்ன?? என்று கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவள் கேட்கவில்லை. அமைதியாகவே இருந்தாள்;
ஆனால் அழகாக தெரிந்தாள்!!!
விழுங்குவது போல் பார்ப்பது என்பார்களே அப்படித்தான் இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். திடிரென்று நிமிர்ந்து என்ன லுக்கு??என்பதுபோல் பார்த்தாள். அய்யோ!!!
விழி விரித்து,புருவம் உயர்ந்த அந்த பார்வையில் செத்தே மீண்டேன். இன்னும் ஸ்ட்ராபெரி வரவில்லை; நேத்து நம்ம சொன்னதுக்கு பதில் சொல்லுவாளா மாட்டாளா?? அல்லது வழக்கம்போல பில்ல தலையில கட்டிட்டு போயிறுவாளானு நினைக்கும்போதே வந்து தொலைத்தான். யாரு?? ம்ம்ம்... வேற யாரு? அந்த வெள்ளைக் குல்லா வெயிட்டர் தான். ஐஸ்கிரீமும் வந்துவிட்டது. முறைத்துக்கொண்டே ஐஸ்கிரீம் கப்புகளை மேஜையில் வைத்தான். திரும்பிச் சென்ற அவனை "அண்ணா" என்றழைத்தாள் ; ௥நல்லவேளை௥ என்றெண்ணிக் கொண்டேன். "ஒரு கப் போதும்'னா ரெண்டு பேரும் சாப்ட்டுக்றோம்" என்றாள்; எடுத்துச் சென்றவனை மீண்டும் அழைத்து "ஸ்பூனும் ஒண்ணு போதும்னா, நாங்க ஷேர் பண்ணிக்றோம்" என்றாள்; அந்த வெயிட்டர் "ஏண்டா ,முதல்லயே ஒழுங்கா ஆர்டர் பண்ணி தொலைக்க வேண்டியதானே" என்பதுபோல் உக்கிரமாக பார்த்தான். "நா என்னடா பண்ணட்டும்" என்பதுப்போல் அவனைப் பார்த்தேன். புரிஞ்சுருக்கும்னு நினைக்கேன். பயபுள்ள போய்ட்டான்!!!!!அவன் சென்ற பின் "ஏய் நேத்து நான் அனுப்புனதுக்கு ஏன்டி ரிப்ளை பண்ணல" என்றுக் கேட்டேன். கண்களை ஊடுருவும் பார்வை ஒன்றை வீசினாள். பின்னர்,"மண்டு மண்டு" என்று செல்லமாய் திட்டிவிட்டு அருகில் வந்து "இந்தா" என்று ஊட்டிவிட தொடங்கினாள்.புரிந்துக்கொண்டேன்; பறக்கத் தொடங்கினேன்!!!

 பி.கு:-அந்த வெயிட்டருக்கு டிப்ஸ் வைக்க தவறவில்லை..
-தமிழ்மறவோன்.

Image result for strawberry ice cream

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா