காமத்தின்பால் சில கவிதைகள்

காமத்தின்பால் சில கவிதைகள் *

-
உடன் படுத்தலும்
உடன்படுதலும்
உடல் படுதலும்
காமத்தின் பால் சேரா..
உச்சி முகர்தலும்
உள்ள களித்தலும்
உடல் பிரிகையில்
உயிர் கலத்தலுமே
காமமென்பர் அதைக் கண்டுணர்ந்தோர்!
*
முலைதனில் தொடங்கி
யோனியில் முடித்தலது காமமன்று
காமமது யாதெனின்,
முடிந்தபோது
முடியாதென்றிருக்கையில்
முகமேந்தி முத்தமிடும்
அதுதான் காமம்!
*
களை யிழந்து நிற்கும் என்னறை
களைந்து கிடக்கும் என் மெத்தை விரிப்பு
சுழன்றடிக்கும் விந்தின் மணம்
இவையாவும்,
என்னகத்தே நிறுத்தி வைத்திருக்கிறது,
நாம் கலந்துக்கிடந்ததை
*
உடை அவிழ்த்தலும்
உடல் அணைத்தலும்
உள் நுழைத்தலுமே
காமம் என்பர்,
மென்பாதம் அதனில்
இதழ் பதிக்காதவர்.
*
பெருங்காட்டை விழுங்க நிற்கும் பருந்தொன்று 
மயிர் சிரைத்த உன் யோனியின் முன்,
அதிகாலை பனியாய் உருகிப் போகிறது!
*

உச்சத்தின் உச்சந்தனை 
தொட்டு திரும்புகையில்
இட்டு செல்கிறாய் ஒரு நெற்றி முத்தத்தை,
உச்சமைடதலும் துச்சம்தான்!
*
காதலா, காமமா என்ற தர்க்கத்தில்,
காதலின் ஊடாய் காமம் வேண்டும்
காமத்தின்பால் காதலும் வேண்டும்!
என்று கூறி முடித்து வைக்கிறாய்,
இல்லை இல்லை தொடங்கி வைக்கிறாய் 

* ஆம் இவை கவிதைகள்!
-தமிழ்மறவோன்
13-04-2017


Comments

Popular posts from this blog

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்