Posts

Showing posts from 2014

மீசை வைத்த மிருகம்

Image
  மீசை வைத்த மிருகம்  மாற்றம் உன்னிலிருந்து ,, ,        இன்று என் தோழி என்னிடம் ஒரு விஷயம் கூறினாள் .அது விஷயம்  என்பதை விட விபரீதம் என்றும் விஷம் என்றும்  கூட கூறலாம் . ஆம்,நடந்தது இதுதான் ...நேற்று தீபாவளி விடுமுறையை முன்னிட்டு என்  தோழி சென்னையில் இருந்து பேருந்தில் நெல்லைக்கு பயணம் செய்கிறாள். அப்போது அவளது பின்னால் சீட்டில்  இருக்கும் ஒரு பேண்ட் ஷர்ட் போட்ட  நாய் ஒன்று சில்மிஷம் செய்துள்ளது .இதை உணர்ந்த என் தோழி அந்த  நாயை அடிக்காமல் அதட்டி உள்ளார் .இதுதான் அவர் செய்த பெரிய தப்பு. அவர் திட்டியதை பேருந்தில் உள்ளவர்கள் கவனிக்கவும் இல்லை.சிறிது  நேரத்திற்கு பின் அந்த நாய் தன் வாலை மீண்டும் ஆட்டி உள்ளது .இந்த  முறையும் அந்த வாலை அறுக்காமல் அவனது  அருகில் இருக்கும் ஆளை  சற்று இடம் மாறி உட்காருமாறு கூறி உள்ளாள் .அவர் சற்று நல்லவர்  என்பதால் மாறி அமர்ந்துள்ளார் .சற்று நிம்மதி .சிறிது நேரத்திற்கு பின் அந்த  நாய் பின் சீட்டில் ...

என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!

என்ன தோணுதோ வச்சுக்கங்க!!! காதல், காமம், இன்பம், துன்பம் எதோ ஒண்ணு....   இதமாய் வருடும் இனிக்காமல் இனிக்கும் ஓங்கி அடிக்கும் , வலிக்காமல் வலிக்கும் நெருஞ்சி முள்ளாய் குத்தும் கொக்கிப் புழுவாய் குடையும் குத்தினாலும் குடைந்தாலும் கத்தினாலும் கதறினாலும் வாழ்வில்., ஒருமுறையேனும் அதை நீயோ.. உன்னை அதுவோ.. கடந்தே தீரும் !!!!                                                                - தமிழ்மறவோன் 

My Short Film

short film on WATER CONSERVATION http://youtu.be/lRBq0cMd5rs

மலர்கள் மலரும் தருணம் !!!

Image
                                   மலர்கள் மலரும் தருணம் !!!                                                           இரவுகள் ஒவ்வொன்றும் நீ ஆனாய் . . .                              என் நினைவுகள் எங்கெங்கும் நிலை ஆனாய்                              உன்னை நான் மறக்கும்  நாளெது???                              நான் என் மரணத்தை முத்தமிடும் நாளது                                  ...

என் உயிர் நீதானே ...

Image
என் உயிர் நீதானே ...                                               உன்னை பார்த்த முதல் நாள் நினைவில்லை ...                   உலகில் உனக்கு இணை யாருமில்லை ...                    உன்னை ஒவ்வொரு முறை காணும்போதும்                     கரைந்து போகிறேன் நான் ..                    நான் தவிப்பதைப் பார்த்தும் கூட                     கரையவில்லையா உன் மனம் ???                    உன் இதழ் பட்ட முதல் தருணம்                     என் வாழ்வின் சிறந்த தருணம்....     ...

வணக்கம் .....

வணக்கம் ..... அன்பர்களே ,                         நான் எனது வலைப்பூவை இன்று துவங்குகிறேன் .. நான்  இதில் எனது படைப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன் .எனவே , உங்களது மேலான ஆதரவுகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . நாளை  முதல் எனது படைப்புகளை  உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .                                                                                    உங்கள் அன்பு நண்பன் ,                                                                             ...