மலர்கள் மலரும் தருணம் !!!
மலர்கள் மலரும் தருணம் !!!
இரவுகள் ஒவ்வொன்றும் நீ ஆனாய் . . .
என் நினைவுகள் எங்கெங்கும் நிலை ஆனாய்
உன்னை நான் மறக்கும் நாளெது???
நான் என் மரணத்தை முத்தமிடும் நாளது
உன்னிடம் பேசி பழகிய நாட்கள் அதிகமில்லை
உன்னை பார்க்காத நாள் நான் நானாக இல்லை
என்னை மிதக்க செய்து மயக்கிச் செல்லும்
உன் அழகு முன் - கையேந்தி
நிற்குமடி இவ்வுலகு
அனுமதி இன்றி என்னுள் நுழைந்த
உன் பின் -என்
கால்கள் என் அனுமதி இன்றி திரியுதடி
உன் மல்லிகைப் பூ வாசத்திற்கு
என் சுவாசம் எல்லாம் ஏங்குதடி
காற்றுக் கூட தீண்ட யோசிக்கும் -உன்னை
என் கரங்கள் தழுவ தவம் கிடக்குமடி
ஏய் பெண்ணே !!!!!!
மலர்கள் மலரும் தருணம் பார்த்ததில்லை
கொஞ்சம் சிரி பார்த்துக்கொள்கிறேன்
-பொன்.பிரவீன்குமார்
Comments
Post a Comment