காத்திருத்தல்




காத்திருத்தல் 



அவள் மட்டும் தனியாக இருந்தாள் 

திருட்டுப் பூனையாய் வீட்டினுள் நுழைந்தேன் 

எட்டாக்  கொடிக் கம்பியில் எட்டி எட்டி 

துணிக் காயப் போட்டுகொண்டிருந்தாள் 

பின்னால் சென்று ,

அடிவயிற்றுக்கு மேல் விரல் பதித்து,

தோள் இடுக்கில் முகம் புதைத்தேன். 

கண்டு கொண்டாள் , நானென்று 

விருட்டென்று திரும்பினாள் !!!!!

கரங்கள் அவளிடையில் நின்றுகொண்டது 

பத்திரமாக ...

மூச்சும் மூச்சும் கலந்துகொண்டன 

அடுத்தென்ன??? -என்பதுபோல் பார்த்தாள் 

சுவற்றில் சாத்தினேன் 

கால்களால் அண்டைகொடுத்து கொண்டாள் 

கண்கள் ஏனோ மூடியே கிடந்தன ,

வேகமாய் வெளியேறினேன் நான் 

காத்திருக்கட்டும் !!!

பெற்றுகொள்வதை விட ,

காத்திருத்தல் சுகமானதே !!!

                                                    _  தமிழ்மறவோன் .
   

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா