முள் - சாரு நிவேதிதா

முள் - சாரு நிவேதிதா
--------------------------------------
இந்த கதையை அறிமுகப்படுத்திய எஸ்.ரா-வுக்கும் வாசகசாலைக்கும் நன்றிகள்!

ஒரு கதைக்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. அது வாசகனை கவரவும் வேண்டும், கதைக்கு Justification கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். கதையை படித்து முடிக்கையில் ”என்ன தலைப்பு இது, சம்பந்தமே இல்லையே?” என்று வாசகன் யோசித்துவிடக்கூடாது. அப்படி பார்த்தால் இந்த கதைக்கு இதைவிட சரியான தலைப்பு இருக்கவே முடியாது. வேறு யோசிக்கவும் முடியாது.
”கோலா மீன்” என்ற ஒரு வகையான மீனைக்குறித்த கட்டுரைப்போல் தொடங்கும் இந்த கதை, திடீரென்று வேறொரு திசையில் செல்கிறது.
கதையை சொல்லாமல் கதையைப் பற்றி சொல்ல முயல்கிறேன்!
(கீழிருக்கும் சுட்டியில் கதையை படித்துக்கொள்ளுங்கள்)
0) ராஜா – அத்தை – மாமா
1) அத்தை – மாமா – நேரெதிர் குணங்கள்
2) ராஜா – கோலா மீன் – தொண்டையில் முள்
3) ராஜா – அத்தை – அன்பு (மெல்லிய காமம்)
4) முள் – அத்தை - நெருடல்

பொதுவாக வித்தியாசமான ஒரு செய்தியோ தகவலோ நமக்கு தெரிந்துவிட்டால் அதை யாரிடமாவது சொன்னால்தான் நமக்கு திருப்தியாக இருக்கும். அப்படியொரு விஷயமாகத்தான் இந்த கோலா மேட்டர் எனக்குத் தெரிகிறது. தனக்கு தெரியவரும் ஒரு தகவலைக்கொண்டு கதை செய்வதென்பது சவாலான விஷயம். சாரு அதை இக்கதையில் முயன்றிருப்பார், வென்றிருப்பார்.
கதையில் ஒரு இடத்தில் அந்த முள்ளை எடுக்க முயல்வதாக ஒரு காட்சி வரும். நாக்கு வழிப்பதற்கு தான் ஏன் நாக்கு வழிப்பானை (Tongue Cleaner) பயன்படுத்தவில்லை, கட்டை விரலை பயன்படுத்துகிறேன் என்பதற்கு ராஜா (சாரு) கொடுக்கும் விளக்கம்!!!
”யோவ், என்னா மனுஷனய்யா நீ”? லவ் யூ சாரு!
சாருவை எனக்கு அறிமுகப்படுத்திய எனது கல்லூரி ஆசிரியர் கூறுவார், ”எதையுமே உடைச்சு பேசிருவாரு சாரு, அவர்கிட்ட இலைமறை, காய்மறைலாம் கிடையாது. அதுமட்டுமில்லாம, சாருவை படிக்கும்போது ரொம்ப கவனமா படிக்கணும். அது படிக்கும்போதே நம்மள உள்ள இழுக்கப்பார்க்கும்; அதுல இருந்து எது நமக்கு தேவையோ அத மட்டும் எடுத்துக்கிட்டு மத்தத வாசிப்பின்பா வச்சுக்கணும்”.
1979ல் சாருவின் ஆரம்ப காலக்கட்டங்களில் எழுதப்பட்ட கதை. இப்போது எழுதும் சாருவுக்கும், இதை எழுதிய சாருவுக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும். இந்த கதையில் அந்த உடைத்து எழுதுதல் மிஸ்ஸிங்! இதற்கு பின்னர் எத்தனையோ கதைகளை எழுதினாலும் அவருடைய ஒன் ஆப் தி கிளாஸிக்ஸ் இந்த ’முள்’!!
கண்டிப்பா வாசிச்சுருங்க!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்