முழுக்க முழுக்க மலரின் வாசனை

"பிரேமம்" *முழுக்க முழுக்க மலரின் வாசனை* நீண்ட நாட்களாக பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்டில் இருந்த படம் "பிரேமம்" நேற்றுதான் நல்ல பிரிண்ட் கிடைத்தது பார்த்து முடித்தேன்.ஆம், அனைவரும் கூறியது போல் நல்லதொரு காதல் படம் தான்.அதற்காக ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளும் அளவுக்கெல்லாம் இல்லை.அதிலும் முதல் 40 நிமிடம் சகித்துக்கொள்ளவே முடியாது.மேரி மட்டும் தான் ஆறுதல்.மலருக்காக காத்திருந்து மேரியை ரசிக்கலாம்.கல்லூரி வாழ்க்கையிலிருந்துதான் படம் களைக்கட்டுகிறது.நிவின்பாலி உண்மையிலையே அற்புதமான நடிகர்.படம் முழுக்க மலையாள வாடை அடித்தாலும் மலரின் வாடைதான் அதிகமிருந்தது.ஜார்ஜ்-மலர் காதல் காட்சிகளில் அழுத்தம் குறைவுதான்.ஆனால்,கொள்ளை அழகு.அதுவும்,அந்த டான்ஸ் சொல்லிதரும் காட்சி அழகோ அழகு;லவ் யூ மலர் மிஸ். ஆனால், விபத்தில் நினைவு தப்புவது எதிர்பாரா திருப்பம்.தாடி எடுத்தாலும் நிவின் அழகாவே தெரிகிறார்.மேரியின் தங்கையை உள்ளே கொண்டு வந்தது நல்ல யோசனை. செலினின் அறிமுக காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால்,அவளின் திருமணம் நின்றதற்கு வேறு ஏதேனும் பலமான காரணம் வைத்திருக்கலாம்.இறுதியில் மலரின் ரீ-என்ட்ரி சூப்பர்!!! சக நடிகர்கள் அனைவருமே கவனிக்க வைக்கிறார்கள்.குறிப்பாக ஷம்பு,கோயா.தமிழில் எடுத்திருந்தால் அந்த இடத்தில் சந்தானத்தை போட்டு நாலு டபுள் மீனிங் வசனம் பேச வைத்திருப்பார்கள்.நல்லவேளை!!!! அந்த இரு பேராசிரியர்களின் நகைச்சுவையும் நன்றாக அமைந்தது படத்தின் பிளஸ்.ஒரே ஒரு நெருடல் என்றால் அந்த முதல் 40நிமிடம் தான்.அந்த காட்சிகள் பின்னர் வரும் செலினுக்காக வலிந்துத் திணிக்கப்பட்டது போல் உள்ளது. மற்றபடி பின்னணி இசை குறையில்லை ரகம். ஜார்ஜ்-மலர் காட்சியமைப்பு அருமை!!! பிரேமம்-எல்லார்க்கும் பிடிக்கும்:-D

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

கேசம் - நரன்

முள் - சாரு நிவேதிதா