ஜூனியர் பொண்ணு-சத்திய சோதனை"




இப்பலாம் பசங்க போடுற பேண்ட்ட (Pant) பார்த்தாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எப்ப அவுந்து கீழ விழுமோங்கற நிலைமைல,கொஞ்சமா இடுப்ப பிடிச்சுட்டு நிக்குது. இதுல சில பசங்க போடுறது ரொம்ப டைட்டா வேற இருக்கு.
********************************

என்னைக்குத்தான் நம்ம ஊரு பஸ்ல படிய கீழ இறக்கி வைக்கப் போறாய்ங்களோ தெரியல. பஸ் படில ஏறுறதுக்கே ஒரு ஏணி படி வேணும்போல,அப்படியிருக்கு.
********************************
என்ன சம்பந்தம் இல்லாம பேசுறனா??
இருக்குங்க...
இன்னைக்கு ஒரு காலேஜ் (முடிச்ச) பையன் ரெண்டு கையிலயும் லக்கேஜ்,முதுகுல ஒரு டிராவல் பேக்கோட டைட்டா ஒரு பேண்ட்டையும் மாட்டிக்கிட்டு பைபாஸ்ல "பாபநாசம்"(நோட் திஸ்) போற உயரமான படியுள்ள பஸ்ஸ கைகாட்டி நிறுத்தி ஏறும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த பையனோட பேண்ட்டு கிழியக்கூடாத இடத்துல கிழிஞ்சுபோச்சு.பேண்ட்டு கிழியுறதுல ஒரு கான்செப்ட் இருக்கு. என்னனா,அது ஒரு சில இடங்கள்ல கிழிஞ்சா நமக்கும் பிரச்சனையில்லாம பார்க்குறவங்களுக்கும் பிரச்சனையில்லாம முடிஞ்சுரும்;
நல்ல காத்தோட்டமாவும் இருக்கும். ஆனா சில இடங்கள்ல கிழிஞ்சா உடனடியா மராமத்து பண்ணியே ஆகணும். அப்படியொரு இடத்துலதான் கிழிஞ்சுப்போச்சு.இதுல இன்னொரு டிவிஸ்ட் என்னனா பஸ் உள்ள கூட்டம் கம்மிதான்,கடைசி மூணு ஸீட் ப்ரிதான் பட் அதுக்கு முந்தின ஸீட்ல ஒரு நாலு பொம்பளைங்க உட்கார்ந்து இருந்தாங்க அதுல அவனோட அழகான ஜூனியர் பொண்ணும் ஒண்ணு.
!!!சத்திய சோதனை!!!
யாரும் திரும்பாம இருந்தா
எங்கத் தெரு பிள்ளையாருக்கு தேங்கா விடலைனு டீல் பேசிட்டு கடைசி ஸீட்ல உட்கார்ந்து சிவாஜி படத்துல விவேக்கும் ரஜினியும் வேட்டி மாத்துற மாதிரி ஒருவழியா யாருக்கும் தெரியாம வேற பேண்ட்ட மாத்திட்டான். இந்த நிலைமை என் எதிரிக்கும் வரக்கூடாதுடா டேய்னு நினைச்சுகிட்டான். அல்லு விட்ருச்சு.
All safe!!!!
ஏம்மா ஜூனியர் பொண்ணு உனக்கு ஒரு ரிக்வஸ்ட்; ஒருவேளை நீ இத படிச்சன்னா யார்ட்டயும் அது நீதான்னு சொல்லாம அப்பிடி கமுக்கமா இருந்துக்க. உனக்கு புண்ணியமா போவும்.
அந்த பையன் யாருன்னு கேக்குறீங்களா??? வேற யாரு விடலைப்போட போகும் வழியில் இந்த ஸ்டேடஸ போட்டுட்டு லைக்குக்காக காத்துக்கொண்டிருக்கும்.....
-பஞ்சகல்யாணி.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா