Posts

கஞ்சாவை முன்வைத்து ஒரு மதியநேர உரையாடல்!

அலுவலகத்தில் மதியம் சாப்பிட்டு கொண்டிருக்கையில் ஒரு பேச்சு வந்தது ’ போதை ’ யை முன்வைத்து . முதல்நாள் நடந்த பார்ட்டியில் , ஒன்றரை பீர் அடித்துவிட்டு வாந்தியில் ஒருவன் அங்க பிரதட்சணம் செய்ததையும் கரண்ட் கம்பத்தை கட்டிபிடித்துக்கொண்டு அலப்பறை செய்ததைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம் . அப்படியே பேச்சு , ‘ எலைட் ’ கடைகள் பக்கம் திரும்பியது . ஓ . எம் . ஆர் நாவலூர் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டதால் , ஏ . ஜி . எஸ் - ல் இருக்கும் எலைட்டில் தான் சரக்கு வாங்கியாக வேண்டுமென்று தனது அதிருப்தியை தெரிவித்தான் ஒருவன் . எலைட் சரக்குகள் குறித்தும் விலை குறித்தும் பேசிக்கொண்டிருக்கையில் , பாண்டியிலிருந்து வந்திருந்த நண்பனொருவன் அங்குள்ள விலைப் பற்றி பேச்செடுத்தான் ; நானும் என் பங்குக்கு குஜராத் அருகிலிருக்கும் டியு - டமானில் ஏற்பட்ட எனது அனுபவத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போதே உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது . ’ கஞ்சா ’. கனடாவில் கஞ்சா லீகல் . அரசின் அனுமதியுடன் விற்கலாம் . நம்மூரில் எப்படி தலைவலி , வயிற்று...

காரணமில்லா காத்திருத்தலும் - சேடிஸ மனப்பான்மையும்

உங்களுக்கு இது நடந்திருக்குமா என்று தெரியவில்லை. எனக்கும் அவ்வளவாக நடந்ததில்லை. ஆனால், சமீபமாக அவ்வபோது நடக்கிறது. ஜனவரி மாதம் டிரெயினிங் முடிந்ததில் இருந்து ஒரு இரண்டு மாத காலம் 'பென்ச்'ல் இருந்தேன். பென்ச் என்றால் பிராஜெக்ட் எதுவும் இல்லாமல் வெட்டி சம்பளம் வாங்குவது என்றர்த்தம். அப்போது தினமும் நான் இங்குதான் இருக்கிறேன், எங்கும் ஓடிடவில்லை என்பதை தெரியப்படுத்துவதற்காக சென்னை ஒன் ஆபிஸில் காலை மாலை என்று இரண்டு வேளைகளில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். நாங்கள் ரிப்போர்ட் செய்வதற ்காக செல்வோம். ரிப்போர்ட் செய்வதென்றால் நம் மூஞ்சியை அவர்களிடம் காட்டிவிட்டு ஒரு கையெழுத்திட்டு வந்துவிடலாம். ஆனால் என்ன நடக்கும்?? போய் நின்று கையெழுத்திட்டு மாற்றி மாற்றி மூஞ்சியைப் பார்த்துக்கொண்டு இருப்போம். எவ்வளவு நேரந்தான் எங்களது மூஞ்சியை பார்ப்பது?? நாங்கள் நின்றுகொண்டிருப்பதை சில சமிக்ஞைகளால் தொண்டையை செருமுவது, இருமுவது என்று தெரியவைக்க முயற்சிப்போம். தெரிந்தாலும் தெரியாத மாதிரியே இருப்பார்கள். ஒரு கால் மணிநேரம் கழித்து, "சரி போய்ட்டு மதியம் வந்து பாருங்க" என்பார்கள். மதியம...

பாராட்டும் புகழ்ச்சியும்

ஒய் , இந்த டிரெஸ் உனக்கு செமயா இருக்கு டியர் ; ஆஹான் .. நம்பிட்டேன் ! ஹே .. சத்தியமா டி ! இப்ப எதுக்கு இந்த ஐஸ் ? ஐஸ் - லாம் ஒரு மண்ணும் இல்ல ; உண்மைலயே அந்த புளு டாப் & வொயிட் லெக்கிங்ஸ்ல தேவதை மாதிரி இருந்த தெரியுமா ? ஓஹோ .. அவ்ளோதானா ? இன்னும் இருக்கா ? சொன்னா நம்பமாட்ட , நேத்துஃபுல்லா கிளாஸ்ல உன்னோட அந்த ’ டைட்டானிக் ’ கம்மல மட்டுந்தான் பாத்துட்டே இருந்தேன் ! ம்ம்ம் … பார்றா ! * நம்மை யாரோ புகழ்கிறார்கள் அல்லது பாராட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . புகழ்ச்சியும் பாராட்டும் விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது . ஆனாலும் , உடனடியாக நாம் அதை ஏற்றுக்கொள்வதில்லை . உள்ளுக்குள் அது இன்னும் வேணும் போல இருக்கும் , அதற்காக அவர்களிடம் இன்னும் பாராட்டுங்கள் என்றா கேட்க முடியும் ; இந்த சமயத்தில் தான் நாம் ’ அந்த ’ உத்தியை கையாள துவங்குகிறோம் . என்ன உத்தி ? அதாவது ஒருவர் நம்மை பாராட்டுகிறார் என்றால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளாது , “ ஏய் , சும்மா சொல்லாதப்பா ”, ” இஷ்டத்துக்கு அடிச்சுவுடு ” என்று மறுதலிப்போம் . உடனே அதுவரை ச...