காரணமில்லா காத்திருத்தலும் - சேடிஸ மனப்பான்மையும்

உங்களுக்கு இது நடந்திருக்குமா என்று தெரியவில்லை. எனக்கும் அவ்வளவாக நடந்ததில்லை. ஆனால், சமீபமாக அவ்வபோது நடக்கிறது.
ஜனவரி மாதம் டிரெயினிங் முடிந்ததில் இருந்து ஒரு இரண்டு மாத காலம் 'பென்ச்'ல் இருந்தேன். பென்ச் என்றால் பிராஜெக்ட் எதுவும் இல்லாமல் வெட்டி சம்பளம் வாங்குவது என்றர்த்தம். அப்போது தினமும் நான் இங்குதான் இருக்கிறேன், எங்கும் ஓடிடவில்லை என்பதை தெரியப்படுத்துவதற்காக சென்னை ஒன் ஆபிஸில் காலை மாலை என்று இரண்டு வேளைகளில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். நாங்கள் ரிப்போர்ட் செய்வதற்காக செல்வோம். ரிப்போர்ட் செய்வதென்றால் நம் மூஞ்சியை அவர்களிடம் காட்டிவிட்டு ஒரு கையெழுத்திட்டு வந்துவிடலாம். ஆனால் என்ன நடக்கும்??
போய் நின்று கையெழுத்திட்டு மாற்றி மாற்றி மூஞ்சியைப் பார்த்துக்கொண்டு இருப்போம். எவ்வளவு நேரந்தான் எங்களது மூஞ்சியை பார்ப்பது?? நாங்கள் நின்றுகொண்டிருப்பதை சில சமிக்ஞைகளால் தொண்டையை செருமுவது, இருமுவது என்று தெரியவைக்க முயற்சிப்போம். தெரிந்தாலும் தெரியாத மாதிரியே இருப்பார்கள். ஒரு கால் மணிநேரம் கழித்து,
"சரி போய்ட்டு மதியம் வந்து பாருங்க" என்பார்கள்.
மதியம் 2 மணிக்கு வர சொல்லிவிட்டு, 3 மணிவரை அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் மெதுவாக ஆடி அசைந்து நடந்துவருவதை பார்க்கையில் ஏனோ ஹர்பஜன் ஸ்ரீசாந்த் முகம் வந்துபோகும். 
.
எதற்காக இவ்வளவு பெரிதாக டைப்பிக்கொண்டிருக்கிறேன் என்றால், இது ஒருவிதமான 'சேடிஸ' மனப்பான்மை. நாம் எவ்ளோ பெரிய ஆள்; இத்தனை வருடமாக இங்கு இருக்கிறோம் அவ்வளவு எளிதாக நம்மை பார்த்துவிட முடியுமா?? என்ற எண்ணம். 
காத்திருப்பதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லை; ஆனால், காரணமின்றி காத்திருக்கும்போதுதான் காண்டாகிறது. அன்று அந்த அறையின் வாசலில் ஒருமணிநேரம் நிற்கும்போது நினைத்துக்கொண்டேன், எவ்வளவு பெரிய நிலைக்கு சென்றாலும், எத்தனை பெரிய ஆளாக ஆனாலும் நம்மால் ஒருவர் காரணமின்றி காத்திருக்க கூடாதென்று!! 
முடிந்தால் நீங்களும் அப்படி முயன்று பாருங்கள்.
-பிகு
05-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா