பாராட்டும் புகழ்ச்சியும்


ஒய், இந்த டிரெஸ் உனக்கு செமயா இருக்கு டியர்;
ஆஹான்..நம்பிட்டேன்!
ஹே..சத்தியமா டி!
இப்ப எதுக்கு இந்த ஐஸ்?
ஐஸ்-லாம் ஒரு மண்ணும் இல்ல; உண்மைலயே அந்த புளு டாப் & வொயிட் லெக்கிங்ஸ்ல தேவதை மாதிரி இருந்த தெரியுமா?
ஓஹோ.. அவ்ளோதானா? இன்னும் இருக்கா?
சொன்னா நம்பமாட்ட, நேத்துஃபுல்லா கிளாஸ்ல உன்னோட அந்த டைட்டானிக்கம்மல மட்டுந்தான் பாத்துட்டே இருந்தேன்!
ம்ம்ம்பார்றா!
*
நம்மை யாரோ புகழ்கிறார்கள் அல்லது பாராட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். புகழ்ச்சியும் பாராட்டும் விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனாலும், உடனடியாக நாம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. உள்ளுக்குள் அது இன்னும் வேணும் போல இருக்கும், அதற்காக அவர்களிடம் இன்னும் பாராட்டுங்கள் என்றா கேட்க முடியும்; இந்த சமயத்தில் தான் நாம் அந்த உத்தியை கையாள துவங்குகிறோம்.
என்ன உத்தி? அதாவது ஒருவர் நம்மை பாராட்டுகிறார் என்றால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளாது, “ஏய், சும்மா சொல்லாதப்பா”, ”இஷ்டத்துக்கு அடிச்சுவுடுஎன்று மறுதலிப்போம். உடனே அதுவரை சாதாரணமாக பாராட்டிக்கொண்டிருந்த அந்த நண்பர் உங்களது ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக எடுத்துரைத்து பாராட்டத் தொடங்குவார். நாம் எதிர்பார்த்ததும் அதைத்தான். இதன்மூலம் ஒருவர் நம்மை எந்த அளவு கவனிக்கிறார், எதையெல்லாம் கவனிக்கிறார் என்று தெரிந்துக்கொள்ள முடியும். அவர் நம்மிடம் நீ பண்றதுல இதெல்லாம் நல்லா இருக்கு, இப்படி எழுதுறதெல்லாம் வித்தியாசமா இருக்கு என்று சொல்லி கேட்பதில் நமக்கொரு கிளுகிளுப்பு ஏற்படும். சரி இவர் நம்மை உண்மையாகவே பாராட்டுகிறார். மேம்போக்காக அடித்துவிடவில்லை. நம் எழுத்துக்களை வாசிக்கிறார் என்று ஒரு நிம்மதி பரவும். அதுதான் நமக்கான பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாமே.
இதில் ஒரு பிரச்சனையும் உண்டும்!
இது உரையாடலை வளர்ப்பதற்கான ஒரு வழியும் கூட. எப்படி என்பதற்கோர் உதாரணம் கீழே,
உனக்கு  இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு
இதற்கு ஒரு பெண்ணின் பதில் இரண்டு விதமாக இருக்கலாம்,
ஒன்று:
..ரொம்ப தாங்கஸ்ங்க
அந்த பாராட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை விட்டுவிடுதல். உரையாடலும் முடிந்துவிடும். வளர்க்க வழியில்லை.
இரண்டு:
சும்மா பொய் சொல்லாதீங்க
இந்த பதிலில் அவள் அவனுக்கான ஸ்பேஸை அளிக்கிறாள்.
ஏய்..உண்மையாங்க! செமயா இருக்கு. அதும் இந்த சாரிக்கு இந்த கலர் ஜாக்கெட் போட்டீங்கனா இன்னும் அள்ளும்!”
கவனித்து பாருங்கள். அவள் அளித்த அந்த ஸ்பேஸில் அவன் லாவகமாக புகுந்து அதுக்குறித்து மேலும் பேச தொடங்குகிறான். அவளது உடை மீதான எண்ணத்தை ஒரு மூன்றாமவனை பேச அனுமதித்தல் அங்கு எப்படி நடந்தது? அவளறியாமலே!

என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்லிருக்கேன்-னு நினைக்கிறேன்!
-பிகு
02-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா