கஞ்சாவை முன்வைத்து ஒரு மதியநேர உரையாடல்!

அலுவலகத்தில் மதியம் சாப்பிட்டு கொண்டிருக்கையில் ஒரு பேச்சு வந்ததுபோதையை முன்வைத்து. முதல்நாள் நடந்த பார்ட்டியில், ஒன்றரை பீர் அடித்துவிட்டு வாந்தியில் ஒருவன் அங்க பிரதட்சணம் செய்ததையும் கரண்ட் கம்பத்தை கட்டிபிடித்துக்கொண்டு அலப்பறை செய்ததைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அப்படியே பேச்சு, ‘எலைட் கடைகள் பக்கம் திரும்பியது. .எம்.ஆர் நாவலூர் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டதால், .ஜி.எஸ்-ல் இருக்கும் எலைட்டில் தான் சரக்கு வாங்கியாக வேண்டுமென்று தனது அதிருப்தியை தெரிவித்தான் ஒருவன். எலைட் சரக்குகள் குறித்தும் விலை குறித்தும் பேசிக்கொண்டிருக்கையில், பாண்டியிலிருந்து வந்திருந்த நண்பனொருவன் அங்குள்ள விலைப் பற்றி பேச்செடுத்தான்; நானும் என் பங்குக்கு குஜராத் அருகிலிருக்கும் டியு-டமானில் ஏற்பட்ட எனது அனுபவத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போதே உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ’கஞ்சா’. கனடாவில் கஞ்சா லீகல். அரசின் அனுமதியுடன் விற்கலாம். நம்மூரில் எப்படி தலைவலி, வயிற்றுவலிக்கு தனித்தனியாக மருந்து இருக்கிறதோ அதேமாதிரி அங்கு ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியாக கஞ்சா இருக்குமாம். மேலும், ’ஜாயிண்ட்பற்றியும் சிகரெட்டில் கஞ்சா கலந்தடிப்பது பற்றியும் பேசுகையில் தான் ஒரு முக்கியமான மேட்டர் வெளியே வந்தது. அதாவது, நம்மூரில் கிடைக்கும் கஞ்சாவுக்கெல்லாம் வீரியம் குறைவுதானாம், அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்காக அதனுடன் எலி மருந்து கலக்கப்படுவதாக ஒருவன்  சொல்ல மற்றொருவன் அதை ஆமோதித்தான். இதுகுறித்து அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் பங்கேற்பாளனாக இல்லாமல், பார்வையாளனாக இருந்தேன். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கஞ்சாவின் விளைவுகளே பயங்கரமாக இருக்கும், இதில் எலி மருந்தும் சேர்ந்தால்?? விஷயம் அறிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா நாயமாரே???

-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா