Posts

அங்காளம் - ஒரு வாசகப்பார்வை

அங்காளம் - ஒரு வாசகப்பார்வை 0 சமகாலத்திய தமிழ் இலக்கியச் சூழலை கவனிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், தமிழ் படைப்புலகின் மீது குறுகிய காலத்தில் நடைப்பெற்றிருக்கும் இளம் எழுத்தாளர்களின் படையெடுப்பு எத்தகையது என்று. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு புதிய அலை எழும்புவது இயல்பெனினும், கடந்த பத்தாண்டுகளில் அதன் எண்ணிக்கை சற்றே மலைக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மரபில் இலக்கியம் என்பது பல்வேறு வகைகளில் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. அதில்  கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்பன அனைவரும் அறிந்தது. தமிழ் தெரிந்தவர், தெரியாதவர் என்றல்லாமல் பேஸ்புக் கணக்கு இருப்பவர் அனைவரும் கவிஞர் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வெறும் காதல் கவிதைகள் மட்டும் எழுதுபவர்களைத் தவிர்த்து சிலர் முக்கியமான சில நல்ல கவிதைகளும் எழுதி வருகின்றனர். அனைவராலும் சொல்லப்படுவதைப் போல, சிறுகதை என்ற களம் சற்றே சவாலானது தான். அதிலும் குறிப்பிட்ட அளவு எழுத்தாளர்கள் புது விதமான கதைக்களன்கள், கதை சொல்லும் உத்திகளை தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள். நாவல் கொஞ்சம் பாதுகாப்பான வெளி. ஒரு இடத்தில் கொஞ்சம் பிசகினாலும், வேறொர...

ஒரு ’தட்டை’யான கதை

ஒரு ’ தட்டை ’ யான கதை இதுநாள் வரையில் அவளுக்கு இது தோன்றியதே இல்லை . இன்று பி . டி . ரூம்மில் நீச்சல் வகுப்பிற்காக மற்ற மாணவிகளுடன் உடை மாற்றும்போது தான் அதை கவனிக்கிறாள் . அவளது வகுப்பில் படிக்கும் சில மாணவிகள் ’ பிரா ’ அணியத் தொடங்கி இருந்தனர் . இத்தனை நாள் வரை அவர்களும் இவளைப் போல் தான் , வெறும் சட்டையும் பின்னோ - பார்மும் அணிந்து வருவர் . திடிரென்று ஒருநாள் மூன்று , நான்கு மாணவிகள் பிரா அணிந்திருந்ததை பார்த்ததும் சற்றுக் குழம்பிவிட்டாள் . அவர்களிடம் , இது என்ன ? எதற்கு ? என்றுக் கேட்டதற்கு , ” அதெல்லாம் தெர்லப்பா ; எங்கம்மா போட்டு போக சொன்னாங்க ” என்றவாறு சென்றுவிட்டனர் . மாலை வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்றெண்ணியவாறே நீந்த தொடங்கினாள் . மாலை வீட்டிற்கு வந்ததும் வராததுமாக பின்வாசலில் இருந்த தன் அம்மாவிடம் சென்று , ” ம்ம்மா .. எங்கிளாஸ்ல எல்லா பிள்ளைங்களும் அது போட்ருக்காங்க ; நானும் போடணும்மா ”. ” என்னடி வந்தவுடன உளறிகிட்டு இருக்க ?” ” ப்ச் , அதும்மா ” என்று கொடியில் கிடந்த அவளது அம்மாவின் பிராவை காட்டினாள் . வந்த சிரிப்பை அடக்க...

#அகமதாபாத்_அப்டேட்ஸ்

Image
# அகமதாபாத் _ அப்டேட்ஸ் AHMEDABAD_AWARD_FUNCTION_INAE ~ " அகமதாபாத் எதுக்குல போறீங்க ?" " என்ன மச்சான் டிரான்ஸ்பரா ??" போன்ற விசாரிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன . டிரான்ஸ்பர்லாம் வேலைக்கு போறவங்களுக்குதான் ஜி கொடுப்பாங்க ; சும்மாயிருந்தா கொடுப்பாங்களா பாஸ் ?? அகமதாபாத் வந்த விஷயம் இதுதான் :- B.E Final year படிக்கும்போது நாங்கள் செய்த ப்ரொஜக்ட்டுக்கு ஒரு விருது கிடைத்துள்ளது .   INAE - Indian National Academy of Engineering, மத்திய அரசுடன் இணைந்த ஒரு கூட்டமைப்பு வழங்கும் விருதிது . முதலில் கல்லூரி அளவில் இரண்டு ப்ரொஜக்ட்கள் தேர்வு செய்தார்கள் . கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து விண்ணப்பம் செய்தவர்களில் கிட்டத்தட்ட 30 குழுக்களை தேர்வு செய்து டில்லியில் வந்து Present செய்ய துறைவாரியாக பிரித்து அழைத்திருந்தார்கள் .   (B.E-30, M.E-30, Ph.D-30) நாங்கள் இருந்த பிரிவில் ECE,EEE,EIE போன்ற துறை சார்ந்த சுமார் 15 குழுக்கள் இருந்தோம் . ( Mech,Civil-15) IIT,NIT,IISC போன்ற கல்லூரிகளிலிருந்தே வ...