Pant - Shirt பெண்கள்


Pant - Shirt பெண்கள்

=
சில விஷயங்கள் எவ்வளவு எழுதினாலும் தீராது. அப்படியான ஒரு விஷயம்தான் ’உடை’. அதிலும் குறிப்பாக பெண்களின் உடை. அழகை அழகாக பார்க்கும் வரை அது ஆபாசமாகாது என்பதென் கருத்து. அதனால்தான் இந்த பதிவு. கடந்த சில நாட்களாக பேண்ட் - ஷ்ர்ட் அணிந்த பெண்கள் அதிகமாக கண்ணில் தென்படுகிறார்கள். பொதுவாக நம்மூரில் இத்தகைய உடையணிந்த பெண்களை காண்பதரிது. கார் ஷோரூம்களிலோ, யூனிசெக்ஸ் சலூன்களிலோ தான் பரவலாக பார்க்க முடியும். ஆனால் இங்கு, இந்த கார்ப்பரேட் உலகில் அது மிக சாதாரணம். ஆனால் இங்கும் நமது பெண்கள் காட்டன் சுடிதாரிலிருந்து அத்தனை எளிதாக மாறிவிடுவதில்லை. பொதுவாக எனக்கு பெண்கள் பேண்ட் ஷ்ர்ட் அணிந்தால் பிடிக்கும். அது ஒரு ஆளுமையின் வெளிப்பாடாகவே தெரியும். ஒரு ஆணைப் பார்த்து உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று சொல்வதுபோல் இருக்கும். அதை அணிந்த பெண்களிடம் ஒரு மிடுக்கு தெரியும். ’யாரடி நீ மோகினியில்’ தாவணி நயன்தாராவை விட பேண்ட்-ஷ்ர்ட் நயனே எனக்கு சால சால இஷ்டம். உடை என்பது வெறும் உடலை மறைக்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அதற்கு பின் ஏகப்பட்ட உளவியல் இருக்கிறது. அதை அவரவர் கண்டிப்பாக உணர வேண்டும். பெண்கள் ஒருமுறையேனும் பேண்ட்-ஷர்ட் அணிந்து அதன் பின்னிருக்கும் உளவியலை உணர வேண்டும் என்பது என் பரிந்துரை. 
உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு சில பேரு கேப்பாங்க..
அதற்காக நாம் நம் கடமையை செய்யாமல் இருக்க முடியுமா??

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா