உன் பெயரைச் சொல்லவா??

உன் பெயரைச் சொல்லவா??
(குறுங்கதை)
~
எங்களிடம் வார்த்தைகள் இருந்து கொண்டே யிருந்தன; நேரங்காலம் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம். மெரினா, ஸ்பென்சர், பனகல் பார்க் என்று எங்களது சொற்கள் விழாத இடமில்லை. நாகேஸ்வரா பார்க்கின் மரமில்லா ஒரு மூலையில் அமர்ந்து மீந்த சொற்கள் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.
"ஆதிரா.."
ம்
"நான் ஒண்ணு சொல்லுவா"?
சொல்லேன்
"உன் பேர மாத்த போறேன்"
என் பேரயா??
"ம்ம் ஆமா"..
ஐயயோ அப்ப Birth affidavitலாம் வாங்கணுமே!!!
"ஏய் லுசு; இது நான் உனக்கு வைக்கப்போற பேரு. எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்"
ஓஓஓ..சூப்பர் சூப்பர். என்ன பேரு செல்லம்??
"கெஸ் பண்ணு பார்க்கலாம்"..
ம்ம்ம், எனி க்ளு??
"ஓகே..உன் உடம்புல இருக்குற ஒரு உறுப்பு வச்சு உருவாக்குன பேரு. அந்த உறுப்பு ஜோடியாதான் இருக்கும்".
கை, கால்??
"இல்ல, உன் இடுப்புக்கு மேல";
இடுப்புக்கு மேலயா??
"ஆமா"..
ஏய்ய்ய்ய், நீ என்ன சொல்லுவனு எனக்குத் தெரியும். நீ எதும் பேரு வைக்க வேண்டாம்; போடா!!
(அந்த வேண்டாம் என்பதிலே வேண்டும் என்பது அப்பட்டமாக தெரிந்தது)
"உன்கிட்ட எனக்கு பிடிச்சது அதான். இத பார்த்துதான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சேன்.
என்னனு சொல்லவா"??
எனக்கு தெரியும். நீ ஒண்ணும் சொல்ல வேணாம்.
(ப்ளீஸ், சீக்கிரம் சொல்லுடா!!)
"ஒவ்வொரு தடவையும் இத பார்க்கும்போதெல்லாம் நீ பேசாத ஆயிரம் விஷயங்களை இது என்கிட்ட பேசுது. நான் எழுதுற கவிதையில எல்லாம் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்துருது.
என்னனு சொல்லவா"??
ம்ம்ம்...
"ஒரு பட்டாம்பூச்சி அதோட சிறகுகள விரிச்சு மடக்கி பறக்குற மாதிரி இருக்கும் நீ ஒவ்வொரு தடவை கண்ணிமைக்கிறதும்"!!!
ஏஏஏஏ..வெயிட் வெயிட்; இவ்ளோ நேரம் நீ என் கண்ண பத்திதான் சொல்லிட்டு இருந்தியா??
"ஆமா, வேறென்ன"??
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல..
சரி சீக்கிரம் பேர சொல்லுடா?
"சொல்லவா"??
ம்ம்ம்..
வி
ழி
மொ
ழி
யா
ள்
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா