நானும் அரவிந்த்சாமியும்!!
நானும் அரவிந்த்சாமியும்!!
~
நேற்று எங்கள் வீட்டின் முன் சில சிறுவர்கள் ரோட்டில் செங்கல் வைத்து மூன்று குச்சிகளை நிறுத்தி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவரிலமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, எனது கொசுவர்த்தி சுருள் ஒரு ஏழெட்டு வருடங்கள் பின்னோக்கி சுழன்றது. 8,9,10ம் வகுப்பு படிக்கையில்தான் கிரிக்கெட் பித்து தலைக்கேறியிருந்த சமயம்; வாரயிறுதியில் கிரிக்கெட் மட்டையை நீளவாக்கில் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு கிரவுண்ட் கிரவுண்டாக சுற்றுவோம். அதுவும் ஏப்ரல்-மே கோடை விடுமுறையில் அடித்த பூரா வெயிலும் எங்கள் மீதுதான் விழுந்திருக்கும் என்ற வண்ணம் வெயில், வியர்வை, பசி, தாகம் பாராமல் ஆடுவோம். "எட்டாங்கிளாஸ் படிக்கும்போது அரவிந்த்சாமி கலருல இருந்தியேல இப்டி கறுத்துப்போயிட்டியே" என்று எந்தாய் ஆதங்கபடாத நாட்கள் குறைவு. தெருக்களில் செங்கற்கள் வைத்து, ஒன்பிட்ச் கேட்ச் வைத்து, வீட்டிற்குள் த்ரூவாக அடித்தால் அவுட் போன்ற விதிமுறைகளை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே, (அதை ஓனருக்கு தெரியாமல், காலடி ஓசை கேளாமல் சுவரேறி குதித்து எடுப்பது தனிக்கலை) 'டொம்'மென்று ஒரு சத்தம்.
என்னவென்று பார்த்ததில், அச்சிறுவர்களுள் ஒருவன் அடித்த பந்து எங்கள் வீட்டிற்குள் த்ரூவாக வந்து விழுந்திருந்தது!!
-பஞ்சகல்யாணி
Comments
Post a Comment