முன்னொரு நாள்



*"முன்னொரு நாள்"*  

                                                                                             -தமிழ்மறவோன் 
"எதிரெதிர் திசையில் 
சீறும் வாகனங்களை எதேச்சையாக கடப்பதுப் போல் அவளைக் கடக்க முடியவில்லை, 
அவளுக்கும் தான்.தள்ளியிருந்த மரத்தடியில் சற்று தள்ளி தள்ளியே 
நின்றுகொண்டோம். 
மின்னலாய் வந்து தெறித்தன அவளுடனான என் நினைவுகள். அவற்றை மறைக்க முயன்று தோற்றவனாய் அவளைப் ஏறிட்டுப் பார்த்தேன்; 
அவளும் பார்த்துக்கொண்டுதானிருந்தாள்!!! 
அவள் கண்கள் பேசத் துடிப்பதைப் போல் எனக்கு தோன்றியது. 
ஒருவேளை பிரம்மையாய் இருக்குமோ??? 
இருக்கக்கூடும்... 
என் சொல் வெட்டுண்ட மின்சாரமாய் ஆனது. 
ஆம்,போனது ஏனோ வழக்கம்போல் திரும்பி வரவேயில்லை!!! 
அவளுக்கு எப்படியோ தெரியவில்லை?? 
"சரி போதும்"கிளம்பலாம் என்பது போல் கரம் நீட்டினாள், பிரிய விருப்பமில்லை என்றாலும் சம்பிரதாயமாக 
நானும் கரம் குலுக்கி இதழ் விரித்து வராத புன்னகையை வரவழைத்து விடைப்பெற்றேன். 
வீடு திரும்பி என்னறை நுழைந்து, அக்கரம் நுகர்ந்தேன்; 
அதில் அவளது மணம் மாறாமல் அப்படியே இருந்தது. 
அவளது மணம் எனக்கெப்படி தெரியும்?? 
தெரியும்!!!!! 
எப்படி??? 
ஆம்,முன்னொரு நாள் நாங்கள் காதலர்களாய் இருந்தோம்.." 
-தமிழ்மறவோன். 

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா