ஓர் மழை ஞாயிறு




*"ஓர் மழை ஞாயிறு"* 
                   
                                   -தமிழ்மறவோன் 

ஓர் ஞாயிறு மதியத்தின் மத்தியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்த பாகற்காய் வறுவலையும் கொள்ளு ரசத்தையும் பிரண்டை துவலையும் சாப்பிட்டு முடித்தோம்.ஆம் நாங்கள் சைவம் (உணவில்). 
இன்று வானம் ஏனோ இருட்டிக் கிடந்தது.வார நாட்களில் ஏற்படும் வேலைப் பளுவினால் ஞாயிறுகளில் கடோத்கஜனாய் உண்டு கும்ப கர்ணனாய் உறங்க விருப்பமில்லை.பெரும்பாலும் ஞாயிறுகள் தான் எங்களை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.நாங்கள் எங்களை உணர்ந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது.சாப்பிட்ட பின், வாசலில் நாற்காலியிட்டு அமர்ந்தேன். மழை வருவது போலிருந்தது, இன்பமாயிருந்தது.அவளும் சேர்ந்துக் கொண்டாள்.இன்பம் இருமடங்கு!!! கைகளில் நீர்மோர்;"மழை வரும்போல் இருக்கிறதே,இந்நேரத்தில் மோரா?"இது நான்."நான் விரும்பி செய்தது வேண்டுமானால் குடி", இது அவள்.மறுபேச்சின்றி ஒரே மடக்கில் முடித்தேன். 
"ஷேல் வி ப்ளே கார்ட்ஸ்" என்ற அவளது அழைபபுக்கு மறுக்காது மறுநொடியே "யா ஷ்யூர் டியர்" என்று ஆரம்பித்தோம் .மிக நேர்த்தியாக ஆடினாள்.யாரும் தோற்க வேண்டாம் என்று முடிவு செய்து பாதியிலே ஆட்டத்தை நிறுத்திக்கொண்டோம்.எனக்கு அன்று நடனம் ஆட வேண்டும் போலிருந்தது."வான்னா டான்ஸ் வித் யூ பேப்"என்று இழுத்தேன்."ஒய் நாட்,கம் டார்லிங் லெட்ஸ் டான்ஸ்"என்றவளை அணைத்து ஆடத் தொடங்கினேன்.எனக்கு இளையராஜாவின் "தென்றல் வந்து தீண்டும்போது என்ன இன்பமோ"ஓடவிட்டு ஆடப் பிடிக்கும்.அவளுக்கு ஜஸ்டின் பீபர் தான் பிடிக்கும்,இருந்தும் மறுப்பின்றி என்னோடு ஆடினாள். ஆடத் தொடங்கினோம், 
ஆடினோம் ஆடினோம், ஆடிக்கொண்டேயிருந்தோம்; எப்போது முடிந்தது என்றே தெரியவில்லை. 
விழித்தபோது இதழின் ஓரம் வழிந்த புன்னைகயோடு உறங்கிக்கொண்டிருந்தாள்.எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தேன்;கன்னத்தில் ஒட்டியிருந்த அவளது கருப்பு வண்ண ஸ்டிக்கர் பொட்டை எடுத்துவிட்டு அடுத்த ஞாயிறுக்காக காத்திருக்கிறேன்!!! 
-தமிழ்மறவோன்.

Comments

  1. arumaiyaga ulladhu tamilmaravon....!!!
    ungalin adutha kurungathaikaga kathirukum...ungal rasigan B)
    Nandri !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா