LipStick பெண்கள்


LipStick பெண்கள்


ஒரு மாத கால அகமதாபாத் வாழ்க்கையைப் பற்றி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். "அங்கல்லாம் லிப்ஸ்டிக் போடாம ஒரு பொம்பளைகளும் வெளிய வரமாட்டாங்களே???"
- இது அம்மா.
ஆம், அங்கு மேக்கப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் அதிகம்தான். ஒரு கோட்டிங் மேக்கப், லிப்ஸடிக் இல்லாமல் யாரும் வெளியே வரமாட்டார்கள். வெகு சிலரை தவிர பெரும்பாலானோர்க்கு அது பொருந்தியும் போகும் என்பதுதான் ஹைலைட். நம்மூர் பெண்கள் மேக்கப் போட்டால் கல் தூணுக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி இருக்கும்; ஏனெனில் பொதுவாகவே நமது ஸ்கின் டோன் அப்படி. அதற்கு தகுந்த மாதிரி போட்டால் தான் அழகாக இருக்கும். ஆனால் நம் பெண்கள் அப்படி செய்யாமல் சும்மா அள்ளி அப்பி விடுகிறார்கள். அது நாரகசமாகி விடுகிறது. மேலும் நமது பெண்களுக்கு மேக்கப் தேவையுமில்லை என்றே தோணுகிறது. பாண்ட்ஸ் பவுடரையோ, ஸ்பின்ஸ் பவுடரையோ லேசாக போட்டுக்கொண்டு; நெற்றியில் கோபி பொட்டையோ, நடுவில் கல் வைத்த நெளிவு பொட்டையோ வைத்து, ஸ்டெப் வைத்து புடவை கட்டாது சிங்கிள் ப்ளோட்டில் விட்டு, லூஸ் ஹேரில் வருவது நம் பெண்களுக்கு அத்தனை அம்சமாய் பொருந்தி போகும். அதை விட்டுவிட்டு மேக்கப் போடுகிறேன் பேர்வழி என்று உங்களது அழகை அசிங்கமாக்கி வைக்காதீர்கள் தோழிகளே. அதேப்போல் லிப்ஸ்டிக் பயன்பாடும் அங்கு அதிகம்தான். எந்த அளவுக்கென்றால், என்னருகில் அமர்ந்திருக்கும் ராஜஸ்தான் தோழியொருத்தி தினமும் அடர் சிவப்பில் லிப்ஸ்டிக் அப்பிக்கொண்டு வருவாள். எங்கள் மேஜையில் மூவருக்கும் பொதுவாக ஒரு வாட்டர் கேன் வைத்திருப்போம், அதில் அவள் தண்ணீர் குடித்த பின்பு நாம் குடித்தால் அந்த லிப்ஸ்டிக் வாடை குப்பென்று நம்முகத்தில் அடிக்கும். இவ்வளவுக்கும் அவள் உதடு படாமல் 'அழகாக' அண்ணாந்துதான் குடிப்பாள். அந்தளவுக்கு லிப்ஸ்டிக் இருக்கும். மற்றொரு உதாரணம், நானும் நண்பனும் எதேச்சையாக அருகிலிருந்த வேறொரு பெண்ணின் லிப்ஸ்டிக் குறித்து தமிழில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியாதென்றாலும், நாங்கள் பேசியதிலிருந்த லிப்ஸ்டிக்கென்ற வார்த்தையை புரிந்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு அரைமணிநேரம் தனது கர்ச்சீப்பினாலும், நாவினாலும் உதட்டை ஒத்தியெடுத்து 'ஓரளவு' குறைத்து, எங்களைப் பார்த்தாள். நாங்கள் அவளைப் பார்க்காதது போல் இருந்துக்கொண்டு, அவள் பார்க்காதப்பொழுது பார்த்துக்கொண்டோம்,
அழகை ரசித்துக்கொண்டோம்!!!

சிலர் சில விஷயங்களை செய்யாமலிருப்பதே அழகு..
அதிலொன்று இந்த,
'மேக்கப்'.
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா