முதல் சிகரெட்



முதல் சிகரெட்

எட்டாம் வகுப்பு படிக்கையிலையே சிகரெட் பிடிக்கும் நண்பர்களை பெற்றிருந்தாலும், அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. கோவில்பட்டியில்

கல்லரியிலும் கூட அதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஆனால், மனதின் ஓரத்தில் ஒரு 'இது' இருந்துக்கொண்டேதான் இருந்தது. அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்ற ரீதியில் தான் அனைத்து பழக்கங்களும் ஆரம்பிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிதான் எனக்கும்; பௌர்ணமி இரவு, மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருக்க, குஜராத்தின் Rann of Kutch 'White Desert'ல் கால்கள் உப்பின் உள்புதைய நடந்துக்கொண்டிருக்கிறோம்.
உடலை ஊடுருவும் குளிர்; கிட்டத்தட்ட 10 டிகிரி இருக்கும். மூச்சுவிட்டால் புகையாய் பறக்கும் நிலை. அந்த நொடியில் தோன்றியதுதான்
"இப்ப ஏன் ஒரு தம்மடிக்க கூடாது??"
(ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்!!)
உடனே அதற்கு ஒரு ஆசானைப் பிடித்து, எனக்கு தம்மடிக்க சொல்லித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முதலில் மறுத்தவன், பின்னர் இதை பழக்கமாக்கி கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் கற்றுத்தந்தான்.
1.எச்சில் படாதவாறு இரு உதட்டுக்குமிடையில் பிடித்துக்கொண்டு பற்ற வைக்க வேண்டும்.
2. முதல்முறை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்க வேண்டும்.
3. உள்ளிழுத்தவுடன் ரயில்வண்டி மாதிரி விட்டுவிடக்கூடாது.
4. ஒரு நொடி வாயைமூடி அதை வாய்க்குள் படரவிட வேண்டும், அது தொண்டை வரை சென்று மீண்டும் வரவேண்டும்.
5. பின்னர், மொத்தமாக வாயைத்திறந்து அதை கக்கிவிடாமல் கொஞ்சமாக திறந்து கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்.
6. புகையை நாமாக வெளியே தள்ளக்கூடாது, அதுவாக வெளிவர செய்யவேண்டும்.
7. முதல்முறை என்பதால் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கலாம்.
தலைவலி வரலாம், தொண்டை வறண்டு போகலாம், இருமல்,தலை சுற்றல் வரலாம். அதனால், ஒரே இடத்தில் நிற்காமல் நடந்துக்கொண்டே அடிப்பது நல்லது.
8. சிகரெட் பிடிப்பதை ஒருபோதும் போட்டோ எடுக்க கூடாது.
9. ஒரு நாளைக்கு சிகரெட்டின் எண்ணிக்கை மூன்றை தாண்டக்கூடாது.
10. முக்கியமான விஷயம் ஸ்டைலுக்காகவோ, கெத்துக்காகவோ, சீனுக்காகவோ அடிக்கவே கூடாது.
ஓரளவு கற்றுக்கொண்டேன். இதில் பெரிதாக எதுவும் இல்லை.
அநேகமாய் இது நமக்கு தேவைப்படாது என்றே தோன்றுகிறது.
இருந்தாலும், இருக்கட்டுமே!!
சிகரெட் பிடிக்க பழகினால் விடுவதற்கு ரொம்ப கஷ்டம், அப்படியே தொற்றிக்கொள்ளும் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.
'களவும் கற்று மற'
"Experts Feedbacks Please"
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா