பரோட்டா



பரோட்டாவுக்கும் எனக்குமான பந்தம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. குறிப்பாக பள்ளி பருவத்தில் மாதமொருமுறை என்ற அளவில் இருந்தது, பின்னாளில் வாரமொருமுறை என்றாகி போனது. என்னதான் மைதா உடலுக்கு தீங்கானது என்றாலும், அது செய்யப்படும் முறையை பார்த்தால் தொண்டைக்குழிக்குள் இறங்காது என்று இருந்தாலும் அந்த பரோட்டாவின் மீது பெரும்பாலானோருக்கு ஒரு ஸாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யும். இப்போதெலாம் அதிகம் பரோட்டாக்கள் சாப்பிடுவதில்லை. உடல்நலனில் திடீரென்று அக்கறை பொத்துக்கொண்டு வந்துவிட்டதா என்றுக்கேட்டால் அப்படியெலாம் எதுவுமில்லை. தோணவில்லை அவ்வளவுதான். சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வேறெதுவும் கண்முன் வந்தாடாது, வண்டி நேரே சென்று நிற்குமிடம் 'நியூ சுவை' புரோட்டா ஸ்டால். சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று என் முன் பிச்சு போட்ட நான்கு பரோட்டாக்கள்.
"வேறெதுவும் தம்பி"??
"அண்ணே, இதுல சால்னா ஊத்திட்டு; வெங்காயம் அதிகமா ஒரு ஆம்லேட் கொண்டு வாங்கண்ணே"!!
சால்னாவில் பரோட்டா உள்நீச்சல் அடித்துக்கொண்டிருந்தது.
அதற்குள் வெங்காயம் தலைமையில் ஆம்லேட் வந்து சேர்ந்தது.
"தம்பி"..
"அவ்வளவுதாண்ணே. எனக்கு வேறெதுவும் வேணாம்"
வொயிட் பெப்பரை கொஞ்சம் தாராளமயமாக தூவி, முதல் வாயை கொஞ்சமாக பிட்டு உள்ளே அனுப்பினேன். அந்த பெப்பர் நாக்கில் பட்டு சுள்ளென்றிருந்தது.
இதுதான் ;
இதுதான்
ஆம்லேட் சாப்பிடுவதற்கான காரணம்.
சால்னா ஊறி திளைத்து பெருத்த பரோட்டாவை எடுத்து நாக்கின் நுனியில் வைத்து உள்ளிழுத்து கடைவாயில் மென்றுக்கொண்டே அடுத்த வாய் ஆம்லேட்டை உள்ளே தள்ளினேன். இப்படியாக நான்கு பரோட்டாக்களுக்கு இறுதிமரியாதை செய்யப்பட்டது. "வெளியே வரும்போது,
என்ன தம்பி நாலு போதுமா"??
அண்ணே,
"அஞ்சுக்கு மேல போனா அது ஓசி சாப்பாடு;
அஞ்சுக்குள்ளனா அது ஓன் சாப்பாடு" என்று தெளிவுப்படுத்திவிட்டு வந்து இதோ இதை டைப்பிக்கொண்டிருக்கிறேன்..
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா