அப்படி போடு போடு


அப்படி போடு போடு



சன் டிவியில் 'கில்லி' படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சரியாக 11 ஆண்டுகளுக்கு முன் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் நடந்த சில விஷயங்கள் ஊதுப்பத்தியில் இருந்து கிளம்பும் வாசனையாய் மனதுக்குள் பரவுகிறது. அந்த பள்ளியில் எனக்கு அதுதான் இறுதியாண்டு, ஏனெனில் அங்கு ஐந்தாம் வகுப்பு வரைதான் உண்டு. ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு போய் ஆக வேண்டும். இந்த நிலையில்தான் பள்ளி ஆண்டுவிழா வருகிறது. ஆண்டுவிழாவை விமரிசையாக கொண்டாடி பல வருடங்கள் ஆனதால், இந்த வருடம் சற்றே சிறப்பாக கொண்டாட திட்டம். பள்ளியில் பெரிய தலை நாம்தான் என்பதால், ஒரு கலக்கல் பெர்பாமன்ஸ் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. 'கில்லி' படம் வந்த சமயம் அது. நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல் "அப்படி போடு போடு". ஒரு மிகுந்த போட்டிக்கிடையே யார் யாருடன் ஆடுவதென்பது முடிவானது. 'சந்திரா' மிஸ் சொல்லிக்கொடுத்த அந்த ஸ்டெப்புகள் எல்லாம் இன்றும் நினைவில் நிற்கிறது . அந்த பாடலின் ஓப்பனிங்கில் ஒரு ஃபாஸ்ட் பீட் வரும், அதற்கென்று ஒரு மூவ்மெண்டை ரொம்ப நாட்கள் தேடி கண்டுபிடித்தோம். அந்த மூவ்மெண்ட்டில் இருந்து பாடல் முடியும் வரை பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. விசில் சத்தம் விண்ணை பிளந்தது. கரவொலி காதை கிழித்தது. (அப்போதே விசில் அடிக்க கூட்டத்தில் ஆள் ஏற்பாடு பண்ணியதெல்லாம் வேற டிபார்ட்மெண்ட்). ஒவ்வொரு முறை இந்த பாடலை பார்க்கும்போதும் கேட்கும்போதும் மீண்டுமொருமுறை ஐந்தாம் வகுப்பு படிப்பதைப் போன்றதோர் உணர்வு.
விஜய் டி.வியும் ராஜா ராணியும் போல்
"நானும்,
அப்படி போடு போடு"வும்...
இதில் இருக்கும் கதாநாயகர்களோடு இன்றும் தொடர்பில் இருக்கிறேன், அந்த கதாநாயகிகள் தான் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை; தேடிக்கொண்டிருக்கிறேன்!!!
-பஞ்சகல்யாணி.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா