விரல்கள்


விரல்கள்


விரல்கள் ஈர்ப்பவை!
விரல்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. நான் சந்திக்கின்றன மனிதர்களின் கண்களுக்கு பிறகு விரல்களையே அதிகம் நோட்டமிடுகிறேன். எத்தனை வித விதமான விரல்கள்; சிசுவின் பஞ்சு விரல்கள், கன்னம் கிள்ளும் கள்ளியின் பன்னீர் பூ விரல்கள், விரலிடையில் நுழைந்துக்கொள்ளும் காதல் வழியும் விரல்கள், புணர்ச்சியின் உச்சத்தில் முதுகையழுத்தும் காமம் சொரிக்கும் விரல்கள், உதட்டு ரேகையை அளக்கும் அழகான விரல்கள், குட்டையான விரல்கள், உருளை வடிவ விரல்கள், நீண்ட நெடும் முருங்கையை போன்ற விரல்கள், சுருக்கங்கள் நிறைந்து காணப்படும் விரல்கள், எசகு பிசகாய் கடித்து குதறி வைக்கப்பட்ட நகங்கள் கொண்ட விரல்கள், அழகாய் செப்பனிடப்பட்ட மெடிக்கயூர் விரல்கள், நகப்பூச்சு பூசப்பட்ட இடது கை பெருவிரல், ஒன்று விட்டு ஒன்றாக வெவ்வேறு வண்ண பூச்சுகள் பூசப்பட்ட விரல்கள், அருகில் அமர்ந்திருக்கும் தோழியின் என்டர் தட்டும் சுட்டுவிரல், ஸ்பேஸ் பார் தட்டும் பெருவிரல், கதவின் இடையில் சிக்குண்டு நீலமேறிய நகக்கண்ணுடைய விரல்கள், அழுக்கு நிறைந்த நக இடுக்கைக்கொண்ட விரல்கள், நகச்சுற்று வந்து செத்துபோன நகமுடைய விரல்கள், பாதியாய் உடைந்த நகங்கொண்ட பெருவிரல் இப்படி எண்ணற்ற விரல்களை சுமந்துக்கொண்டு திரிகிறார்கள் நான் காணும் மனிதர்கள். மனிதர்களைப்போல விரல்களும் விசித்தரமானவைதான்.
நீங்களும் விரல்களை உற்று நோக்கி பாருங்கள்.
விரல்கள் ஈர்ப்பவை!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா