எனக்கு பொண்ணு கிடைக்காதா???



எனக்கு பொண்ணு கிடைக்காதா???
--------------------------------------------------------
"அவன்-அவள் மற்றும் நானும்"

அப்படின்னு நேத்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதுக்கு இன்னிக்கு வாட்ஸப்புல ஒரு நண்பர் வந்து இப்படி சொல்றாப்ல, 
"Dai, ethku da fbla ipdilam post podra? Elarum ipdithan. Aana veliya solita irkom? Ths wil create bad impression on you da.
Athu matm ila,naliku kalyanathku ponnu pakumbothu periya isue agum da. Dont repeat ths. Nan solratha soliten aparm un ishtam"னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கே ஒரு நிமிஷம் பயம் கொடுத்துட்டு. ஒரு வேளை நிஜமாவே நமக்கு கல்யாணம் ஆகாதோனு?? அப்பறம் தான் யோசிச்சேன், அவனே சொல்லிட்டான் "எல்லாரும் அப்படிதான் ஆனா யாரும் சொல்றதில்லனு" அப்ப நான் சொல்றேன்னா நான் நடிக்கலனு தான அர்த்தம். நடிச்சாலும் நடிக்குறேன்னு சொல்லிட்டு தான நடிக்குறன். எனக்கு பாக்குற பொண்ணும் எங்கயோ பஸ்ல போகும்போது இத அனுபவிச்சுருப்பா தான? கஷ்டப்பட்டிருப்பா தான?? அப்ப அடுத்தவங்களோட கஷ்டத்த புரிஞ்சுக்குறவனா தான இங்க நான் நிக்குறேன். ஒரு இடத்துல எனக்கே வெட்கமாகி திருந்த முயற்சிக்கறேன்ல?? இந்த சம்பவத்த திருந்துறதுக்கான ஒரு வாய்ப்பா தான் நான் பாக்குறேன். உள்ள உள்ளதை உள்ளபடியே எழுதுனது இது.
"இதான் நான்"!!!
எல்லாம் சரிதான் பாஸ், எல்லா பொண்ணுங்களும் இதெல்லாம் புரிஞ்சுக்குவாங்களா??
இதெல்லாம் புரிஞ்சுக்குற பொண்ணு என்னைய கட்டிக்கிட்டா போதும் ,(Ultimate da பிகு)தோழர்!!!
( இப்பவே என் ப்ரெண்ட் லிஸ்ட்டுல இருக்குறவங்க வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவாங்க;பாக்குறியா?னு கேட்டுட்டு வந்துருக்கேன்.
காசா பணமா அடிச்சு விடுவோம்!!!)
ஒண்ணும் புரியாதவர்கள்  நேற்றைய பதிவை படித்து வரவும்
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்