"தியாகிகள்"



"தியாகிகள்"
---------------------

பஸ்ல ஒரு கூட்டத்துக்காக திருவான்மியூர் போயிட்டிருக்கும்போது, சென்னை வந்து இத்தன நாள் ஆச்சு எங்கயுமே போகலையேனு திடிர்னு தோண, சட்டுனு ஜன்னல பார்த்தேன் "தியாகிகள் மண்டபம்" உடனே இறங்கி, உள்ள போயாச்சு. நம்ம தியாகிகள் அப்படி என்னதான் பண்ணிருக்காங்கனு பார்த்துட்டு வெளிய வந்தேன். நல்ல அருமையான சூழல்; புல்வெளி என்று பார்க்கவே ரம்மியமாய் இருந்தது அந்த இடம். இதுமட்டுமில்லாம, உயிரோட இருக்குற நிறைய தியாகிகள் தங்களோட வீடு, படிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு வந்து நாட்டோட வளர்ச்சிக்காக(!!!) படு பயங்கரமா "போராடிகிட்டு" இருந்தாங்க; (என்ன வளர்ச்சினு கேக்கக்கூடாது)
அதுவும் தனியா இல்லைங்க ஜோடி ஜோடியா!!!
"நீ திரும்ப ரூம்முக்கே போயிடு சிவாஜினு" உள்ளயிருந்து காந்தி சொன்ன மாதிரியே கேட்டது. நமக்கெதுக்கு வம்புன்னு ரூமுக்கு வந்து பேசாம இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டேன்.
(அநேகமா காந்தி மண்டபத்துக்கு தனியா போன முட்டாள் நானா தான் இருப்பேன்னு நெனைக்கேன்)
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா