எத்திராஜ் மாணவி- சமூக ஆர்வலர் (அதிகப்ரசங்கி)
எத்திராஜ் மாணவி- சமூக ஆர்வலர் (அதிகப்ரசங்கி)
-------------------------------------------------------------------------------------
நேத்து பஸ்ல வரும்போது, எனக்கு பின்னாடி உட்கார்ந்து யிருந்த ஒரு அதிக ப்ரசங்கி, கண்டக்டர் செய்ய வேண்டிய வேலைய அவரே பார்த்துட்டு இருந்தாரு. "படில நிக்காதப்பா உள்ளப்போ உள்ளப்போ உட்காரு"னு சொல்லிட்டே வர்றாரு. எத்திராஜ் ஸ்டாப்புல ஒரு காலேஜ் பிள்ள ஏறி, உட்கார இடம் இல்லாம நின்னுட்டே வந்துச்சு. என் பக்கத்துல ஒரு தாத்தா உட்கார்ந்தது இருந்தாப்ல. என் மானங்கெட்ட மனசு இப்படி கணக்கு போடுது, "இந்த தாத்தா இறங்கிட்டாருனா, அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து உட்காரும்னு" ஒரு நப்பாசையில அந்த தாத்தாகிட்ட ஒவ்வொரு ஸ்டாப்பிங் வரும்போதும் "இறங்கப்போறீங்களா, இறங்கப்போறீங்களா"னு கேட்டுட்டே வந்தேன். ஒரு கட்டத்துல அவரே டென்சனாகி இறங்கிப் போயிட்டாரு. இப்ப அந்த சமூக ஆர்வலர் தான் (முன்னாடி அதிக ப்ரசங்கினு சொன்னோமே அவரேதான்) "ஏம்மா இந்தா இடம் இருக்குல்ல உட்காரேன்"னு சொல்ல,
அந்த பிள்ளையும் சமர்த்தா எம்பக்கத்துல வந்து உட்காந்துகிட்டு, இரண்டு இன்ச் கேப் விட்டு!!!
நல்ல ஹைட்டு, சைஸ் ஜீரோக்கு டிரைப் பண்ணும்னு நினைக்கேன் நல்ல ஸ்லிம்மா வேற இருந்துச்சு.
(நம்மதான் அப்பவே எழுதிருக்கோமே, உயரமானவர்கள் வசீகரமானவர்கள்னு)
ஆமா வசீகரம்தான். வடநாட்டு பிள்ளயா இருக்கும்போல, அவங்க மேல ஒரு ஸ்மெல் அடிக்குமே?? அது அடிச்சுட்டே இருந்தது. சரி எதாவது பேச்சுக் கொடுக்கலாம்னு திரும்புனா, பட்டுன்னு எந்திச்சு பக்கத்து லேடிஸ் ஸீட்டுக்கு போயிட்டு. சுருங்கிய மூஞ்சியுடன் அந்த சமூக ஆர்வலரைப் பார்த்தேன்; ஒரு தாடிக்காரனிடம் "ஏய், உட்காருப்பா தம்பி பக்கத்துல எடம் கெடக்குதுல" என்று அதிக ப்ரசங்கித்தனம் செய்துக்கொண்டிருந்தார்!!!
-பஞ்சகல்யாணி
30-09-2016
Comments
Post a Comment