Posts

விழிமொழியாள்

Image
விழிமொழியாள்                                                                                     **கொலைக்காரி**                                                               " இமை விரித்து  விழித் திறந்து  உடல்  நுழைந்து  உயிர் துளைக்கும்  கொலைக்காரி  நீ"  *************************************** "வில்லாய் ஏறி இறங்கும்  அப்புருவமது எனை  இரக்கமின்றி இழுத்துச்  சென்று யாருமற்ற   இன்பவெளியில்  இட்டுசெல்கிறது ..  இன்பத்தில் தனியாய்   உழல்கிறேன் நான் !!!" ************************************** **சாக ...

நரைத்த மீசை

நரைத்த மீசை"(குறுங்கதை) 28 February 2015 at 10:46 Public Friends Only Me Custom Close Friends Palayamkottai Area See all lists... "Last bench student" Family Go Back *****"நரைத்த மீசை"***** ------------------------- அவளுக்கு எப்படியேனும் அதை செய்து விட வேண்டுமென்று ஆசை. தனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அதை செய்வதற்கு தான் முயன்றுக் கொண்டிருக்கிறாள்.அவளது நேரம் வீட்டில் அவளது அம்மாவோ குட்டி தங்கையோ இருந்துக்கொண்டே யிருந்தனர்.அவளால் அதை செய்ய முடியவில்லை.வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை செய்ய முடியாது.ஒருவேளை செய்து மாட்டிக்கொண்டால் அசிங்கம் என்றெண்ணி செய்யாமலிருந்தாள்.இன்று அவளது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் திருமணத்திற்கு அனைவரும் சென்றுவிட்டனர்.அனைவரும் சென்றபின் வாசற்கதவை தாழிட்டு உள்ளே வந்தாள்.அறையின் அனைத்து சன்னல்களையும் அடைத்து திரைச்சீலையை இழுத்துவிட்டாள்.இதயம் ஏனோ அவளையறியாமலே வேகமாய் அடித்தது.அறைக்குள் வந்து அதை செய்ய முனைந்தாள்.அப்போது வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே,பதற்றத்துடன் அடித்து பிடித்து இயல்பாய் இருப்பதாய் நடித்து கதவை திறந்...

காத்திருத்தல்

Image
காத்திருத்தல்   அவள் மட்டும் தனியாக இருந்தாள்  திருட்டுப் பூனையாய் வீட்டினுள் நுழைந்தேன்  எட்டாக்  கொடிக் கம்பியில் எட்டி எட்டி  துணிக் காயப் போட்டுகொண்டிருந்தாள்  பின்னால் சென்று , அடிவயிற்றுக்கு மேல் விரல் பதித்து, தோள் இடுக்கில் முகம் புதைத்தேன்.  கண்டு கொண்டாள் , நானென்று  விருட்டென்று திரும்பினாள் !!!!! கரங்கள் அவளிடையில் நின்றுகொண்டது  பத்திரமாக ... மூச்சும் மூச்சும் கலந்துகொண்டன  அடுத்தென்ன??? -என்பதுபோல் பார்த்தாள்  சுவற்றில் சாத்தினேன்  கால்களால் அண்டைகொடுத்து கொண்டாள்  கண்கள் ஏனோ மூடியே கிடந்தன , வேகமாய் வெளியேறினேன் நான்  காத்திருக்கட்டும் !!! பெற்றுகொள்வதை விட , காத்திருத்தல் சுகமானதே !!!                                                     _  தமிழ்மறவோன் .    

தனுமை

Image
                                                                            தனுமை                                                -  வண்ணதாசன்                   இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே ...

மீசை வைத்த மிருகம்

Image
  மீசை வைத்த மிருகம்  மாற்றம் உன்னிலிருந்து ,, ,        இன்று என் தோழி என்னிடம் ஒரு விஷயம் கூறினாள் .அது விஷயம்  என்பதை விட விபரீதம் என்றும் விஷம் என்றும்  கூட கூறலாம் . ஆம்,நடந்தது இதுதான் ...நேற்று தீபாவளி விடுமுறையை முன்னிட்டு என்  தோழி சென்னையில் இருந்து பேருந்தில் நெல்லைக்கு பயணம் செய்கிறாள். அப்போது அவளது பின்னால் சீட்டில்  இருக்கும் ஒரு பேண்ட் ஷர்ட் போட்ட  நாய் ஒன்று சில்மிஷம் செய்துள்ளது .இதை உணர்ந்த என் தோழி அந்த  நாயை அடிக்காமல் அதட்டி உள்ளார் .இதுதான் அவர் செய்த பெரிய தப்பு. அவர் திட்டியதை பேருந்தில் உள்ளவர்கள் கவனிக்கவும் இல்லை.சிறிது  நேரத்திற்கு பின் அந்த நாய் தன் வாலை மீண்டும் ஆட்டி உள்ளது .இந்த  முறையும் அந்த வாலை அறுக்காமல் அவனது  அருகில் இருக்கும் ஆளை  சற்று இடம் மாறி உட்காருமாறு கூறி உள்ளாள் .அவர் சற்று நல்லவர்  என்பதால் மாறி அமர்ந்துள்ளார் .சற்று நிம்மதி .சிறிது நேரத்திற்கு பின் அந்த  நாய் பின் சீட்டில் ...

என்ன தோணுதோ வச்சுக்கங்க!!!

என்ன தோணுதோ வச்சுக்கங்க!!! காதல், காமம், இன்பம், துன்பம் எதோ ஒண்ணு....   இதமாய் வருடும் இனிக்காமல் இனிக்கும் ஓங்கி அடிக்கும் , வலிக்காமல் வலிக்கும் நெருஞ்சி முள்ளாய் குத்தும் கொக்கிப் புழுவாய் குடையும் குத்தினாலும் குடைந்தாலும் கத்தினாலும் கதறினாலும் வாழ்வில்., ஒருமுறையேனும் அதை நீயோ.. உன்னை அதுவோ.. கடந்தே தீரும் !!!!                                                                - தமிழ்மறவோன் 

My Short Film

short film on WATER CONSERVATION http://youtu.be/lRBq0cMd5rs

மலர்கள் மலரும் தருணம் !!!

Image
                                   மலர்கள் மலரும் தருணம் !!!                                                           இரவுகள் ஒவ்வொன்றும் நீ ஆனாய் . . .                              என் நினைவுகள் எங்கெங்கும் நிலை ஆனாய்                              உன்னை நான் மறக்கும்  நாளெது???                              நான் என் மரணத்தை முத்தமிடும் நாளது                                  ...

என் உயிர் நீதானே ...

Image
என் உயிர் நீதானே ...                                               உன்னை பார்த்த முதல் நாள் நினைவில்லை ...                   உலகில் உனக்கு இணை யாருமில்லை ...                    உன்னை ஒவ்வொரு முறை காணும்போதும்                     கரைந்து போகிறேன் நான் ..                    நான் தவிப்பதைப் பார்த்தும் கூட                     கரையவில்லையா உன் மனம் ???                    உன் இதழ் பட்ட முதல் தருணம்                     என் வாழ்வின் சிறந்த தருணம்....     ...

வணக்கம் .....

வணக்கம் ..... அன்பர்களே ,                         நான் எனது வலைப்பூவை இன்று துவங்குகிறேன் .. நான்  இதில் எனது படைப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன் .எனவே , உங்களது மேலான ஆதரவுகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . நாளை  முதல் எனது படைப்புகளை  உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .                                                                                    உங்கள் அன்பு நண்பன் ,                                                                             ...