(உங்கள் கேள்விக்கென் பதிலிதுவே!!) .



(உங்கள் கேள்விக்கென் பதிலிதுவே!!)
.
பெரும்பாலும் கவிதை எழுதும் அனைவரும் இக்கேள்வியை கடந்தே வந்திருப்பீர்கள்.
"நீங்க கவிதைலாம் எழுதுறீங்களே, யாரையாது காதலிக்கிறீங்களா"?? இதை இரண்டு விதமாக அணுகலாம். "காதலித்தால் கவிதை எழுத வேண்டுமா? அல்லது கவிதை எழுதுபவர்களெல்லாம் கண்டிப்பாக காதலித்தாக வேண்டுமா?"

நம் மனதில் அப்படித்தான் விதைக்கப்பட்டிருக்கிறது போலும்.சிறுவயது முதலே காதலிப்பவர்கள் தான் கவிதை எழுதுவார்கள் என்றும்; கவிதை எழுதுறான்னா அவன் கண்டிப்பா யாரையோ உருண்டு புரண்டு காதலிக்கிறான் என்றும் உட்செலுத்தி வைத்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை,
"கவிஞனுக்கு காதலி(கள்) அவசியமில்லை..
ஆனால்,காதல் அவசியம்!!!".
ஏதோ ஒரு காதலின் அதீத வெளிப்பாடுதான் கவிதை.
அந்த "காதல்" எதன் மீதும்,யார் மீதிலும் வரலாம்.காலையில் பருகும் சாயாவிலிருந்து, மலரும் கொன்றை மீது,கடக்கும் காக்கையின் மீது என்று வரலாம்.சில நேரங்களில் பிடித்த பெண்ணின்(காதலி) மீதும் வரக்கூடும்.ஒன்று உறுதியாய் சொல்லலாம், "ஒவ்வொரு கவிஞனுக்கும் காதலி இருப்பாள் என்று சொல்ல முடியாது, ஆனால் ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் கண்டிப்பாக காதல் இருக்கும்.
"கவிதை அதீதத்தின் வெளிப்பாடு."
-தமிழ்மறவோன்.
28-05-2016
(உங்கள் கேள்விக்கென் பதிலுதுவே!!)

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா