"தயிர்சாதமும் புளிக்கொழம்பும்"



"தயிர்சாதமும் புளிக்கொழம்பும்"
------------------------------

எனக்கு மிகவும் பிடித்த கொழம்பு வகைகளில் இந்த புளிக்கொழம்பிற்கு முக்கிய இடமுண்டு. அதும் அம்மா வைக்கும் புளிக்கொழம்பென்றால் அதினினும் பிடிக்கும்.அந்த புளிக்கொழம்பு எப்படி இருக்கணும் தெரியுமா? நிறைய சின்ன வெங்காயம் போட்டு, பல்லு பல்லா பூண்டுப் போட்டு நடிகை சிநேகா கலர் வர்ற வரைக்கும் வதக்கி கொழம்பு நல்ல சுரு சுருனு கொதிக்கும் போது பிஞ்சாவும் இல்லாம முரட்டுக் காயாவும் இல்லாம் நல்ல நீளமான முருங்கைகாயப் போட்டு இறக்கி, அந்த கொழம்போட மேல் லேயர்ல அப்படி நல்லெண்ணய்ய ஊத்தி நல்லெண்ணய்ல கொழம்ப மிதக்கவிட்டு இறக்கி வைக்கோணும்!!! அதுக்கப்புறம் சாதத்துல தயிர நிறய ஊத்தி கொஞ்சமா தண்ணி சேர்த்து நல்ல பிசைஞ்சு சோத்த விட கொழம்ப அதிகமா ஊத்தி முருங்க காயோட சதைப்பத்த சோத்துக்குள்ள புதைச்சு பெரிய உருண்டையா உள்ள தள்ளுனோம்ணு வைங்க "தேனுல ஊறுன பேரிச்சையும் தோத்துப் போகும்". முக்கியமான இடத்துக்கு இப்பதான் வாரோம். சாப்பிட்டு முடிச்சுட்டு தயிர் சோத்துல உள்ள தயிரும் கொழம்பும் மிக்ஸிங்கா தட்டுல திட்டு திட்டா ஒட்டிட்டு இருக்கும், அத அப்படி விட்ரக்கூடாது; பெரு விரலை ஸ்பூன் மாதிரி வச்சு எல்லா வெண்ணையையும் ஒண்ணு சேத்து தட்டோட ஒரு எண்டுக்கு கொண்டு வந்து 'சுர்ர்ர்ர்ர்'னு ஒரு உறி உறிஞ்சோம்னு வைங்க தேவாமிர்தத்துக்கு போட்டியா இருக்கும். இன்னும் முடியல; அந்த சதைப்பத்தெல்லாம் வழிச்சிட்டு ஒரு ஓரமா முருங்கைகாய் தொலி கிடக்கு பார்த்தீங்களா, அத எல்லாம் ஒண்ணு சேர்க்கணும், சேர்த்து அப்படி வாய்க்குள்ள தள்ளி நல்ல அரவை மெஷின்ல கொடுத்த மாதிரி அரைக்கும்போது அதுல உள்ள தேனெல்லாம்(புளிக்கொழம்பு சாறு) அப்படி இன்ச் இன்ச்சா உள்ள இறங்கும். எல்லாத்தயும் முடிச்சுட்டு கடைசியா விரலோட இண்டு இடுக்குல ஒட்டிட்டு இருக்குற அந்த வெண்ணைய நுனி நாக்குல ஒரு சுழட்டு சுழட்டவும் ஏப்பம் வரவும் சரியா இருக்கும். உடனே எந்திக்காம ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எந்திச்சோம்னா அப்படி சொர்க்கத்துக்கு போயிட்டு வந்த பீலிங்!!!!
.
தோழிகள் என்ன சாப்ட்டனு கேட்டா தயிர் சாதம் புளிக்கொழம்புனு சொல்ல ஒரு நாளும் நான் தயங்கியதே இல்லை.
-பஞ்சகல்யாணி
30-05-2016


Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா