அழகப்பன் என்னும் நான்


அழகப்பன் என்னும் நான்


அகமதாபாத் டிரெயினிங் முடியும் தருவாயில் ஒரு மலையாளத்து ஓமணா தோழியாக அறிமுகமானாள். டிரெயினிங் முடிந்து பணியிடம் போடும்போது அவளுடன் சேர்த்து (எனக்கும்) ஒரு நான்கு பேருக்கு சென்னை கிடைத்தது. சேரநாட்டு நண்பனொருவன் அவளை எனக்கு அறிமுகப்படுத்தி கீழ்கண்டவாறு பறைந்தான் "இவளுக்கும் சென்னைதான் போட்ருக்காங்க, பாத்துக்கடா. அவளுக்கு அங்க யாரையும் தெரியாது". 
எதற்கும் தேவைப்படுமே என்று பரஸ்பரம் கைப்பேசி 📱எண்களை பரிமாறிக்கொண்டோம். 
அந்த பெண் என்னிடம் விதித்த முதல் நிபந்தனையே, அவளுக்கு நான் தமிழ் கற்றுத்தர வேண்டும் என்பதுதான். 
சென்னை வந்தாயிற்று. 
*
ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில்,
உன் பேர நான் என்னனு சேவ் செய்து வச்சுருக்கு தெரியுமா??
என்னனு?
அழகப்பன்!
அழகப்பனோ??
ஆமா, அழகப்பன்தான்.
ஏன் இந்த பேரு?
தமிழ்ல எனக்கு இந்த பேரு மேல சால சால இஷ்டம், அதான்.
சரி, இந்த பேருக்கு மீனிங் தெரியுமா??
ஓ.. அறியும்!!
எந்தா அறியும்??
அழகப்பன் என்றால் "Beautiful boy" என்ற அர்த்தமாக்கும்.
அப்பறம் ஏன் அந்தா பேர எனக்கு வச்சிருக்க??
அதெல்லாம் அறியில்லா, நீ அழகப்பன்தான்!!
- பஞ்சகல்யாணி
28-04-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்